டொங்குவான்
டுங்க்வான் Dongguan 东莞 | |
---|---|
மாவட்ட நிலை நகரம் | |
டுங்க்வான் நகரம் 东莞市 | |
![]() டுங்க்வான் நிழற்சாலை, மைய வணிக மாவட்டம் | |
நாடு | சீனா |
மாநிலம் | குவாங்டோங் |
நிறுவப்பட்டது | கிபி 331[1] |
அரசு | |
• சீன பொதுவுடமைக் கட்சி குழுச் செயலாளர் | லியு சிஜெங் (刘志庚) |
• மேயர் | லீ யுகுவான் (李毓全) |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,465 km2 (952 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 64,45,700 |
நேர வலயம் | சீன சீர் நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் குறி | 523000 |
தொலைபேசி குறியீடு | 769 |
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள் | 粤S |
- மொதம் | ¥ 424.6 பில்லியன்(2010) |
- தனிநபர் ஒருவருக்கு | ¥ 53,285 (2008) |
நகர மலர் | யூலன் மக்னோலியா Magnolia denudata |
இணையதளம் | http://www.dongguan.gov.cn/ |
டுங்க்வான் (Dongguan, எளிய சீனம்: 东莞; மரபுவழிச் சீனம்: 東莞; பின்யின்: Dōngguǎn, கண்டோனீசு: Dung1 gun2; பழைய ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு: Tung-kuan) சீனாவின் மையத்தில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டநிலை நகரமாகும்.
பவழ ஆறு கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த இன்றியமையாத தொழில்நகரத்தின் வடக்கே மாநிலத் தலைநகர் குவாங்சோவும் வட கிழக்கே யுயிஷூவும் தெற்கே சென்ச்சென்னும் மேற்கே பவழ ஆறும் அமைந்துள்ளன.
உலகிலேயே, பெரும்பாலும் வெற்றிடமாக இருப்பினும், மிகப் பெரும் அங்காடி வளாகமான நியூ சௌத் சைனா மால் இங்குள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவேற்பதில் நகர நிர்வாகம் முற்போக்கான செயல்பாட்டுடன் திகழ்கிறது. டுங்க்வான் மற்றும் அடுத்துள்ள குவாங்சோ, சென்ச்சென் ஆகிய மூன்று நகராட்சிகளும் இணைந்து 25 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ளன. பவழ ஆறு கழிமுகப்பகுதி மக்கள்தொகையில் இவை மூன்றும் பெரும்பங்கை வகிக்கின்றன.[2] டுங்க்வானின் ஏற்றுமதி $65.54 பில்லியனாக உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dongguan information, History of Dongguan, culture, climate, hotels, map, travel, tourism, tourist, weather, travel tips". HotelTravel.com. 2010-04-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Livable Dongguan". Liveable.dg.gov.cn. 2007-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-06 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Dongguan City Government (சீனம்) and (ஆங்கில மொழியில்)
- www.dgtoday.com.cn பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம் Government funded website, giving a full range of information about Dongguan (சீனம்) and (ஆங்கில மொழியில்)
- Dongguan Bureau of Foreign Trade & Economic Cooperation பரணிடப்பட்டது 2006-07-16 at the வந்தவழி இயந்திரம் (சீனம்) and (ஆங்கில மொழியில்)
- IATT - International Association for Technology Trade
- Expats in Dongguan - Expatacular - Expat Community பரணிடப்பட்டது 2011-08-10 at the வந்தவழி இயந்திரம்