நரேந்திர மோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேந்திர மோதி
14 ஆவது இந்தியப் பிரதமர்
பதவியில்
26 மே 2014 – தற்போது வரை
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்சி
ராம் நாத் கோவிந்த்
திரௌபதி முர்மு
முன்னையவர்மன்மோகன் சிங்
14 ஆவது குசராத்து முதல்வர்
பதவியில்
7 அக்டோபர் 2001 – 22 மே 2014
ஆளுநர்சுந்தர்சிங் பண்டாரி
கைலாசபதி மிசுரா
பல்ராம் சாக்கர்
நவால் கிசோர் சர்மா
எசு. சி. சமீர்
கம்லா பெனிவால்
முன்னையவர்கேசுபாய் படேல்
பின்னவர்ஆனந்திபென் படேல்
வாரணாசி தொகுதி
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்முரளி மனோகர் சோசி
குசராத்து மாநில மணிநகர் தொகுதிக்கான
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 சனவரி 2002 – 16 மே 2014
முன்னையவர்கமலேசு பட்டேல்
பின்னவர்சுரேசு பட்டேல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நரேந்திர தாமோதர்தாசு மோதி

17 செப்டம்பர் 1950 (1950-09-17) (அகவை 73)
வாட்நகர், மும்பை, இந்தியா
(இன்றைய குசராத்து)இந்தியா
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்யசோதாபென் (1968)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்
குசராத்து பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்
அரசு இணையதளம்

நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோதி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார்.[2] பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்தார்.[2]

அமைச்சகங்கள் மற்றும் துறைகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நேரடி கண்காணிப்பில் உள்ள அமைச்சகங்கள் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் ஆகும். துறைகள் அணு சக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகும்.

இளமைப் பருவம்

எட்டு வயதில், மோடி இராட்டிரிய சுவயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எசுஎசு) அறிமுகமானார் மற்றும் அதன் உள்ளூர் சகாக்களில் (பயிற்சி அமர்வுகளில்) கலந்து கொள்ளத் தொடங்கினார். அங்கு, வக்கீல் சாகேப்பு என்று பிரபலமாக அறியப்பட்ட இலட்சுமண்ராவ் இனாம்தாரை மோடி சந்தித்தார், அவர் அவரை ஆர்எசுஎசில் பால்சுவயம்சேவக் (சூனியர் கேடட்) ஆக சேர்த்து, அவரது அரசியல் வழிகாட்டியாக ஆனார்..[3] மோடி RSS உடன் பயிற்சியில் இருந்தபோது, ​​1980 இல் BJP யின் குசராத்து பிரிவின் சுதாபக உறுப்பினர்களான பாரதிய சனசங்கத் தலைவர்களான வசந்த் கசேந்திரகட்கர் மற்றும் நதலால் சக்தா ஆகியோரையும் சந்தித்தார்.

கல்வி

1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]

குடும்பம்

நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதீ மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014 ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[6]

குசராத்தின் முதல்வர்

அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001 இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

சர்ச்சைகள்

ஊடகங்கள் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர்.[7] இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[8][9][10] இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதீ உள்ளார்.[11][12][13][14]

கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[14][15]

பெண் ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.[16]

குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[17] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[18]

2014 நாடாளுமன்றத் தேர்தல்

பரப்புரை

2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் பதவி வேட்பாளர்

2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.[19]

 • வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 • வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜகவின் மக்களவைத் தலைவர்

பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.[20]

2019 மக்களவைத் தேர்தல்

2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர்.

இந்தியப் பிரதமர்

முதல் முறை

மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோதீ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.[21]

இரண்டாம் முறை

2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார்.[22][23][24][25]

ஆட்சி முறை

 • அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.[26]
 • தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[27]

அரசுப் பணியில் மோதியின் இருபதாண்டுகள்

7 அக்டோபர் 2001 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குசராத் மாநில் முதலமைச்சராக பொது வாழ்க்கையில் பணி துவங்கிய நரேந்திர மோதி, 7 அக்டோபர் 2020 முதல் இருபதாம் ஆண்டில் நுழைந்துள்ளார். இருபதாண்டுகளில் நரேந்திர மோதி, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறையும், இந்தியப் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளார்.[28][29][30][31][32][33][34]

வெளிநாட்டு விருதுகள்

வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோதி பெற்ற 11 உயரிய சிவிலியன் விருதுகள்:[36]

 1. ஏப்ரல் 2016 - சவூதி அரேபியா அரசின் மன்னர் அப்துல் அஜீஸ் விருது[37]
 2. 2016 - ஆப்கானித்தான் அரசின் காஜி அமீர் அமானுல்லா கான் விருது[38]
 3. 2018- பாலத்தீனம் வழங்கிய கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீனம் விருது[39]
 4. 2019 - ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆர்டர் ஆப் சையத் விருது [40]
 5. 2019- உருசியா அரசின் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ விருது[41]
 6. 2019 - மாலத்தீவு அரசின் Order of the Distinguished Rule of Nishan Izzuddin Award[42].
 7. 2019 - பக்ரைன் அரசின் மன்னர் ஹமாத் மறுமலர்ச்சி விருது[43]
 8. 2020 - ஐக்கிய அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட் விருது [44]
 9. 2021 - பூடான் அரசின் ஆர்டர் ஆப் தி டிராகன் கிங் விருது[45]
 10. மே 2023 - பிஜி அரசின் ஆர்டர் ஆப் பிஜி [46]
 11. சூன் 2023 - எகிப்து அரசின் ஆர்டர் ஆப் நைல் விருது[47]
 12. ஆகஸ்டு 2023 - கிரேக்க நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது.[48]

நூல்கள்

 1. சக்தி பாவ் (2015)
 2. சமூக நல்லிணக்கம் (2015)
 3. ஜோதி பூனா (2015)
 4. 'சமூக நல்லிணக்கம்' குஜராத்தி மொழியில் 'சமாஜிக் சம்ரஸ்தா' (2010)

பரிசுப் பொருட்கள்

குசராத் முதலமைச்சராக மோதி தனது பதவிகாலத்தில் கிடைத்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் வருடந்தோறும் ஏலம் விட்டு கன்யா கேலவாணி அபியான் என்ற பெயரினில் பெண் குழந்தைகள் திட்டத்திற்கு கொடுத்தார். 2003 முதல் 2014 வரை வருடந்தோறும் நடந்த இந்த ஏலம் மூலம் 89.96கோடி பெற்ப்பட்டது.[49]. பிரதமராகவதற்கு முன்பு 2014 மேமாதத்தில், குசராத் அரசு ஊழியர்களாக வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் பெண் குழந்தைகள் படிப்பிற்கு தனது சொந்த சேமிப்பிலிருந்து 21இலட்சம் நன்கொடையாக அளித்தார்.[50]

பிரதமர் மோதி தனது முதல் பதவிகாலத்தில் தனக்கு கிடைத்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் ஏலம் விடுவதின் மூலம் கிடைக்கும் பணத்தினை இந்தியாவின் ஜீவநதியான கங்கையைப் பாதுகாக்கும் "நமாமி கங்கா" திட்டத்திற்கு கொடுக்க முடிவு செய்தார். இவ்வாறு பரிசுப்பொருட்களை ஏலம் விடும் முதல் இந்தியப் பிரதமர் மோதி ஆவார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட 10இலட்சம் மதிப்பிலான அங்கியானது 4.3கோடி மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டு, அந்த தொகையானது நமாமி கங்கா திட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.[51]

 • முதல் முறையாக இந்திய கலாச்சார அமைச்சகத்தின் மேற்பார்வையில் 2019, ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் ஏறக்குறைய 2,000 பொருட்கள் ஏலம் விடப்பட்டது, அதைத் தொடர்ந்து 2019, ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இணையம் வழியாக-ஏலம் நடைபெற்றது.[52]
 • இரண்டாம் முறையாக 2019 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7வரை ஏலம் நடைபெற்றது. 2700க்கும் அதிகமான பரிசுப்பொருட்கள் தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டன.[53]
 • மூன்றாம் முறையாக 1300 பரிசுபொருட்களுக்கு 2021 செப்டம்பர் 17ல் இணையம் வழியாக ஏலம் நடைபெற்றது.[54][55]
 • நான்காம் முறையாக 2022 செப்டம்பர் 17முதல் அக்டோபர் 2வரை இணையம் வழியாக ஏலம் நடைபெற்றது. 1200 பரிசுபொருட்களின் அடிப்படை விலையின் கூட்டுத்தொகை 2கோடிக்கும் அதிகமாக கணக்கீடப்பட்டது.[56]

மக்கள் தொடர்பு

மோதி பிரதமரான பிறகு மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், 3 அக்டோபர் 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியத் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார்.மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்".[57][58]

மோதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை இராணுவ வீரர்களூடன் கொண்டாடிவருகின்றார்.[59][60][61]

வருடம் இடம் கூடுதல் தகவல்கள்
2014-அக்டோபர்-23 சியாச்சின், லடாக்
2015-நவம்பர்-11 அசல் உத்தர், பஞ்சாப் அமிர்தசரசிலுள்ள, தோக்ராய் போர் நினைவுச்சின்னத்தில் 1965போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தல்
2016-அக்டோபர்-20 கின்னவுர், இமாச்சல்பிரதேசம் சங்கோ கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
2017-அக்டோபர்-19 குரேசு பள்ளத்தாக்கு, சம்மூ&காசுமீர் பந்திப்போரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகில்
2018-நவம்பர்-7 கர்சில் கிராமம், உத்தரகாண்ட் இராணுவம் மற்றும் இந்தோ-திபேத்திய எல்லைப்புற வீரர்களுடன்
2019-அக்டோபர்-27 ரஜோரி, சம்மு&காசுமீர்
2020-நவம்பர்-14 லோங்வாலா, ராசுத்தான்
2021-நவம்பர்-04 நௌசேரா, சம்மு&காசுமீர்
2022-அக்டோபர்-24 கார்கில், லடாக்

2018 பிப்ரவரி 16 முதல், தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடும் "ப்ரிக்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சி மூலம் உரையாடுகின்றார்.

2023 ஜனவரி 27ல் ஆறாவது முறையாக, புதுதில்லி தல்கத்தோரா உள்ளரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க்ள் மத்தியில் நடைபெறுகிறது. இதற்கான பதிவுசெய்யும் பணி நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. 2022ல் 15.73 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், 2023ல் 38.8இலட்சம் பேர் உலகம் முழுவதிலிருந்தும் 155நாடுகளிலிருந்து இணையவழி நிகழ்ச்சிக்கு பதிவுசெய்துள்ளனர், 16இலட்சத்துக்கும் மேற்பட்ட மாநில தேர்வுவாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.[62]

சொத்து மதிப்பு

பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 இலட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.[63][64]

மேற்கோள்கள்

 1. "PM Modi has less than Rs 50,000 cash-in-hand, owns assets worth Rs 2.28 crore".
 2. 2.0 2.1 http://www.elections.in/political-leaders/narendra-modi.html
 3. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Modis-meteoric-rise/articleshow/1459210533.cms?referral=PM
 4. http://indiatoday.intoday.in/story/narendra-modi-degree-controversy-delhi-university-rti/1/903745.html
 5. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/globetrotting-pm-modi-was-weakest-in-international-relations/articleshow/52200607.cms
 6. 'என் மனைவி யசோதா பென்': மோடி தகவலால் பரபரப்பு
 7. Harris, Gardiner (13 September 2013). "Divisive Nationalist to Lead Opposition in Indian Vote". த நியூயார்க் டைம்ஸ் (Ahmedabad). http://www.nytimes.com/2013/09/14/world/asia/polarizing-nationalist-to-lead-opposition-in-indian-elections.html. பார்த்த நாள்: 15 September 2013. 
 8. "Yes, I am a Hindu nationalist: Narendra Modi". India Express. 13 July 2013. http://www.indianexpress.com/news/yes-i-am-a-hindu-nationalist/1141243/. ""Modi said he described himself as a Hindu nationalist because he was born Hindu: "I am nationalist. I'm patriotic. Nothing is wrong. I am a born Hindu. Nothing is wrong. So I'm a Hindu nationalist so yes, you can say I'm a Hindu nationalist because I'm a born Hindu."" 
 9. Menon, Kalyani Devaki (2012). Everyday Nationalism: Women of the Hindu Right in India. University of Pennsylvania Press. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0812222340. https://archive.org/details/isbn_9780812222340. "Yet, months after this violent pogrom against Muslims, the Hindu nationalist chief minister of Gujarat, Narendra Modi, went to the polls and won a resounding victory" 
 10. Mishra, Pankaj (2011). Kamala Visweswaran. ed. Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation. Wiley-Blackwell. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1405100625. "The chief minister of Gujarat, a young up-and-coming leader of the Hindu nationalists called Narendra Modi, quoted Isaac Newton to explain the killings of Muslims. “Every action”, he said, “has an equal and opposite reaction.”" 
 11. Nair, Rupam Jain (12 December 2007). "Edgy Indian state election going down to the wire". Reuters. Ahmedabad இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140930020457/http://www.reuters.com/article/2007/12/12/us-india-state-poll-idUSDEL17441120071212. பார்த்த நாள்: 10 October 2012. 
 12. Robinson, Simon (11 December 2007). "India's Voters Torn Over Politician". Time (Surat) இம் மூலத்தில் இருந்து 24 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130824163112/http://www.time.com/time/world/article/0,8599,1693370,00.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 13. Burke, Jason (28 March 2010). "Gujarat leader Narendra Modi grilled for 10 hours at massacre inquiry". The Guardian (Delhi). http://www.guardian.co.uk/world/2010/mar/28/gujarat-narendra-modi-massacre-inquiry-india. பார்த்த நாள்: 10 October 2012. 
 14. 14.0 14.1 Buncombe, Andrew (19 September 2011). "A rebirth dogged by controversy". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 15. David, Ruth (24 December 2007). "Controversial Gujarati Premier Confirmed in Office". Forbes. http://www.forbes.com/2007/12/24/narendra-modi-gujarat-face-markets-cx_rd_1224autofacescan01.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 16. தினமணி மதுரை, 2013-11-24, பக்.11
 17. Joseph, Manu (15 February 2012). "Shaking Off the Horror of the Past in India". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/02/16/world/asia/16iht-letter16.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 18. Jaffrelot, Christof (June 2013). "Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class". Studies in Indian Politics 1: Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class. 
 19. வதோதராவில் மோடி வேட்பு மனு தாக்கல்
 20. "I salute Constitution-makers, says Modi". த இந்து. 21 மே 2014. http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html. பார்த்த நாள்: 26 மே 2014. 
 21. "Modi now India's 15th PM". தி இந்து. 27 மே 2014. http://www.thehindu.com/news/national/modi-now-indias-15th-pm/article6050522.ece?homepage=true. பார்த்த நாள்: 27 மே 2014. 
 22. Narendra Modi sworn in for second term as India's Prime Minister
 23. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
 24. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
 25. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
 26. "100 days: Modi's first deadline to team". தி இந்து. 30 மே 2014. http://www.thehindu.com/news/national/100-days-modis-first-deadline-to-team/article6063352.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 30 மே 2014. 
 27. "Modi opposes move to include his life story in school syllabus". தி இந்து. 30 மே 2014. http://www.thehindu.com/news/national/modi-opposes-move-to-include-his-life-story-in-school-syllabus/article6064484.ece?homepage=true. பார்த்த நாள்: 30 மே 2014. 
 28. Modi completes 20 years as head of a government
 29. Reason for Modi’s longevity as an elected leader is his ability to challenge himself
 30. Narendra Modi as he enters 20th year as elected government head
 31. Two decades in office! PM Modi enters the 20th year as the head of a democratically-elected government
 32. PM Modi enters 20th year in public office
 33. https://www.dinamalar.com/news_detail.asp?id=2628494
 34. பிரதமர் மோடி புதிய மைல்கல்
 35. Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020
 36. வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற உயரிய சிவிலியன் விருதுகள்
 37. Order of King Abdulaziz
 38. Amir Amanullah Khan Award
 39. Grand Collar of the State of Palestine
 40. Order of Zayed
 41. Order of St. Andrew
 42. Order of the Distinguished Rule of Izzuddin
 43. King Hamad Order of the Renaissance
 44. Legion of Merit
 45. Order of the Dragon King
 46. Order of Fiji
 47. Order of the Nile
 48. பிரதமர் மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது: கிரீஸ் அதிபர் வழங்கினார்
 49. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/narendra-modi-donates-rs-21-lakh-from-personal-savings-for-educating-gujarat-government-staffs-daughters/articleshow/35526503.cms
 50. https://sg.news.yahoo.com/gifting-education-better-future-nari-shakti-modi-way-040420269.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAJsvU2xCUBadHKk-Oiso7i79us5ttB7GAcuZMFmlTddw1GHTMED0kxGXqPIcj1qDv0pPcG2MYrofS_XSUvmewtS9KGfoR8p1tqQ2xHKJAj_KGJOWsP-Tem-TvynxnfU1aRwqndF65jHXAxx0aRotvZPR8HWHiua3xrHljFr53Gib
 51. https://www.ndtv.com/india-news/pm-modis-suit-most-expensive-one-sold-at-auction-rules-guinness-records-1446306
 52. https://www.telegraphindia.com/india/inside-the-auction-of-narendra-modi-s-gifts-a-bidder-s-account/cid/1682993
 53. https://www.deccanherald.com/national/over-2700-gifts-to-pm-modi-on-auction-from-saturday-761369.html
 54. https://indianexpress.com/article/india/ministry-of-culture-e-auction-tomorrow-to-mark-pm-modi-birthday-7513386/
 55. https://www.dailypioneer.com/2021/pioneer-exclusive/gifts-given-to-modi-to--go-under-the-hammer.html
 56. https://www.pratidintime.com/national/auction-of-over-1000-gifts-received-by-pm-modi-starts-on-sept-17
 57. Dutta, Amrita Nayak (2021-07-21). "Why AIR & Doordarshan's revenue from PM Modi's 'Mann Ki Baat' fell by 90% in the last 3 yrs". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
 58. "'Mann Ki Baat' clocked Rs 30.8Cr in cumulative revenues from inception till FY21: I&B min". Exchange4media (in ஆங்கிலம்). 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.{{cite web}}: CS1 maint: url-status (link)
 59. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1870610
 60. https://timesofindia.indiatimes.com/india/siachen-to-kargil-how-pm-modi-has-celebrated-diwali-with-jawans-every-year/articleshow/95047692.cms
 61. https://www.republicworld.com/india-news/general-news/siachen-in-2014-to-kargil-in-2022-timeline-of-pm-modis-diwali-celebrations-with-soldiers-articleshow.html
 62. https://economictimes.indiatimes.com/news/india/over-200-students-teachers-participating-in-pm-modis-pariksha-pe-charcha-event-to-witness-r-day-parade/articleshow/97322818.cms
 63. பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு
 64. PM Modi's assets rise by Rs 26 lakh to Rs 2.23 crore; land holding donated

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
கேசுபாய் படேல்
குசராத்தின் முதலமைச்சர்
2001–2014
பின்னர்
ஆனந்திபென் படேல்
முன்னர்
மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர்
2014–முதல்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_மோதி&oldid=3926437" இலிருந்து மீள்விக்கப்பட்டது