ஹோ சி மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹோ சி மின்
Hồ Chí Minh Official Picture.jpg
வியட்நாம் சனநாயகக் குடியரசின் பிரதமர்
பதவியில்
1945 – 1955
வியட்நாம் சனநாயகக் குடியரசின் அதிபர்
பதவியில்
1946 – 1969
தனிநபர் தகவல்
பிறப்பு மே 19, 1890
நெ ஆன் மாகாணம், வியட்நாம்
இறப்பு செப்டம்பர் 2, 1969 (அகவை 79)
ஹனோய், வியட்நாம்
தேசியம் வியட்நாமியர்
அரசியல் கட்சி வியட்நாம் தொழிலாளர் கட்சி

ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (19461955), அதிபராகவும் (19461969) இருந்தவர்.

ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர்[தொகு]

பிறப்பில் இவர் பெயர் நியூவென் சின் சுங் (Nguyen Sinh Cung). ஹோ சி மின் என்பது இவரின் இரகசியப் பெயர். அதாவது 1942-ல் வியட்னாம் விடுதலையடையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ஹோ சி மின் புனைப் பெயர் கொண்டு‍ அழைக்கப்பட்டார். இப்படி பல இரகசியப் பெயர்கள் இவருக்கு இருந்தன. ஜனாதிபதியாக ஆகும் வரை இவர் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசியப் பெயர்கள் உண்டு‍ என நம்பப்படுகிறது‍.

பிறப்பு[தொகு]

ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்புச் சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை.

அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை.பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்பப்படுகிறது. கிராமப்புறத்தில் பிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோ_சி_மின்&oldid=2065789" இருந்து மீள்விக்கப்பட்டது