உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலாஃப் சோல்த்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலாஃப் சோல்த்சு
Olaf Scholz
செப்டம்பர் 2021 இல் சோல்த்சு
செருமனியின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2021
குடியரசுத் தலைவர்பிராங் வால்டர் சென்மர்
துணை அரசுத்தலைவர்இராபர்ட்டு ஆபெக்
முன்னையவர்அங்கெலா மேர்க்கெல்
செருமனியின் துணை அரசுத்தலைவர்
பதவியில்
14 மார்ச் 2018 – 8 திசம்பர் 2021
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்சிக்மார் கேப்ரியல்
பின்னவர்இராபர்ட்டு ஆபெக்
நிதி அமைச்சர்
பதவியில்
14 மார்ச் 2018 – 8 திசம்பர் 2021
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்ஊல்ஃப்காங் சாபில்
பின்னவர்கிறித்தியான் லின்ட்னர்
ஆம்பர்கு மாநில முதல்வர்
பதவியில்
7 மார்ச் 2011 – 13 மார்ச் 2018
அரசியல் பதவிகள்
2001–2009
தொழில், சமூகத் துறைகள் அமைச்சர்
பதவியில்
21 நவம்பர் 2007 – 27 அக்டோபர் 2009
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
சமூக சனநாயகக் கட்சியின் தலைமைக் கொறடா
பதவியில்
13 அக்டோபர் 2005 – 21 நவம்பர் 2007
தலைவர்பீட்டர் இசுட்ரக்
சமூக சனநாயகக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
20 அக்டோபர் 2002 – 21 மார்ச் 2004
நாடாளுமன்றத் தொகுதிகள்
தலைவர்கெர்ஃகாத் சுரோடர்
போட்சுடாம் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 அக்டோபர் 2021
ஆம்பர்கு அல்ட்டோனா தொகுதிக்கான
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 அக்டோபர் 2002 – 11 மார்ச் 2011
பதவியில்
26 அக்டோபர் 1998 – 6 சூன் 2001
ஆம்பர்கு அல்ட்டோனா தொகுதிக்கான
ஆம்பர்கு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2 மார்ச் 2015 – 2 மார்ச் 2015
பதவியில்
7 மார்ச் 2011 – 7 மார்ச் 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1958 (1958-06-14) (அகவை 66)
ஒசுனாபுருக், மேற்கு செருமனி
அரசியல் கட்சிசமூக சனநாயகக் கட்சி
துணைவர்பிரிட்டா எர்னெசுட்டு (தி. 1998)
வாழிடம்போட்சுடாம்
முன்னாள் கல்லூரிஹம்பர்கு பல்கலைக்கழகம்
வேலை
  • அரசியல்வாதி
  • வழக்கறிஞர்
கையெழுத்து
இணையத்தளம்olaf-scholz.spd.de இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

ஒலாஃப் சோல்த்சு (Olaf Scholz; இடாய்ச்சு: [ˈoːlaf ˈʃɔlts]  ( கேட்க); பிறப்பு: 14 சூன் 1958) செருமானிய அரசியல்வாதியும், 2021 திசம்பர் 8 முதல் செருமானிய அரசுத்தலைவரும் ஆவார். சமூக சனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவர் முன்னதாக அங்கெலா மேர்க்கெலின் அரசில் துணை அரசுத்தலைவராகவும், நிதி அமைச்சராகவும் 2018 முதல் 2021 வரை பணியாற்றியிருந்தார். இவர் 2011 முதல் 2018 வரை ஆம்பர்கு மாநில முதல்வராகவும் 2009 முதல் 2019 வரை சமூக சனநாயகக் கட்சியின் த்ணைத் தலைவராகவும் பதவியில் இருந்தார். 2021 இல் இவர் சமூக சனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, சுயாதீன சனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் ஆட்சி அமைத்தார்.

சோல்த்சு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தில் திறமை பெற்ற வழக்கறிஞர்.[1] இவர் 1970-களில் சமூக சனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.[2] 1998 முதல் 2011 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] 2002 இல் கட்சிப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, 2001 இல் ஆம்பர்கு அரசில் பணியாற்றினார். அரசுத்தலைவர் கெர்ஃகாத் சுரோடரின் அரசில் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் 2007 இல் மேர்க்கெல் அரசில் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2009 தேர்தலை அடுத்து சமூக சனநாயகக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, இவர் ஆம்பர்கில் கட்சித் தலைவராகவும், பின்னர் பின்னர் கட்சியின் துணைத் தலைவராகவும் ஆனார். 2011 ஆம்பர்க் மாநிலத் தேர்தலில் அவர் தனது கட்சியை வெற்றியடையச் செய்து, 2018 வரை மாநில முதல்வராகப் பணியாற்றினார்.[4]

2018 இல் இவரது கட்சி நான்காவது மேர்க்கெல் அரசாங்கத்தில் நுழைந்த பிறகு, சோல்த்சு நிதி அமைச்சராகவும், செருமனியின் துணை அரசுத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[5] 2020-இல், 2021 கூட்டாட்சித் தேர்தலுக்கான அரசுத்தலைவர் வேட்பாளராகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டார்.[6] இவரது கட்சி நாடாளுமன்றத்தில் 206 இடங்களை (25.8%) வென்று,[7] பசுமைவாதிகளுடனும் சுயாதீன சனநாயகக் கட்சியுடனும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது.[8] 2021 திசம்பர் 8 அன்று, இவர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chazan, Guy (9 February 2018). "Olaf Scholz, a sound guardian for Germany's finances" இம் மூலத்தில் இருந்து 26 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210826204338/https://www.ft.com/content/170b9d0a-0cc2-11e8-8eb7-42f857ea9f09. 
  2. Cliffe, Jeremy (3 September 2021). "How Olaf Scholz and the SPD could lead Germany's next government". New Statesman இம் மூலத்தில் இருந்து 24 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210924175225/https://www.newstatesman.com/german-election-2021/2021/09/how-olaf-scholz-and-the-spd-could-lead-germanys-next-government. 
  3. "Olaf Scholz, MdB". SPD-Bundestagsfraktion (in ஜெர்மன்). 18 April 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  4. "Scholz legt Bundestagsmandat nieder". March 10, 2011 இம் மூலத்தில் இருந்து 2013-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131218185807/http://www.ndr.de/regional/hamburg/scholz309.html. 
  5. NDR. "Nachrichten aus Hamburg". www.ndr.de. Archived from the original on 19 July 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
  6. Erika Solomon (10 August 2020), German Social Democrats pick Olaf Scholz to run for chancellor பரணிடப்பட்டது 24 மே 2021 at the வந்தவழி இயந்திரம் பைனான்சியல் டைம்ஸ்.
  7. Frederik Pleitgen, Salma Abdelaziz, Nadine Schmidt, Stephanie Halasz and Laura Smith-Spark. "SPD wins most seats in Germany's landmark election, preliminary official results show". CNN. Archived from the original on 27 September 2021. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. "Die Ampel kann kommen: SPD, FDP und Grüne empfehlen Koalitionsgespräche" (in de). Der Spiegel. 15 October 2021 இம் மூலத்தில் இருந்து 15 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211015143513/https://www.spiegel.de/politik/deutschland/spd-fdp-und-gruene-empfehlen-koalitionsgespraeche-a-e8617bfc-869f-4dc6-9a31-b295589a17b0. 
  9. Apetz, Andreas (24 November 2021). "Ampel-Koalition: So sieht der Fahrplan nach dem Koalitionsvertrag aus". Frankfurter Rundschau (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலாஃப்_சோல்த்சு&oldid=3931163" இலிருந்து மீள்விக்கப்பட்டது