ஜார்ஜியா மெலோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜியா மெலோனி
2023 இல் ஜார்ஜியா மெலோனி
ஜார்ஜியா மெலோனி
இத்தாலியின் பிரதம அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2022
குடியரசுத் தலைவர்செர்ஜியோ மாட்டரேல்லா
முன்னையவர்மரியோ திராகி
இத்தாலியின் சகோதரர்கள் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2014
ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 செப்டம்பர் 2020
இத்தாலிய அரசின் இளைஞர் துறை அமைச்சர்
பதவியில்
8 மே 2008 – 16 நவம்பர் 2011
பிரதமர்சில்வியோ பெர்லுஸ்கோனி
இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 ஏப்ரல் 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1977 (1977-01-15) (அகவை 47)
உரோம், Lazio, Italy
உள்ளூர்த் துணைஆண்டுரூசு ஜியாம்புருனோ (2015–2023)
பிள்ளைகள்1
கையெழுத்து
இணையத்தளம்

ஜார்ஜியா மெலோனிGiorgia Meloni ; ஜனவரி 15, 1977 இல் பிறந்தவர்[1][2] ஓர் இத்தாலிய அரசியல்வாதி ஆவார். இவர் அக்டோபர் 2022 முதல் இத்தாலியின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவரே ஆவார். 2006 ஆம் ஆண்டு முதல் இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினரான[3][4] இவர் 2014 முதல் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை வழிநடத்தி வருகிறார்.[5] மேலும் இவர் 2020 முதல் ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

1992 இல், மெலோனி இத்தாலிய பாசிசத்தை முன்னர் பின்பற்றியவர்களால்[1] 1946 இல் நிறுவப்பட்ட நவ-பாசிச அரசியல் கட்சியான இத்தாலிய சமூக இயக்கத்தின் இளைஞர் படையில் சேர்ந்தார்.[6] பின்னர் இவர் 1995 இல் அதன் சட்டப்பூர்வ வாரிசாக மாறி தேசிய பழமைவாதத்தை நோக்கி நகர்ந்த ஒரு பிந்தைய பாசிசக் கட்சியான தேசியக் கூட்டணியின் மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவரானார்.[7] இவர் 1998 முதல் 2002 வரை உரோம் மாகாணத்தின் அவை உறுப்பினராக இருந்தார்.[8][9]

ஆட்சிக்கு வருதல்[தொகு]

அதன் பிறகு இவர் தேசியக் கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரானார்.[10] 2008 இல், அவர் நான்காவது பெர்லுஸ்கோனி அரசாங்கத்தில் இத்தாலிய இளைஞர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11][12] இவர் 2014 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 உரோம் நகராட்சித் தேர்தல்களில் தோல்வியுற்றார். 2018 இத்தாலிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இவர் 18 வது இத்தாலிய சட்டமன்றத்தின் போது எதிர்க்கட்சியை வழிநடத்தினார். கருத்துக் கணிப்புகளில் இவரது கட்சியின் பிரபலம் அதிகரித்தது. குறிப்பாக 2020 இத்தாலியில் கொரோனா வைரசு தொற்றுநோயை நிர்வகித்த திராகியின் அமைச்சரவை கட்டுப்படுத்த முடியாமல் போன்போது இவர் எதிர்க் கட்சியாக இருந்து தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் மூலம் நோய் தொற்றை நிர்வகித்தார். 2022 இல் இத்தாலிய ஏற்பட்ட அரசாங்க நெருக்கடியில் திராகி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தோல்வியைத் தொடர்ந்து நடைபெற்ற 2022 இத்தாலிய பொதுத் தேர்தலில் இவரது இத்தாலியின் சகோதரர்கள் கட்சி வெற்றி பெற்றது .

அரசியல் நிலைப்பாடு[தொகு]

ஒரு வலதுசாரி ஜனரஞ்சகவாதி மற்றும் தேசியவாதியாக, இவரது அரசியல் நிலைப்பாடுகள் தீவிர வலதுசாரிகளாக விவரிக்கப்பட்டுள்ளன.[13][14][15] இவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் ஒரு பழமைவாதி என்றும் கூறிக்கொள்கிறார்.[16][17][18] இவர் வதையா இறப்பு, ஒருபால் திருமணம் மற்றும்வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்டவர்களுக்கு எதிரானவர். தனிக் குடும்பங்கள் பிரத்தியேகமாக ஆண்-பெண் ஆகிய இருவரால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறுகிறார்.[19][20][21]

பெண்ணியம்[தொகு]

இவரது சொற்பொழிவில் பெண்ணியவாத சொல்லாட்சி மற்றும் உலகமயம் பற்றிய விமர்சனம் அதிகம் இடம் பெறுகிறது.[22] மெலோனி குடியேற்றத்தை நிறுத்த கடற்படை முற்றுகையை ஆதரிக்கிறார்.[23] மேலும் இவர் இனவெறி மற்றும் இஸ்லாமோபோபியா என்றும் குற்றம் சாட்டப்பட்டார். நேட்டோவின் ஆதரவாளரான இவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு பற்றிய விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிலைப்பாடைக் கொண்டுள்ளார். மேலும் 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்கு முன்பு உருசியாவுடன் சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்தார், அதன் பிறகு இவர் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக உறுதியளித்தார். முசோலினியின் இத்தாலிய சமூகக் குடியரசின் அமைச்சரவைத் தலைவரான ஜியோர்ஜியோ அல்மிரான்டேவை 2020 இல் பாராட்டியது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை மெலோனி வெளிப்படுத்தினார். அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸின் 2023 ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் மெலோனி நான்காவது இடத்தைப் பிடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pietromarchi, Virginia (19 September 2022). "Who is Italy's leadership hopeful Giorgia Meloni?". Al Jazeera இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920090612/https://www.aljazeera.com/news/2022/9/19/who-is-italys-leadership-hopeful-giorgia-meloni. 
  2. "Biografia del ministro Giorgia Meloni" [Biography of Minister Giorgia Meloni] (in இத்தாலியன்). Chigi Palace. November 2011. Archived from the original on 31 March 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  3. "Giorgia Meloni, il racconto della stampa spagnola sul padre (che la abbandonò da piccola): 'Fu condannato per traffico di droga'" (in it). Il Fatto Quotidiano. 28 September 2022 இம் மூலத்தில் இருந்து 1 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221001152047/https://www.ilfattoquotidiano.it/2022/09/28/giorgia-meloni-il-racconto-della-stampa-spagnola-sul-padre-che-la-abbandono-da-piccola-fu-condannato-per-traffico-di-droga/6821134/. 
  4. Pistilli, Clemente (29 September 2022). "Il padre di Giorgia Meloni fu condannato per narcotraffico, il racconto della stampa spagnola" (in it). La Repubblica இம் மூலத்தில் இருந்து 1 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221001192003/https://roma.repubblica.it/cronaca/2022/09/29/news/giorgia_meloni_narcotraffico_spagna-367863619/. 
  5. "E' Fabio Rampelli il nuovo Capogruppo di Fratelli d'Italia – Alleanza Nazionale" [Fabio Rampelli is the new Group Leader of Brothers of Italy – National Alliance]. Fratelli d'Italia (in இத்தாலியன்). 17 June 104. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  6. Fontana, Simone (28 July 2022). "Da dove arriva Giorgia Meloni, l'ultima fiamma della destra" [Where does Giorgia Meloni, the last flame of the right, come from]. laRegione Ticino (in இத்தாலியன்). Archived from the original on 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  7. Giuffrida, Angela (17 September 2022). "God, family, fatherland – how Giorgia Meloni has taken Italy's far right to the brink of power". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 19 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220919113102/https://www.theguardian.com/world/2022/sep/17/giorgia-meloni-brothers-of-italy-leader-far-right-elections-alliance-. 
  8. "Meloni, da barman a tata... a ministro: 'Ho fatto tutti i lavori e ne sono fiera'" (in it). Blitz Quotidiano. 17 April 2020 இம் மூலத்தில் இருந்து 22 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210422135929/https://www.blitzquotidiano.it/politica-italiana/meloni-barman-tata-ministro-ho-fatto-tutti-lavori-vado-fiera-1450587/. 
  9. Guerzoni, Monica (17 January 2013). "Giorgia Meloni: 'Io militante ventenne e i Lego con la figlia di Fiorello'" (in it). Corriere della Sera இம் மூலத்தில் இருந்து 31 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210331123122/https://www.corriere.it/politica/13_gennaio_17/meloni-fiorello-politica-guerzoni_7ddfc190-607a-11e2-bd7d-debf946ea0b6.shtml. 
  10. "Meloni: Italy's far-right 'Christian mother' on brink of power". France 24. Agence France-Presse. 21 September 2022. Archived from the original on 25 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  11. Naím, Moisés (19 September 2022). "Who is Giorgia Meloni?". El País. Archived from the original on 19 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  12. "Giorgia Meloni" (in it). Il Sole 24 Ore. 8 February 2013 இம் மூலத்தில் இருந்து 26 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171226160946/http://argomenti.ilsole24ore.com/giorgia-meloni.html. 
  13. Harlan, Chico; Pitrelli, Stefano (13 September 2022). "A far-right politician is poised to become Italy's first female leader". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 14 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220914234106/https://www.washingtonpost.com/world/2022/09/13/giorgia-meloni-italy-election-right/. 
  14. Khrebtan-Hörhager, Julia; Pyatovskaya, Evgeniya (19 September 2022). "Giorgia Meloni – the political provocateur set to become Italy's first far-right leader since Mussolini". The Conversation. Archived from the original on 1 October 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  15. Taube, Friedel (30 August 2018). "Women increasingly drawn to right-wing populist parties, study shows". Deutsche Welle. https://www.dw.com/en/women-increasingly-drawn-to-right-wing-populist-parties-study-shows/a-45284465. 
  16. Tharoor, Ishaan (27 September 2022). "Italy's Meloni: The mainstreaming of the West's far right is complete". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 27 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220927225054/https://www.washingtonpost.com/world/2022/09/27/mainstreaming-wests-far-right-is-complete/. 
  17. Farrell, Nicholas (27 September 2022). "It is absurd to call Giorgia Meloni 'far right'". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 27 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220927135626/https://www.telegraph.co.uk/news/2022/09/27/absurd-call-giorgia-meloni-far-right/. 
  18. Horowitz, Jason (24 September 2022). "Italian Voters Appear Ready to Turn a Page for Europe". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 26 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220926054719/https://www.nytimes.com/2022/09/24/world/europe/italy-election-fascism-meloni.html. 
  19. Roberts, Hannah (2 September 2022). "Will Italy's first female prime minister be bad for women?". Politico இம் மூலத்தில் இருந்து 30 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220930122807/https://www.politico.eu/article/italy-first-woman-prime-minister-giorgia-meloni-mario-draghi-brothers-abortion-feminist-levante-chiara-ferragni-elodie/. 
  20. Pianigini, Gaia; Povoledo, Elisabetta (23 September 2022). "Giorgia Meloni Could Be the First Woman to Lead Italy. Not All Women Are Happy.". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 30 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220930121526/https://www.nytimes.com/2022/09/23/world/europe/giorgia-meloni-italy-women.html. 
  21. Giuffrida, Angela (29 September 2022). "Italy's Giorgia Meloni denies she is anti-women as credentials questioned". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 30 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220930102516/http://www.theguardian.com/world/2022/sep/29/giorgia-meloni-italian-women-abortion-pink-quotas. 
  22. Arfini, Elia; Ghigi, Rossella; Magaraggia, Sveva (2019). "Can feminism be right? A content analysis of discourses about women by female Italian right-wing politicians". Rassegna Italiana di Sociologia (4/2019): 693–719. doi:10.1423/96112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0486-0349. https://air.unimi.it/retrieve/handle/2434/772998/1586260/A12Can%20feminism%20be%20right_OPEN.pdf. பார்த்த நாள்: 4 October 2022. 
  23. "L'Ossessione xenofoba di Meloni: 'Il governo non si occupa dell'Italia ma favorisce i clandestini'" [Meloni's xenophobic obsession: 'The government doesn't take care of Italy but favours illegal immigrants']. Globalist (in இத்தாலியன்). 4 December 2020. Archived from the original on 3 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜியா_மெலோனி&oldid=3898550" இலிருந்து மீள்விக்கப்பட்டது