அசுடெக் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுடெக் பேரரசு
மும்மடிக் கூட்டணி Ēxcān Tlahtōlōyān
1428–1521

Nahuatl glyphs for Texcoco, Tenochtitlan, and Tlacopan.
நாட்டுச் சின்னங்கள்

அசுடெக் பேரரசு மிக விரிந்த நிலை இருக்கையில்
தலைநகரம் மெக்சிக்கோ-டெனோச்டீட்லான் (நடைமுறைப்படி)
மொழி(கள்) நவ்வதில் (பொது மொழி)

மேலும் ஒடோமி, மாட்லட்சின்கா, மசாயுவா, மசாடெக், யுயாக்சுடெக், டெபெயுவா, போப்பொலோகா, இட்லாபனெக், மிக்சுடெக், குயிகடெக், டிரிக், சபோடெக், சோக்கெ, கோகோடெக், சினான்டெக், டோடோனாக், குயிட்லடெக், பாமே, மாம், டாபசுல்டெக், டாராசுகேன்

சமயம் அசுடெக் சமயம்
அரசாங்கம் நகர நாடுகளின் கூட்டணி
 -  1427–1440 இட்சுகோட்ல் (கூட்டணி நிறுவனர்)
 -  1520–1521 குவெத்தமொக் (கடைசி)
 -  1431–1440 நிசவால்கோயோட்டில் (கூட்டணி நிறுவனர்)
 -  1516–1520 காகமட்சின் (கடைசி)
இட்லகோபானின் வையெட்லதோனி
 -  1400–1430 அகுல்னயுவாகாட்டில் சாக்குவாகாட்டில் (கூட்டணி நிறுவனர்)
 -  1519–1524 டெட்லபான்குவாட்சல்ட்சின் (கடைசி)
வரலாற்றுக் காலம் கொலம்பியக் காலத்துக்கு முன்னர்
 -  கூட்டணி நிறுவனம் மார்ச் 13 1428
 -  எசுப்பானியர் கைப்பற்றுதல் ஆகத்து 13 1521
பரப்பளவு
 -  1520 3,04,325 km² (1,17,501 sq mi)
நாணயம்
முந்தையது
பின்னையது
டெனோசிட்லான்
இட்லாடெலோல்கோ
இட்லாகோபான்
அசுகப்போட்சல்கோ
கொல்யூகன்
டெக்சுகோகோ
சால்கோ
புதிய எசுப்பானியா
தற்போதைய பகுதிகள்  மெக்சிக்கோ

மெக்சிகா அசுடெக் பேரரசு (Aztec Empire) அல்லது மும்மடி கூட்டணி மூன்று நவ்வா நகர அரசுகளின் (ஆல்தெபெட்டில்) கூட்டணியாகும்; மெக்சிக்கோ-டெனோச்டீட்லான், டெக்ச்கோகோ, மற்றும் இட்லாகோபான் நகர அரசுகளின் கூட்டணியாகும். இந்த மூன்று நகர அரசுகளும் மெக்சிக்கோ பள்ளத்தாக்கிலும் அடுத்த பகுதிகளையும் 1428 முதல் ஆண்டு வந்தன. 1521இல் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய வெற்றியாளர்களும் அவர்களது உள்ளூர் தோழமைகளும் தோற்கடிக்கும் வரை இவ்வாட்சி நிலைபெற்றிருந்தது.

அசுகபோட்சால்கோ நகர அரசுக்கும் அதன் முன்னாள் மாகாணங்களுக்கும் இடையே எழுந்த உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற கூட்டத்தால் இந்தக் கூட்டணி நிறுவப்பட்டது. [1]தன்னாட்சியுடைய மூன்று நகர அரசுகளின் கூட்டணியாக துவக்கத்தில் திட்டமிடப்பட்டபோதும் டெனோச்டீட்லான் முதன்மையான படைத்துறை கூட்டாளியாக விளங்கியது.[2] 1520இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபோது, கூட்டணியின் நிலப்பகுதியை டெனோச்டீட்லான் தான் செயற்பாட்டளவில் ஆண்டு வந்தது; மற்றக் கூட்டாளிகள் துணைப்பொறுப்புகளையே வகித்தனர்.

இக்கூட்டணி உருவான பின்னர் கைப்பற்றும் வண்ணம் பல போர்களை நடத்தி தனது ஆட்பகுதிகளை விரிவாக்கியது. உச்சத்தில் இருந்தபோது பெரும்பாலான மத்திய மெக்சிக்கோவை ஆண்டு வந்தது; தொலைவில் இருந்த தற்கால குவாத்தமாலாவின் எல்லையிலிருந்த, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியான சோகோனோச்கோ மாகாணத்தையும் தன்னாட்சியில் கொண்டு வந்தது. இந்த ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் "தலைமையேற்பு" அல்லது "மறைமுக" ஆட்சியாக விவரிக்கின்றனர்.[3] கூட்டணிக்கு அரையாண்டுக்கொருமுறை திறை செலுத்தவும் அசுடெக் பேரரசுக்குத் தேவைப்பட்டபோது படைகளை அனுப்பவும் உடன்பட்டால், கைப்பற்றப்பட்ட நகரங்களின் ஆட்சியாளர்கள் அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக, கூட்டணி அரசு பாதுகாப்பையும் அரசியல் நிலைத்தன்மையையும் அளித்தது. இந்த அரசியலமைப்பு பரந்த நிலப்பகுதியில் பொருளியல் ஒத்துழைப்பிற்கு வழிவகுத்த அதேசமயம் குறிப்பிடத்தக்க உள்ளூர் தன்னாட்சியை வழங்கியது.

இந்தப் பேரரசின் சமயக் கொள்கை பல கடவுட் கொள்கையைத் தழுவியது. மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் உய்ட்சிலோபோச்ட்லியை முதன்மை கடவுளாக வழிபட்டனர். கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது; அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Smith 2009
  2. Hassig 1988
  3. Smith 2001

நூற்கோவை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aztec
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுடெக்_பேரரசு&oldid=3583500" இருந்து மீள்விக்கப்பட்டது