ஒருபால் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
  தகவல் இல்லாத நாடுகள்
ஓரினச்சேர்க்கை - சார்பு சட்டம் இயற்றிய நாடுகள்
  ஒரு பால் திருமணம்1
  வேறு வகையான இணைவுகள் (பதிவுசெய்யாமல் சேர்ந்து வாழுதல்)
  வெளிநாட்டு ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பு
  ஒரு பால் தம்பதிகளுக்கு அங்கீகாரம் இல்லை
ஓரினச்சேர்க்கை - எதிர்மறை சட்டம் இயற்றிய நாடுகள்
  குறைந்த பட்ச தண்டனை
  அதிக பட்ச தண்டனை
  ஆயுள் தண்டனை
  மரண தண்டனை

1 New Hampshire (USA) effective 1 January 2010

ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கு நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. கனடா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், சுவீடன், எசுப்பானியா, தென் ஆபிரிக்கா நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதித்துள்ளன.

ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது. மாறிவரும் இன்றைய சமூகத்தில் மனிதனின் தேவைகளும் சவால்களும்கூட பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுவது, தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வது என்று இதற்குப் பல உள்நோக்கங்கள் இருக்கும்.[1]

"ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’"[2]
——அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

சில முக்கிய நிகழ்வுகள்:

  • 2004 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நெவ்சம் (Gavin Newsom) முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு லெஸ்பியன் தம்பதிக்கு திருமண உரிமத்தை வழங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை. சட்டப்படி ஒரு பால் ஈர்ப்புடையோர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.
  • நியூ யார்க்கில் நிகழ்ந்த ஸ்டோன்வால் கிளர்ச்சிதான் (Stonewall riots) உலகில் முதல் முதலாக ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி. ஜூன் 28, 1969 அன்று ஸ்டோன்வால் விடுதியில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, அவர்கள் வெகுண்டு எழுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு அலையலையாகப் பரவி உலக கவனத்தை ஈர்த்தது.
  • ஒருபால் ஈர்ப்புடையோர் சமூகத்திலிருந்து முதல் முறை வெளிப்படையாக அமெரிக்க அரசியலில் உயர் பதவி வகித்தவர் ஹார்வே மில்க். சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் நகர மேற்பார்வையாளராக இவர் பணியாற்றினார். ஒரு பால் ஈர்ப்புடையோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஓர் அரசாணையை பிரகடனப்படுத்தினார்.
  • ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக 1978ல் சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்த பிரம்மாண்டமான திருவிழாவில் முதல் முறையாக 2,50,000 பேர் கலந்து கொண்டனர்.
  • பாலியல் ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் சட்டங்களை 21 அமெரிக்க மாகாணங்களும், பாலின ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும்

சட்டங்களை வாஷிங்டன் உள்ளிட்ட 16 மாகாணங் களும் நிறைவேற்றியுள்ளன. வாஷிங்டன் உள்ளிட்ட 6 மாகாணங்களில் ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பட்டுள்ளன.

  • 1982ல் அமெரிக்க மாகாணமான விஸ்கான்சினில் முதல் முறையாக பாலியல் ரீதியான பாகுபாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1984ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்கலி நகரத்தில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெர்மோன்ட் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.[3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.aazham.in/?p=1240
  2. http://www.aazham.in/?p=1240
  3. http://www.aazham.in/?p=1240Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம் (Gender)
பாலின அடையாளம் (Gender identity)
பாலியல் நாட்டம்/அமைவு (Sexual orientation)
பாலியல் அடையாளம் (Sexual identity)
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
அகனள்
அகனன்
அகனள், அகனன், ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
ஸ்ருஷ்டி மதுரை
சினேகிதன் (அமைப்பு)
ஓரினம்.நெட்
சகோதரி (அமைப்பு)
நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
அஞ்சலி கோபாலன்
பிரித்திகா யாசினி
இப்படிக்கு ரோஸ்
லிவிங் ஸ்மைல் வித்யா
ரோஸ் வெங்கடேசன்
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருபால்_திருமணம்&oldid=1941349" இருந்து மீள்விக்கப்பட்டது