உள்ளடக்கத்துக்குச் செல்

பெய்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெய்ஜிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெய்ஜிங்
Beijing
北京
மாநகராட்சி
பெய்ஜிங் மாநகராட்சி • 北京市
தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி,
தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி,
நாடுமக்கள் சீனக் குடியரசு
பிரிவுகள்[1]
 - County-level
 - Township-level

16 மாவட்டங்கள், 2 கவுண்டிகள்
289 நகரங்களும் கிராமங்களும்
அரசு
 • வகைநகராட்சி
 • கட்சிச் செயலர்லியூ சி
 • நகர முதல்வர்குவோ சின்லொங்
பரப்பளவு
 • மாநகராட்சி16,801.25 km2 (6,487.00 sq mi)
ஏற்றம்
43.5 m (142.7 ft)
மக்கள்தொகை
 (2010)[2]
 • மாநகராட்சி1,96,12,368
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
 • சீனாவில் தராதரம்
Population: 26வது;
Density: 4வது
இனம்Beijinger
முக்கிய இனக்குழுக்கள்
 • ஹான்96%
 • மஞ்சு2%
 • ஹூய்2%
 • மங்கோலியர்0.3%
நேர வலயம்ஒசநே+8 (சீன தர நேரம்)
அஞ்சல் குறியீடு
100000 – 102629
இடக் குறியீடு10
GDP[3]2010
 - மொத்தம்CNY 1,377.79 பில்.
US$ 209.3 பில். (13வது)
 - நபருக்குCNY 70,251
US$ 10,672 (3வது)
 - வளர்ச்சிIncrease 10.2%
மவசு (2008)0.891 (2வது) – high
இலக்கத்தகடுகள்京A, C, E, F, H, J, K, L, M, N, P
京B (வாடகைக்கார்கள்)
京G, Y (நகருக்கு வெளியே)
京O (காவல்துறை)
京V (சிவப்பில்) (இராணுவம்,
நடுவண் அரசு)
நகர மரங்கள்Platycladus orientalis'
 Pagoda tree
நகரப் பூக்கள்சீன ரோசா
 கிறிசாந்திமம்
இணையதளம்www.ebeijing.gov.cn

பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.

பெயர்க்காரணம்

[தொகு]

கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

வரலாறு

[தொகு]
பெய்ஜிங்கில் சோக்கோடியன் எனும் குகைப்பகுதியிலுள்ள அருங்காட்சியகம்

பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது.

புவியியல்

[தொகு]

கிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது.

அரசு

[தொகு]

பெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.

விளையாட்டு

[தொகு]

பெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.

போக்குவரத்து

[தொகு]

வட சீனாவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக பெய்ஜிங் விளங்குகின்றது. இது ஒன்பது அதிவேக நெடுஞ்சாலைகள், பதினொரு தேசிய நெடுஞ்சாலைகள், இரு அதிவேக புகைவண்டிப் பாதைகள் மற்றூம் ஒன்பது சாதாரண புகைவண்டிப் பாதிகள் ஒன்றிணையும் இடமாக இந்நகரம் திகழ்கின்றது. பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் நகர மத்தியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இது உலகில் அதிகளவு பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

சீனாவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் விளங்குகின்றது. இந்நகரின் முக்கிய பொருளாதார முறையாக சேவைக்கைத்தொழில் திகழ்கின்றது.

முக்கிய இடங்கள்

[தொகு]

பெய்ஜிங்கிலுள்ள பேரரண் நகரம் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டையகால அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. மேலும் பெய்ஹாய், சிச்சஹாய், சொஞ்சன்ஹாய், ஜிங்சான், சொங்சான் ஆகிய இடங்கள் உட்பட இந்நகரிலுள்ள பல பூங்காக்கள் சீனத் தோட்டக்கலை மிளிரும் பூங்காக்களாக விளங்குகின்றன.

இரட்டை/சகோதர நகரங்கள்

[தொகு]

பெய்ஜிங் பல இரட்டை நகரங்கள் அல்லது சகோதர நகரங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களாக விளங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Township divisions". the Official Website of the Beijing Government. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  3. "北京市2010年暨"十一五"期间国民经济和社会发展统计公报". Bjstats.gov.cn. 2011-02-21. Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2011-10-31.
  4. "NYC's Sister Cities". Sister City Program of the City of New York. 2006. Archived from the original on 14 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 1 September 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "Protocol and International Affairs". DC Office of the Secretary. Archived from the original on 13 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 12 July 2008.
  6. "Twin cities of Riga". Riga City Council. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Prefeitura.Sp – Descentralized Cooperation". Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
  8. "International Relations – São Paulo City Hall – Official Sister Cities". Prefeitura.sp.gov.br. பார்க்கப்பட்ட நாள் 1 June 2010.
  9. "Canberra's international relationships – Canberra's international relationships". cmd.act.gov.au. Archived from the original on 12 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  10. "Sister Cities of Manila". 2008–2009 City Government of Manila. Archived from the original on 7 ஜூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 2 July 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help); External link in |publisher= (help)
  11. "Twinning Cities: International Relations" (PDF). Municipality of Tirana. tirana.gov.al. Archived from the original (PDF) on 16 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 23 June 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்சிங்&oldid=3851644" இலிருந்து மீள்விக்கப்பட்டது