மெக்சிக்கோ நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெக்சிகோ நகரம்
Ciudad de México
மெக்சிகோ நகரம்-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
Nickname(s): Ciudad de los Palacios (அரண்மனை நகரம்)
மெக்சிகோ நகரம் அமைந்த இடம்
மெக்சிகோ நகரம் அமைந்த இடம்
ஆள்கூறுகள்: 19°24′N 99°7′W / 19.400°N 99.117°W / 19.400; -99.117
நாடு  மெக்சிகோ
கூட்டாட்சி பிரிவு கூட்டாட்சி மாவட்டம்
தோற்றம் c.மார்ச் 18, 1325
(டெனோக்டிட்லான் என்று)
புது ஸ்பெயினின் நகரம் 1524
கூட்டாட்சி மாவட்டம் 1824
ஆட்சி
 • வகை குடியரசு
 • ஆட்சி தலைவர் மார்செலோ எப்ரார்ட் (PRD)
பரப்பு1
 • City 1,479
Elevation 2,240
மக்கள் (2010)
 • நகர் 8
 • அடர்த்தி 5,741
 • பெருநகர் பகுதி 1,92,31,829
நேர வலயம் நடு (ஒசநே-6)
 • கோடை (ப.சே.நே.) நடு (ஒசநே-5)
இணையத்தளம் http://www.df.gob.mx
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை

மெக்சிகோ நகரம் மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்[1]. முதல் இடத்தில் யப்பானின் டோக்கயோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளன. மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்சி அரசு அமைப்பாக உள்ளது. மெக்சிக்கோ நகரம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் அதன் மிக முக்கியமான, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் நிதி மையமாக திகழ்கிறது.

வட அமெரிக்காவில் மிக முக்கியமான நிதி மையங்களில் ஒன்றாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ள உயர் பீடபூமியின் 2.240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த மக்கட்தொகையானது 8.84 மில்லியன்(2009 ஆண்டு கணக்குப்படி) ஆகும்.

2011 இல் $ 411 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூலம் மெக்சிக்கோ நகரம் உலகின் பணக்கார பெருநகர பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரம் மெக்சிக்கோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% மற்றும் பெருநகர பகுதிகளுக்கான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 34% பங்கும் வகிக்கின்றது.

வரலாறு[தொகு]

டக்ஸ்கோ நகரம்
1628ல் மெக்சிகோ நகரம்

இசுப்பானியர்கள் மெக்சிகோ நகரை உருவாக்கும் முன்னர் இந்நிலத்தின் அஸ்டெக் அமெரிக்கப் பழங்குடியினரின் பேரரசு இருந்தது. இந்நகரம் 1521 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உண்மையில் இந்நகரம் ஒரு ஏரியின் மீது கட்டப்பட்டதாகும்.

  • 1325 ல் அஸ்டெக்குகளால் முற்றுகையில் அழிக்கப்பட்ட டக்ஸ்கோ நகரின் ஏரியின் ஒரு தீவில் கட்டப்பட்டது.
  • 1521 ஸ்பானிஷ் நகர்ப்புறத் தரத்திற்கு ஏற்ப மீள்கட்டுமானம் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
  • 1524 ல், மெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சிகோ நகராட்சி நிறுவப்பட்டது.
  • 1585 அது அதிகாரப்பூர்வமாக கியுடட் டி மெக்சிகோ (மெக்சிக்கோ நகரம்) என அழைக்கப்பட்டது. மெக்சிக்கோ நகரம், ஸ்பானிய காலனித்துவ பேரரசின் அரசியல் நிர்வாக மற்றும் நிதி மையத்தில் முக்கிய பங்கு வகித்தது.
  • 1824 ல் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1997 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் நேரடியாக அரச தலைமையை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது. அண்மைய ஆண்டுகளில் உள்ளூர் அரசு தாராளவாத கொள்கைகளால் கருக்கலைப்பு கருணைக்கொலை, விவாகரத்து மற்றும் ஒரே பாலின திருமணம் போன்றவை அனுமதிக்கப்பட்டது.

நிலவியல் அமைப்பு[தொகு]

மெக்சிக்கோ நகரம் மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு மத்திய தெற்கு மெக்சிக்கோ உயர் பீடபூமியில் மெக்சிகன் கண்ட எரிமலை பகுதியின் மீது அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் (7,217 அடி) உயரத்தில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் இயற்கை வடிகால்கள் ஏதும் இல்லாததால் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கால்வாய்கள் மற்றும் சுரங்கங்கள் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நில அதிர்வுகள் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நகரம் மழைக் காலங்களில், வெள்ளம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரச்சினைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
Geophysical maps of the Federal District
MX-DF-Relieve.png MX-DF-hidro.png MX-DF-clima.png
Topography Hydrology Climate patterns

காலநிலை[தொகு]

மெக்சிக்கோ நகரத்தில் அதன் வெப்ப மண்டல அமைவிடம் மற்றும் அதிக உயரம் காரணமாக ஒரு மிதவெப்ப மண்டல உயர்நில காலநிலை உள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலை பெருநகரின் உயரத்தினை பொறுத்து 12 முதல் 16 டிகிரி செல்சியஸ்( 54-61 °F ) வரை மாறுபடுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தின் போது குறைந்தபட்ச வெப்பநிலை -2 °C இலிருந்து -5 °C( 28 முதல் 23 டிகிரி பாரன்ஹீட் ) வரை உள்ளது. மேலும் வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 °C இருந்து 33.9 °C வரை பதிவு செய்யப்படுகிறது. மேலும் வருடாந்திர மழை 820 மில்லி மீட்டர் ஆகும்.

அடையாள சின்னங்கள்[தொகு]

மெக்சிக்கோ நகரின் வரலாற்று மையம் மற்றும் தெற்குப் பெருநகரில் உள்ள சொஷிமில்கோ என்ற "மிதக்கும் தோட்டங்கள்" யுனெஸ்கோ மூலம் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்று மையமான புகழ்பெற்ற அடையாளங்களான ஸ்பானிஷ் சகாப்த பெருநகர கதீட்ரல் மற்றும் தேசிய அரண்மனை மற்றும் பண்டைய ஆஸ்டெக் கோவிலின் இடிபாடுகள் நகரில் மின்வடங்கள் தோண்டும் போது 1978 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஏகாதிபத்திய குடியிருப்பு கோட்டையில் அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளது. கூடுதலாக நகரில் பரவலாக 160 அருங்காட்சியகங்கள், 30 கச்சேரி அரங்குகள் மற்றும் 100 கலை அரங்குகளைக் கொண்டிருக்கிறது. இது நியூயார்க் \, லண்டன் மற்றும் டொராண்டோ போன்றவற்றிற்கு அடுத்து திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட நான்காவது நகரமாக உள்ளது.

Historic Center of Mexico City and Xochimilco*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மெக்சிக்கோ நகரின் வரலாற்று மையம்
நாடு மெக்சிக்கோ
வகை Cultural
ஒப்பளவு ii, iii, iv, v
மேற்கோள் 412
பகுதி கரீபிய மற்றும் லத்தின் அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987  (11th அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

வெளியிணைப்புகள்[தொகு]

  1. http://www.biggest-cities.com/
  2. "Normales climatológicas para Mexico-Central-Tacubaya D.F" (Spanish). Colegio de Postgraduados. மூல முகவரியிலிருந்து January 16, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 20, 2013.
  3. "NORMALES CLIMATOLÓGICAS 1981-2000" (Spanish). Comision Nacional Del Agua. பார்த்த நாள் January 5, 2013.
  4. "Tacubaya, Distrito Federal Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் May 14, 2013.

==

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிக்கோ_நகரம்&oldid=1827712" இருந்து மீள்விக்கப்பட்டது