பெரியம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரியம்மை
Smallpox
Smallpox.jpg
பெரியம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு infectious disease
ICD-10 B03.
ICD-9-CM 050
நோய்களின் தரவுத்தளம் 12219
MedlinePlus 001356
ஈமெடிசின் emerg/885
Patient UK பெரியம்மை
MeSH D012899
Variola virus (Smallpox)
Virus classification
குழு: Group I (dsDNA)
குடும்பம்: Poxviridae
பேரினம்: Orthopoxvirus
இனம்: Variola vera

பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.[1] இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். V. minor கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் பீடிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் அண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ed.). McGraw Hill. பக். 525–8. ISBN 0-8385-8529-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியம்மை&oldid=2006212" இருந்து மீள்விக்கப்பட்டது