உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்பாலீர்ப்பு பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகனள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணமுடித்த இரு அகனள்கள்

நேர்பாலீர்ப்புப் பெண் (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது தனக்கு நேர்பாலினமான மற்றொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ள பெண்ணைக் குறிக்கிறது.[1][2]

இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் ஆணியல் பெண் (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.

இத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.

சொல் விளக்கம்

[தொகு]

பெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் "லெஸ்பியன்" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது.[3]

சட்ட உரிமை

[தொகு]

அண்மைக் காலத்திலேயே கனடா போன்ற சில மேற்குநாடுகளில் அரசியல், சட்ட தளங்களில் இவர்களின் உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lesbian". Reference.com. பார்க்கப்பட்ட நாள் July 20, 2014.
  2. Zimmerman, p. 453.
  3. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781500380939. இணையக் கணினி நூலக மைய எண் 703235508.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்பாலீர்ப்பு_பெண்&oldid=3440136" இலிருந்து மீள்விக்கப்பட்டது