2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
6 திசம்பர் 2024 இல் இராணுவ நிலைகள்: உக்ரைனின் கட்டுப்பாட்டில் உருசிய, உருசிய-சார்புப் படைகளின் கட்டுப்பாட்டில் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆதரவு:
| |||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
இழப்புகள் | |||||||
|
|
||||||
|
உருசியா அதன் தென்மேற்கில் உள்ள உக்ரைனின் மீது பெரிய அளவிலான படையெடுப்பை 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கியது. இது 2014 இல் தொடங்கிய உருசிய-உக்ரைனியப் போரின் மிகப்பெரிய விரிவாக்கம் ஆகும். உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், 1997-இற்குப் பின்னரான நேட்டோ விரிவாக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தது என்றும், உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்வதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.[32] படையெடுப்பிற்கு முன்னதாக, 2021 இன் முற்பகுதி முதல் உருசிய இராணுவக் கட்டமைவு நெருக்கடி நீடித்து வந்தது. படையெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு, உருசியா கிழக்கு உக்ரைனின் எல்லைகளுக்குள் தனியெத்சுக் மக்கள் குடியரசு, இலுகன்சுக் மக்கள் குடியரசு ஆகிய இரண்டு சுயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலங்களை அங்கீகரித்தது. 2022 பிப்ரவரி 21 அன்று, உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள தொன்பாசு பகுதிக்குள் நுழைந்தன. பிப்ரவரி 22 அன்று, உருசியாவின் கூட்டமைப்புப் பேரவை நாட்டிற்கு வெளியே இராணுவப் படைகளைப் பயன்படுத்த பூட்டினுக்கு ஒருமனதாக அங்கீகாரம் அளித்தது.
பிப்ரவரி 24 அன்று கி.ஐ.நே 05:00 (ஒ.ச.நே+2) மணியளவில், பூட்டின் கிழக்கு உக்ரைனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" அறிவித்தார்; சில நிமிடங்களுக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கின. உக்ரைனிய எல்லைக் காவல் படை உருசியா, பெலருஸ் உடனான அதன் எல்லைப் பகுதிகள் தாக்கப்பட்டதாகக் கூறியது.[33][34] இரண்டு மணி நேரம் கழித்து, உருசியத் தரைப்படை உக்ரைனுக்குள் நுழைந்தது.[35] இத்தாக்குதலுக்குப் பதிலளிக்கும் முகமாக, உக்ரைனியத் தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி இராணுவச் சட்டத்தை அறிவித்தார். உருசியாவுடனான தூதரகத் தொடர்புகளைத் துண்டித்து, பொதுமக்கள் அணிதிரட்டலை அறிவித்தார். இந்தப் படையெடுப்பு பரவலான பன்னாட்டுக் கண்டனத்தைப் பெற்றது, உருசியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.[36][37]
போரின் உடனடி விளைவுகள்
[தொகு]- உக்ரைனில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது
- உருசியா நாட்டின் பணத்தின் மதிப்பு 8% அளவில் வீழ்ச்சி கண்டது.
- மாஸ்கோ பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது.
- உக்ரைன் நாட்டின் தலைநகரம் கீவ் மற்றும் வணிக நகரம் கார்கீவ் மற்றும் சுமி போன்ற நகரங்களில் உருசியப் படைகள் தரையிறங்கி தாக்குதல்கள் தொடுத்தது.
- உருசியாவுடனான அரசியல்ரீதியான உறவுகளை உக்ரைன் துண்டித்துக் கொண்டது.
- ஐரோப்பிய, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தங்கள் வான்வெளியில் ருசிய விமானங்கள் பறக்கத் தடை விதித்தது.
- அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உருசியா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி பரிமாற்றத் தடைகள் விதித்தது.[38][39]
- உருசியா உடனான நேரடி மற்றும் மறைமுக வங்கி நிதிப்பரிவர்த்தனைகளை உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவைகள் நிறுத்திக் கொண்டது.
- வங்கி நிதிபரிவர்த்த்தனைகளுக்கு உதவும் விசாகார்டு, மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உருசியாவில் தடைசெய்தது.
கங்கா நடவடிக்கை
[தொகு]உக்ரைன் நாட்டில் படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் 23,000 இந்தியர்களை போலாந்து, உருமேனியா, அங்கேரி, சிலோவாக்கியா, மல்தோவா நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். கங்கா நடவடிக்கை மூலம் 26 பிப்ரவரி 2022 முதல் 11 மார்ச் 2022 முடிய, அந்நாடுகளிலிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.[40][41]
உருசியா ஆக்கிரமிப்பின் நூறு நாட்கள் முடிவில்
[தொகு]2024 அன்றுடன் உக்ரைன் மீதான உருசியாவின் ஆக்கிரமிப்பு போரின் 816வது நாள் முடிவில், உக்ரைன் நாட்டின் 18% நிலப்பரப்புகள் உருசியா இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.[42]
அகதிகளாக வெளியேறுதல்
[தொகு]உருசியாவின் 100-வது நாள் ஆக்கிரமிப்பு போரின் முடிவில், 2 சூன் 2022 அன்று 1 கோடியே 20 லட்சம் உக்ரேனியர்கள் நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் போலந்து, உருமேனியா, அங்கேரி, மல்தோவா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாகச் சென்றுள்ளனர்.[43][44] போலாந்து நாட்டில் மட்டும் 36 இலட்சம் உக்ரைனிய அகதிகள் குடியேறியதால், அந்நாட்டின் மக்கள் தொகை 10% அதிகரித்துள்ளது.உருசியா மீது உலக நாடுகள் 5,831 தடைகளை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
[தொகு]நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றது. உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர்வதால் உருசியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக அமையும் எனக்கருதிய உருசியா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர தடுத்தது. 2014-ஆம் ஆண்டில் உக்ரைனில் உருசிய மொழி பேசுபவர்களைக் கொண்டு உக்ரைனில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளை உருசியா தூண்டியது. இதனால் உக்ரைனின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தில் உருசிய மொழி அதிகமாக பேசும் குடியரசுகளான தனியெத்சுக் மக்கள் குடியரசு மற்றும் இலுகன்சுக் மக்கள் குடியரசுகள் 2014 செப்டம்பர் 5 அன்று தங்களை தனி நாடுகளாக அறிவித்துக் கொண்டன. இந்த நாடுகளுக்கு உருசியா 2022 செப்டம்பர் 21 அன்று அங்கீகாரம் வழங்கியது மேலும் உக்ரைனின் கிரிமியா மூவலந்த தீவுப் பகுதியை ருசியா ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. 2021-2022-ஆம் ஆண்டுகளில் உருசிய-உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து இப்போர் துவங்கியது.
போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்
[தொகு]- 28 பிப்ரவரி 2022 அன்றுடன் ஐந்தாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போரை நிறுத்துவதற்கு உருசியா மற்றும் உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள் பெலரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமெல் நகரத்தில் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கியுள்ளனர்.[45][46] இந்த பேச்சு வார்த்தையில் முடிவுகள் எட்டப்படாமல் முடிவுற்றது.
- இராண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் பெலரஸ்-போலந்து நாடுகளின் எல்லைப்புற கிராமங்களான குசுனித்சா அல்லது [47][48] நகரத்தில் நடத்தப்படவுள்ளது.
- மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தை 7 மார்ச் 2022 (திங்கள் கிழமை) அன்று நடத்தப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.[49]
போர் நிகழ்வுகள்
[தொகு]- ஆறாம் நாள் போர் மிகக்கடுமையாக இருந்தது. கார்கீவ் நகரத்தில் ருசியப் ப்டைகள் உலகின் இரண்டாவது பெரிய தொலைக்காட்சி கோபுரம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அருகில் குண்டு மழை பொழிந்து கடும் சேதம் விளைவித்து. கீவ் நகரத்திலும் உருசியா இராணுவம் அரசுக் கட்டிடங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
- உக்ரைனின் தெற்கில் கருங்கடல் துறைமுக நகரமான கெர்சன் நகரத்தை 3 மார்ச் 2022 அன்று உருசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றது.[51]
- போர் காரணமாக 10 இலட்சம் உக்ரேனிய மக்கள் போலந்து, அங்கேரி, சிலோவாக்கியா, மால்டோவா போன்ற அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி கூறியுள்ளார்.[52]
- 3 மார்ச் 2022 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பை நிறுத்தக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.[53]
- 4 மார்ச் 2022 அன்று உக்ரைனின் தென்கிழக்கில் பாயும் தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்த சப்போரியா நகரம் அருகே உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரும் சப்போரிசுக்கா அணுமின் நிலையத்தை உருசியப் படைகள் குண்டு வீச்சு மூலம் கைப்பற்றியது.[54][55]
- 6 மார்ச் 2002 அன்று உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகரம் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் மட்டும், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என ருசியா அறிவித்தது.[56]
- 21 மே 2022 அன்று உருசியப் படைகள் மரியுபோல் நகரத்தைக் கைப்பற்றினர். உக்ரைன் படைகள் சரண் அடைந்தது.[57][58]
உக்ரைனின் 4 பிராந்தியங்களை உருசியாவுடன் இணைத்தல்
[தொகு]உருசிய இராணுவம் கைப்பற்றிய உக்ரைனின் கிழக்கில் உள்ள கெர்சன் மாகாணம், தோனெத்ஸ்க் மாகாணம், லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் சப்போரியா மாகாணங்களை உருசியாவுடன் இணைத்துக் கொண்டதாக உருசிய அதிபர் புதின் 30 செப்டம்பர் 2022 அன்று அறிவித்தார். மேலும் இந்த 4 பகுதிகளில் இதற்கு முன்பாக இணைப்பு குறித்து பொது வாக்கெடுப்பை உருசியா நடத்தியிருந்தது. இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இச்செயல் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.[59][60] உக்ரைனின் 4 பிராந்தியங்களை உருசியா இணைத்ததை ஒப்புதல் வழங்க ஐக்கிய நாடுகள் அவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ருசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.[61]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ தனியெத்சுக் மக்கள் குடியரசும், இலுகன்சுக் மக்கள் குடியரசும் பிரிவினை-கோரிய நாடுகளாகும், இவை 2014 மே மாதத்தில் தங்கள் விடுதலையை அறிவித்தன, தெற்கு ஒசேத்தியாவின் நடைமுறை மாநிலம் மற்றும் உருசியா (2022 முதல்).[2][3][4]
- ↑ உருசியப் படைகள் பெலருசியப் பிரதேசத்தில் இருந்து படையெடுப்பின் ஒரு பகுதியை நடத்த அனுமதிக்கப்பட்டது.[1] பெலாருசியத் தலைவர் அலெக்சாண்டர் லுகசெங்கோ, தேவைப்பட்டால் பெலருசியப் படைகள் படையெடுப்பில் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.[5]
- ↑ திரான்சுனிஸ்திரியாவின் நிலை சர்ச்சைக்குரியது. அது தன்னை ஒரு விடுதலை அடைந்த நாடாகக் கருதுகிறது, ஆனால் இதை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. மல்தோவா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இதனை மல்தோவாவின் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன.
- ↑ உக்ரைனைக் குறிவைக்கும் ஏவுகணைகள் திரான்சுனிஸ்திரியாவில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ukraine says it was attacked through Russian, Belarus and Crimea borders". CNN (கீவ்). 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224071121/https://www.cnn.com/europe/live-news/ukraine-russia-news-02-23-22/h_82bf44af2f01ad57f81c0760c6cb697c.
- ↑ "South Ossetia recognises independence of Donetsk People's Republic". Information Telegraph Agency of Russia. 27 June 2014 இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161117173807/http://tass.com/world/738110.
- ↑ Alec, Luhn (6 November 2014). "Ukraine's rebel 'people's republics' begin work of building new states". தி கார்டியன். தோனெத்ஸ்க். Archived from the original on 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
The two 'people's republics' carved out over the past seven months by pro-Russia rebels have not been recognised by any countries, and a rushed vote to elect governments for them on Sunday was declared illegal by Kiev, Washington and Brussels.
- ↑ "Общая информация" [General Information]. Official site of the head of the Lugansk People's Republic. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
11 июня 2014 года Луганская Народная Республика обратилась к Российской Федерации, а также к 14 другим государствам, с просьбой о признании её независимости. К настоящему моменту независимость республики признана провозглашенной Донецкой Народной Республикой и частично признанным государством Южная Осетия.
[On 11 June 2014, the Luhansk People's Republic turned to the Russian Federation, as well as to 14 other states, with a request to recognise its independence. To date, the republic's independence has been recognised by the proclaimed Donetsk People's Republic and the partially recognised state of South Ossetia.] - ↑ Rodionov, Maxim; Balmforth, Tom (25 February 2022). "Belarusian troops could be used in operation against Ukraine if needed, Lukashenko says". ராய்ட்டர்ஸ். Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ Intellinews (24 February 2022). "Moldova tightens security after explosions heard close to Russia-backed Transnistria". bne Intellinews. bne Intellinews இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224172130/https://intellinews.com/moldova-tightens-security-after-explosions-heard-close-to-russia-backed-transnistria-236052/. "Residents of the Russia-backed separatist republic of Transnistria in eastern Moldova and towns in territory controlled by Chișinău reported hearing explosions earlier today. Social media was flooded with reports of loud blasts, which were initially thought to have been an attack from within Transnistria, where Russia has around 1,500 troops, on Ukraine. A video described as a rocket attack from Transnistria has been circulating on Twitter."
- ↑ "Russia Positioning Helicopters, in Possible Sign of Ukraine Plans". 10 January 2022 இம் மூலத்தில் இருந்து 22 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220122100818/https://www.nytimes.com/2022/01/10/us/politics/russia-ukraine-helicopters.html. "American officials had expected additional Russian troops to stream toward the Ukrainian border in December and early January, building toward a force of 175,000."
- ↑ "The U.S. says Russia's troop buildup could be as high as 190,000 in and near Ukraine.". த நியூயார்க் டைம்ஸ். 18 February 2022 இம் மூலத்தில் இருந்து 18 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220218063637/https://www.nytimes.com/live/2022/02/18/world/ukraine-russia-news.
- ↑ 9.0 9.1 9.2 The military balance 2021. Abingdon, Oxon: International Institute for Strategic Studies. 2021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1032012278.
- ↑ "Russian forces closing in on Kyiv, claiming dozens of casualties". Ynet. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224150129/https://www.ynetnews.com/article/rygayyblc.
- ↑ 11.0 11.1 "Russia Says Destroyed Over 70 Ukraine Military Targets". The Moscow Times. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Ostroukh, Andrey (24 February 2022). "Military transport aircraft crashes in southern Russia -Interfax". Reuters.com. ராய்ட்டர்ஸ். Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Ukrainian minister says Russia has lost about 2,800 servicemen in attacks". Reuters. 25 February 2022.
- ↑ "Ukrainian military says it captured two Russian soldiers". The Jerusalem Post | JPost.com. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ ""Путін цинічно обдурив" – окупанти продовжують здаватися в полон ЗС" ["Putin cynically deceived" - the occupiers continue to surrender to the Armed Forces]. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ 16.0 16.1 16.2 Verkhovna Rada of Ukraine [ua_parliament] (25 February 2022). "General Staff of the Armed Forces on the current state of war in #Ukraine" (Tweet). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Russia-Ukraine war LIVE updates: Ukrainian border post hit by Russian missile, guards killed". India Today. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ 18.0 18.1 18.2 18.3 "What are the reported casualty figures so far?". BBC News. 25 February 2022.
- ↑ "Ukraine says more than 40 of its soldiers, 10 civilians killed". www.timesofisrael.com. AFP. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Zinets, Natalia; Marrow, Alexander (24 February 2022). "Ukrainian military plane shot down, five killed – authorities". Reuters. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Chance, Matthew; Lister, Tim; Smith-Spark, Laura; Regan, Helen (25 February 2022). "Battle for Ukrainian capital underway as Russian troops seek to encircle Kyiv". CNN. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Explosions heard across Ukraine as Russian military operation begins". Al Arabiya English. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ ""Counter offensive" ongoing in Donbas, says Russian military". CNN. 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ 24.0 24.1 24.2 24.3 24.4 Брифинг официального представителя Минобороны России, பார்க்கப்பட்ட நாள் 2022-02-25
- ↑ "Zelenskiy: 137 people have died in the Russian invasion". The Guardian. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225001236/https://www.theguardian.com/world/live/2022/feb/24/russia-invades-ukraine-declares-war-latest-news-live-updates-russian-invasion-vladimir-putin-explosions-bombing-kyiv-kharkiv?filterKeyEvents=false&page=with:block-62180f188f0814262e7ca863#block-62180f188f0814262e7ca863.
- ↑ "Some 100,000 Ukrainians have left their homes, as several thousand flee abroad -U.N. estimates". ராய்ட்டர்ஸ். 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224203646/https://www.reuters.com/world/europe/some-100000-ukrainians-have-left-their-homes-several-thousand-flee-abroad-un-2022-02-24/.
- ↑ Malsin, Jared. "Turkish-Owned Ship Hit by Bomb Off Coast of Odessa". Wall Street Journal. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Alertă în Marea Neagră! Navă a Republicii Moldova, atacată de ruși. Anunțul făcut de Ministerul Apărării din Ucraina". România TV. 25 February 2022. https://www.romaniatv.net/alerta-in-marea-neagra-nava-a-republicii-moldova-atacata-de-rusi-anuntul-facut-de-ministerul-apararii-din-ucraina_6272918.html.
- ↑ "BREAKING O navă sub pavilionul Republicii Moldova a fost lovită de un obuz în Marea Neagră / Tot echipajul e format din marinari ruși". G4Media. 25 February 2022. https://www.g4media.ro/breaking-o-nava-sub-pavilionul-republicii-moldova-a-fost-lovita-de-un-obuz-in-marea-neagra-tot-echipajul-e-format-din-marinari-rusi.html.
- ↑ "Panama-flagged ship attacked by Russian Navy". Newsroom Panama. 25 February 2022. https://newsroompanama.com/business/panama-flagged-ship-attacked-by-russian-navy.
- ↑ Adjn, Adis (25 February 2022). "Two more ships hit in the Black Sea". Splash 247. https://splash247.com/two-more-ships-hit-in-the-black-sea/.
- ↑ "Russia's invasion of Ukraine". தி எக்கனாமிஸ்ட். 26 February 2022. https://www.economist.com/briefing/2022/02/26/russias-invasion-of-ukraine.
- ↑ "Russia attacks Ukraine". CNN. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Украинские пограничники сообщили об атаке границы со стороны России и Белоруссии". Interfax. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Why is Russia invading Ukraine and what does Putin want?" (in en-GB). BBC News. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 19 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211219125518/https://www.bbc.com/news/world-europe-56720589.
- ↑ Morin, Rebecca (24 February 2022). "World leaders condemn Russian invasion of Ukraine; EU promises 'harshest' sanctions – live updates". USA Today. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Stewart, Briar; Seminoff, Corinne; Kozlov, Dmitry (24 February 2022). "More than 1,700 people detained in widespread Russian protests against Ukraine invasion". CBC News. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ How badly will Russia be hit by new sanctions?
- ↑ Russia Exclusion from SWIFT: what it entails
- ↑ "IndiGo to join Operation Ganga to evacuate stranded Indian nationals in Ukraine". இந்தியா டுடே. 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
- ↑ Gupta, Shishir (3 March 2022). "IAF places IL-76 on standby for students evacuation from Moscow". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
- ↑ Russia-Ukraine latest: Moscow controls 20 percent of Ukraine
- ↑ 100-வது நாளை எட்டியது ரஷ்ய தாக்குதல்: உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்
- ↑ உக்ரைன் நிலப்பரப்பில் 20 சதவீத பகுதி ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
- ↑ "பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது". Archived from the original on 2022-02-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ Amid ongoing conflict, Moscow-Kyiv officials meet near Belarus border
- ↑ ருசியா-உக்ரைன் பேச்சுவார்த்தை முடிவுகள் எட்டப்படாமல் முடிவுற்றது
- ↑ Latest Ukraine news: Guterres says dialogue must remain open
- ↑ [htmlhttps://www.maalaimalar.com/news/world/2022/03/05233528/3548979/Tamil-News-Moscow-Kyiv-to-hold-third-round-of-talks.vpf மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெறும் - உக்ரைன் தகவல்]
- ↑ uக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் நவீன் எஸ் ஞானகெளடா
- ↑ Ukraine: Russian troops take control of key city of Kherson – mayor
- ↑ 1 million refugees flee Ukraine in week since Russian invasion
- ↑ UN resolution against Ukraine invasion
- ↑ Russia seizes Europe's biggest nuclear plant in 'reckless' assault
- ↑ Russia-Ukraine war: Fire at Zaporizhzhia nuclear plant put out
- ↑ உக்ரைன் நகரங்கள் மீதான உருசியாவின் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது
- ↑ Russia Says Mariupol Steelworks "Liberated" As Ukrainian Troops Surrender
- ↑ உக்ரைன் போரில் மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா
- ↑ உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்கள் ரஷ்யா உடன் இணைப்பு - புதின் அறிவிப்பு
- ↑ உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியா வசமானது- அதிபர் புதின் அறிவிப்பு
- ↑ உக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது