வெனிசுவேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெனீசூலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bolivarian Republic of Venezuela
வெனிசுவேலா
República Bolivariana de Venezuela
கொடி சின்னம்
குறிக்கோள்: Dios y Federacion  
கடவுளும் கூட்டாட்சியும்
நாட்டுப்பண்: Gloria al Bravo Pueblo  
வீரமுள்ள மக்களுக்கு புகழ்
தலைநகரம் கராகஸ்
10°30′N 66°58′W / 10.500°N 66.967°W / 10.500; -66.967
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் வெனிசுவேலர்
அரசாங்கம் சனாதிபதிக் குடியரசு
 •  சனாதிபதி நிக்கோலசு மதுரோ
விடுதலை
 •  ஸ்பெயினிடம் இருந்து ஜூலை 5, 1811 
 •  கிரான் கொலம்பியாவிடம் இருந்து ஜனவரி 13, 1830 
 •  அங்கீகாரம் மார்ச் 30, 1845 
பரப்பு
 •  மொத்தம் 9,16,445 km2 (33வது)
3,53,841 sq mi
 •  நீர் (%) 0.32
மக்கள் தொகை
 •  பெப்ரவரி 2008 கணக்கெடுப்பு 28,199,822 (40வது)
 •  2001 கணக்கெடுப்பு 23,054,210
 •  அடர்த்தி 30.2/km2 (173வது)
77/sq mi
மொ.உ.உ (PPP) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $335 பில்லியன் (30வது)
 •  தலைவிகிதம் $12,800 (63வது)
Gini (2000) 44.1
medium
HDI (2007) 0.792
Error: Invalid HDI value · 74வது
நாணயம் வெலெசுவேலாவின் பொலிவார் (VEF)
நேர வலயம் UTC-4
அழைப்புக்குறி 58
இணையக் குறி .ve

வெனிசுவேலா (Venezuela, எசுப்பானியம்: beneˈswela), தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள நாடாகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" (Bolivarian Republic of Venezuela) என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார்.

புவியியல் [தொகு][தொகு]

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி

வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்த பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும்.

பைக்கோ பொலிவார் , 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயரமான மலை ஆகும், இந்த பகுதியில் அமைந்துள்ளது. வெனிசுலா மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானாவை எல்லைகளாக கொண்டுள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, குறக்ககோ, அருபா, மற்றும் லீவார்ட் அண்டிலிசு போன்ற கரீபியன் தீவுகள் வெனிசுலா வட கடற்கரையின் அருகில் அமைந்திருக்கிறது.

வெனிசுலா கயானாவுடனும்(முன்னர் ஐக்கிய ராஜ்யம்) எஸ்கிபோ என்ற இடத்தில் நிலப்பகுதி மோதல்களை கொண்டுள்ளது. வெனிசுலா கொலம்பியாவுடன் வெனிசுலா வளைகுடா குறித்த மோதல்களை கொண்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், மற்றும் பிற கனிமங்கள் உள்ளன.உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் வெனிசுலாவில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெனிசுவேலா&oldid=2059066" இருந்து மீள்விக்கப்பட்டது