அஸ்டெக் நாகரிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஸ்டக் பேரரசின் வரைபடம், ஆண்டு 1519
அஸ்டக் மக்களின் பிரமிடு கோயில்
அஸ்டக் போர் வீரர்கள்


அஸ்டெக் நாகரிகம் (Aztec civilisation) மெக்சிகோவின் மையப் பகுதியில் பதினான்காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்ததாகும். அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் தம்மை மெக்சிக்காக்கள் என அழைத்தனர். அஸ்டெக் பேரரசின் தலைநகரம் மெக்சிக்கோவின் டெக்ஸ்கொகோ ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட டெனோச்டிட்லன் என்பதாகும். இன்றைய மெக்சிக்கோவின் தலைநகரான மெக்சிக்கோ நகரத்தின் பகுதியான டெனோச்டிட்லனின் இடிபாடுகளின் மீதே கட்டப்பட்டுள்ளது. [1][2][3]

அஸ்டெக் நாகரிகம் கட்டாய கல்வி முறையைக் கொண்டிருந்த ஒரு முன்னேற்றகரமான நாகரிகமாகும். அஸ்டெக் நாகரிகம் கட்டட கலையிலும், கலை திறன்களிலும் சிறந்து விளங்கியது. கலாசாரத்திலும், அறிவியல் முன்னேற்றதிலும் உன்னத நிலையில் விளங்கிய அஸ்டெக் நாகரிக மக்கள், நரபலியிடுதல் போன்ற கொடுர பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

வீழ்ச்சி[தொகு]

அஸ்டெக் நாகரிகத்தின் வீழ்ச்சி கொடூரமான குடியேற்றவாதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கேர்னன் கோர்டெஸ் தலைமையிலான எசுபானியப் படைகள் 1519 இல் மெக்சிக்கோவுக்குச் சென்றது. அஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட இவர்கள் அஸ்டெக் பேரரசனான மொன்டெசூமாவைக் கொலை செய்தனர். ஆனால் அஸ்டெக்குகளின் தாக்குதலில் தப்பியோடினர்.

பின்னர் டெனோச்டிட்லனில் பரவிய அம்மை நோய் காரணமாக பெருமளவு அஸ்டெக்குகள் இறந்த நிலையில் மீண்டும் தாக்கிய ஸ்பானியர்கள் டெனோச்டிட்லனினை அழித்து அதனைக் கைப்பற்றினர். அஸ்டெக் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அஸ்டெக்குகள் கல்வி கற்பது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aztec Civilization
  2. AZTECS
  3. Aztec PEOPLE
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்டெக்_நாகரிகம்&oldid=2405329" இருந்து மீள்விக்கப்பட்டது