பாலியல் நாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியல் நாட்டம் (sexual orientation) என்பது ஒருவர் யாருடன் நீடித்த உணர்வுபூர்வமான, காதல் வயப்பட்ட மற்றும்/அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. இது ஒருவரின் அடையாளம், நடத்தைகள், சமூக உறுப்பாண்மையுடனும் தொடர்புடையது.[1] பாலியல் நாட்டம் என்பது பல்வேறு பாலின அடையாளங்களோடு ஒரு தொடர்மத்தில் அமைகிறது. பொதுவாக எதிர்பால் நாட்டம், தற்பால் நாட்டம், இருபால் நாட்டம், நாட்டம் தொடர்பாக தெளிவற்ற நிலை, நாட்டம் இன்மை என்று வகைப்படுத்தப்பட்டு கருத்தாடப்படுகின்றன. செய்சுவல் ஓறியன்ரேசன் (Sexual orientation) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் பாலியல் ஒருங்கிணைவு அல்லது பாலியல்பு என்றும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sexual orientation and homosexuality

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_நாட்டம்&oldid=3220650" இலிருந்து மீள்விக்கப்பட்டது