கோணல் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

வரலாறு[தொகு]

இதை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் கோணல் கோட்பாடு (Queer theory) மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.

இந்தியாவில் விழிப்புணர்வு[தொகு]

இந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர்.

பாலின உரிமை[தொகு]

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடம் செத்துபிழைக்கின்றனர் . உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். தமிழில் கோணல் கோட்பாடு மற்றும் பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் ஆவர்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணல்_கோட்பாடு&oldid=3275838" இருந்து மீள்விக்கப்பட்டது