அரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசுத் தலைவர் (Head of government) என்பவர் ஒரு நாட்டு அரசின் செயலாட்சிப் பிரிவின் தலைமை அதிகாரி ஆவார். நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். நாட்டுத் தலைவர் அரசராகவோ குடியரசுத் தலைவராகவோ இருப்பார். அரசின் தலைவராக பிரதமர் இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுத்_தலைவர்&oldid=2226249" இருந்து மீள்விக்கப்பட்டது