எசுப்பானியப் பேரரசு
எசுப்பானியப் பேரரசு (Spanish Empire) (எசுப்பானியம்: Imperio Español) என்பது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய உலகப்பகுதிகளில், எசுப்பானியா நேரடியாக ஆட்சிசெய்த பிரதேசங்களையும் குடியேற்றங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு ஆகும்.
எசுப்பானியப் பேரரசு கண்டுபிடிப்புக் காலத்திலிருந்து தொடங்கியது. எனவே, உலகளாவிய விரிவுகொண்ட முதல் பேரரசுகளுள் ஒன்றாக அது திகழ்ந்தது. ஆப்சுபர்க்கு (Habsburg) வம்ச அரசர்களின் ஆட்சியின்கீழ் எசுப்பானியாவின் உலகளாவிய அதிகாரம் தன் உச்சக்கட்டத்தை எட்டியது.[1] எசுப்பானியா ஓர் உலக வல்லரசாக மாறியது.
எசுப்பானியா 15ஆம் நூற்றாண்டில் பேரரசாக மாறத் தொடங்கியதிலிருந்து, நவீன உலக விரிவாண்மையும் ஐந்து நூற்றாண்டுகளாக ஐரோப்பா உலக அளவில் கோலோச்சிய செயல்பாடும் ஆரம்பித்தது. எசுப்பானியா 1492இல் தொடங்கி அமெரிக்கா நோக்கி கடற்பயணங்களை மேற்கொண்டது. அதிலிருந்து சுமார் ஆறு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவின் ஆதிக்கம் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டிச் சென்றது. எசுப்பானியாவின் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள் 1970களில் சுதந்திரம் அடைந்தன. அதுவரையிலும் எசுப்பானியாவின் பேராண்மை உலகளவில் நீடித்தது.
எசுப்பானியாவின் பகுதிகள் ஒன்றுபடுதல்
[தொகு]எசுப்பானியாவில் நிலவிய மாகாண ஆட்சிகளுள் கஸ்தீலியா பிரதேசமும் அரகோன் பிரதேசமும் முதன்மைபெற்றிருந்தன. கஸ்தீலியாவின் ஆட்சியைப் பிடிக்க 1475-1479 காலகட்டத்தில் நிகழ்ந்த போரில் இசபெல்லா அணி வெற்றிபெற்றது. அதை எதிர்த்த ஹுவானா அணி தோல்வியுற்றது. இசபெல்லா ஏற்கனவே அரகோன் பிரதேச இளவரசரான பெர்டினான்டு என்பவரை மணந்திருந்ததால், கஸ்தீலியாவும் அரகோனும் ஒரே அரசர்களின் கீழ் வரலாயின. இசபெல்லாவும் பெர்டினான்டும் "கத்தோலிக்க அரசர்கள்" (Catholic Monarchs- எசுப்பானியம்: los Reyes Catolicos) என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்கள்.
முசுலீம் ஆட்சி முடிவுறல்
[தொகு]1472இல், எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆட்சியின்போது கிரனாடா பிரதேசத்தில் நிலவிய முசுலீம் ஆட்சி முறியடிக்கப்பட்டு, கிரனாடா பகுதி கஸ்தீலியா அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு, எட்டு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவிலும் போர்த்துகல் பகுதிகளிலும் நிலவிய முசுலீம் ஆட்சி முற்றிலுமாக முடிவுற்றது. இது "ஆட்சி மீட்பு" (Reconquest - எசுப்பானியம்: Reconquista) என அழைக்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் பயணம் மேற்கொள்ளல்
[தொகு]அதே 1472ஆம் ஆண்டில் எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆதரவோடு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லான்டிக் பெருங்கடலில் மேற்குத் திசை நோக்கிப் பயணம் சென்று இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், இந்தியாவை வந்தடைவதற்குப் பதிலாக அமெரிக்கா என்னும் புதியதொரு பெருநிலப்பகுதியைக் கண்டுபிடித்தார்.
அதிலிருந்து ஐரோப்பா, குறிப்பாக எசுப்பானியா, அமெரிக்காக்களில் குடியேற்ற ஆதிக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது.
ஆதாரங்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]
நூற்பட்டியல்
[தொகு]- Anderson, James Maxwell (2000), The History of Portugal, Westport, Connecticut: Greenwood, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-31106-2.
- Archer, Christon; et al. (2002), World History of Warfare, Lincoln: University of Nebraska Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-4423-8
{{citation}}
: Explicit use of et al. in:|first=
(help). - Brown, Jonathan; Elliott, John Huxtable (1980), A Palace for a King. The Buen Retiro and the Court of Philip IV, New Haven: Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-02507-1.
- Kamen, Henry (2003), Empire: How Spain Became a World Power, 1492–1763, New York: HarperCollins, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-093264-3.
- Lach, Donald F.; Van Kley, Edwin J. (1994), Asia in the Making of Europe, Chicago: University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-46734-4.
- Lockhart, James; Schwartz, Stuart B. (1983), Early Latin America: A History of Colonial Spanish America and Brazil, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-29929-9.
மேல் ஆய்வுக்கு
[தொகு]- Armstrong, Edward (1902). The emperor Charles V. New York: The Macmillan Company
- Black, Jeremy (1996). The Cambridge illustrated atlas of warfare: Renaissance to revolution. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-47033-1
- Braudel, Fernand (1972). The Mediterranean and the Mediterranean World in the Age of Philip II, trans. Siân Reynolds. New York: Harper & Row. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-090566-2
- Fernand Braudel, The Perspective of the World (part iii of Civilization and Capitalism) 1979, translated 1985.
- Brown, Jonathan (1998). Painting in Spain : 1500–1700. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-06472-1
- Dominguez Ortiz, Antonio (1971). The golden age of Spain, 1516–1659. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-00405-0
- Edwards, John (2000). The Spain of the Catholic Monarchs, 1474–1520. New York: Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-16165-1
- Harman, Alec (1969). Late Renaissance and Baroque music. New York: Schocken Books.
- Kamen, Henry (1998). Philip of Spain. New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-07800-5
- Kamen, Henry (2005). Spain 1469–1714. A Society of Conflict (3rd ed.) London and New York: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-78464-6
- Parker, Geoffrey (1997). The Thirty Years' War (2nd ed.). New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-12883-8
- Parker, Geoffrey (1972). The Army of flanders and the Spanish road, 1567–1659; the logistics of Spanish victory and defeat in the Low Countries' Wars.. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-08462-8
- Parker, Geoffrey (1977). The Dutch revolt. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-1136-X
- Parker, Geoffrey (1978). Philip II. Boston: Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-69080-5
- Parker, Geoffrey (1997). The general crisis of the seventeenth century. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-16518-0
- Ramsey, John Fraser (1973) Spain: the rise of the first world power. University of Alabama Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8173-5704-1 9780817357047
- Stradling, R. A. (1988). Philip IV and the government of Spain. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-32333-9
- Thomas, Hugh (2004). Rivers of Gold: The Rise of the Spanish Empire 1490–1522 Weidenfeld & Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-64563-3
- Thomas, Hugh (1997). The Slave Trade; The History of the Atlantic Slave Trade 1440–1870. London: Papermac. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-73147-6
- Various (1983). Historia de la literatura espanola. Barcelona: Editorial Ariel
- Wright, Esmond, ed. (1984). History of the World, Part II: The last five hundred years (3rd ed.). New York: Hamlyn Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-43644-2.
வெளி இணைப்புகள்
[தொகு]- Library of Iberian Resources Online, Stanley G Payne A History of Spain and Portugal vol 1 Ch 13 "The Spanish Empire"
- The Mestizo-Mexicano-Indian History in the USA பரணிடப்பட்டது 1996-12-26 at Archive.today
- Documentary Film, Villa de Albuquerque பரணிடப்பட்டது 2007-12-23 at the வந்தவழி இயந்திரம்
- The last Spanish colonies (எசுப்பானியம்)
- Francisco José Calderón Vázquez (2008), Fronteras, identidad, conflicto e interacción. Los Presidios Españoles en el Norte Africano (in Spanish), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-691-6786-1
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)