உள்ளடக்கத்துக்குச் செல்

பரவலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரவலாக்கம் அல்லது பல்முனைப்படுத்தல் என்பது முடிவு செய்தலை ஒர் அதிகார மையத்தில் குவியப்படுத்தாமல், ஒரு நிறுவனத்தின் பல முனைகளில் செயற்படுத்தல் ஆகும். பல சூழ்நிலைகளில் பரவலாக்கம் என்ற கருத்துரு பயன்படுகிறது. அரசியல், வணிக நிறுவன நிர்வாகம், எதிர்ப்புப் போராட்ட ஒழுங்கமைப்பு, நுட்ப ஒருங்கியங்கள் என பல இடங்களில் பரவலாக்கம் பயன்படுகிறது. பரவலாக்கத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இணையம் ஆகும். இணையம் ஒரு சில கணினிகள் செயலிழந்தாலும், தொடர்ந்து செயற்படும் வண்ணம் பரவலாக்கி கட்டமைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவலாக்கம்&oldid=1930177" இலிருந்து மீள்விக்கப்பட்டது