உள்ளடக்கத்துக்குச் செல்

ஹோ சி மின் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோ சி மின் நகரம்
Ho Chi Minh City
தான் போ ஹோ சி மின்
முன்னாள் சாய்கோன்
மாநகராட்சி
நாடுவியட்நாம்
அமைப்பு1698
பெயர் மாற்றம்1976
அரசு
 • வகைமாநகரசபை
 • மக்கள் அமைப்பின் தலைவர்:லே ஹொவாங் குவான்
பரப்பளவு
 • மொத்தம்809 sq mi (2,095 km2)
ஏற்றம்
63 ft (19 m)
மக்கள்தொகை
 (2006-நடுப்பகுதி)
 • மொத்தம்64,24,519
 • அடர்த்தி7,943/sq mi (3,067/km2)
நேர வலயம்ஒசநே+7
இடக் குறியீடு+84 (8)
இணையதளம்http://www.hochiminhcity.gov.vn/

ஹோ சி மின் நகரம் (Ho Chi Minh City, வியட்நாமிய மொழி: Thành phố Hồ Chí Minh) என்பது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். 17ம் நூற்றாண்டில் வியட்நாமுடன் இணைக்கப்படும் வரை இந்நகரம் கெமர் மொழியில் "பிறே நொக்கோர்" என்ற பெயரில் கம்போடியாவின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. இது பின்னர் சாய்கோன் என்ற பெயரில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான கோச்சின்சீனாவின் தலைநகராக விளங்கியது. 1954 முதல் 1975 வரையில் தென் வியட்நாமின் தலைநகராக இருந்தது. மே 1, 1975 இல், சாய்கோன் அதன் அயல் மாகாணமான 'கியா டின்' உடன் இணைக்கப்பட்டு வியட்நாமியக் கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் அவர்களின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் நகரின் குடிமக்கள் பலரால் இன்னமும் இது "சாய்கோன்" என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது[1].

நகரின் நடுப்பகுதி சாய்கோன் ஆற்றுக் கரையில் உள்ளது. தென் சீனக் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் (37 மை) தூரத்திலும்[2] வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் இருந்து 1,760 கிலோமீட்டர் (1,094 மை) தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Letter from Ho Chi Minh City, A Tribute to My Vietnam Vet Father பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம் BEN BROWN. [Counterpunch] Magazine. Accessed 19-12-2007
  2. "NGA: Country Files". Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோ_சி_மின்_நகரம்&oldid=3837202" இலிருந்து மீள்விக்கப்பட்டது