அந்தீசு மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆண்டீய மலைத்தொடர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்ஜெண்டீனாவுக்கும், சிலி நாட்டுக்கும் இடையில் உள்ள ஆண்டீய மலைத்தொடரின் தோற்றம்.
Cono de Arita, Salta. (Argentina).jpg

அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.

தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள அந்தீசு மலைத்தொடர்

ஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா[1](Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.

லிக்கான்கபூர், பொலிவியா/சிலி

அந்தீசு மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

மலைப்பிறப்பு[தொகு]

அந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்ன்மெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும்.

காலநிலை[தொகு]

அந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன.

தாவரங்களும் விலங்குகளும்[தொகு]

இம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும்.

அர்ஜென்டினா-சிலி நாடுகளில் உள்ள மலை முகடுகள்[தொகு]

பொலிவியா நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

பொலிவியா-சிலி நாடுகளின் எல்லையில் உள்ள மலை முகடுகள்[தொகு]

சிலி நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

கொலம்பியா நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

ஈக்குவடோர் நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

பெரு நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

வெனிசுவேலா நாட்டில் உள்ள மலை முகடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. கோர்டில்லேரா (Cordillera) என்பது இணையாகத்தொடரும் மலையடுக்கத்தைக் குறிக்கும் சொல்
  2. செர்ரோ (Cerro) என்னும் சொல் எசுப்பானிய மொழியில் மலை என்னும் பொருள் தருவது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தீசு_மலைத்தொடர்&oldid=2113249" இருந்து மீள்விக்கப்பட்டது