உருகுவை
உருகுவை கிழக்குக் குடியரசு Oriental Republic of Uruguay República Oriental del Uruguay | |
|---|---|
| குறிக்கோள்: Libertad o Muerte "விடுதலை அல்லது இறப்பு" | |
| நாட்டுப்பண்: | |
| வைகாசியின் கதிரவன்[1][2] (Sun of May) | |
அமைவிடம்: உருகுவை (dark green) in South America | |
| தலைநகரம் | மொண்டேவீடியோ 34°53′S 56°10′W / 34.883°S 56.167°W |
| பெரிய நகர் | தலைநகர் |
| ஆட்சி மொழி(கள்) | |
| இனக் குழுகள் (2023)[5] |
|
| மக்கள் | உருகுவையர் |
| அரசாங்கம் | ஒற்றியாட்சி சனாதிபதி குடியரசு |
• அரசுத்தலைவர் | யமுந்தூ ஓர்சி |
| சட்டமன்றம் | பொதுச் சபை |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
| விடுதலை | |
• அறிவிப்பு | 25 ஆகத்து 1825 |
• அங்கீகாரம் | 27 ஆகத்து 1828 |
• நடப்பு அரசியலமைப்பு | 15 பெப்ரவரி 1967 |
| பரப்பு | |
• மொத்தம் | 176,215 km2 (68,037 sq mi)[6] (89-ஆவது) |
• நீர் (%) | 1.5 |
| மக்கள் தொகை | |
• 2023 கணக்கெடுப்பு | 3,499,451[7] (132-ஆவது) |
• அடர்த்தி | 19.5/km2 (50.5/sq mi) (206-ஆவது) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2022) | மத்திமம் |
| மமேசு (2023) | அதியுயர் · 48-ஆவது |
| நாணயம் | உருகுவை பேசோ (UYU) |
| நேர வலயம் | ஒ.அ.நே−03:00 (உருகுவை நேரம்) |
| திகதி அமைப்பு | நா/மா/ஆ |
| வாகனம் செலுத்தல் | வலம் |
| அழைப்புக்குறி | +598 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | UY |
| இணையக் குறி | .uy |
உருகுவை அல்லது உருகுவே (Uruguay, /ˈjʊərəɡwaɪ/ (ⓘ)[11] எசுப்பானியம்: [uɾuˈɣwaj] ⓘ; போர்த்துக்கீசம்: Uruguai, உருகுவாய்) அதிகாரபூர்வமாக உருகுவை கிழக்கத்தியக் குடியரசு ( Oriental Republic of Uruguay) என்பது தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மேற்கு, தென்மேற்கில் அர்கெந்தீனா, வக்கு, வடகிழக்கில் பிரேசில், தெற்கில் ரியோ டி லா பிளாட்ட என்ற கயவாய், தென்கிழக்கில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியன அமைந்துள்ளன. இது தென்னமெரிக்காவின் தெற்கு கூம்பு பகுதியில் ஒன்றாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 176,215 சதுர கிமீ ஆகும்.[7] உருகுவையின் மக்கள்தொகை 3.5 மில்லியன், இவர்களில் 2 மில்லியன் மக்கள் அதன் தலைநகர் மொண்டேவீடியோவில் உள்ளனர். மொண்டெவீடியோ மிகப்பெரிய நகரமும் ஆகும்.
உருகுவேயாக மாறிய பகுதியில் முதன்முதலில் வேட்டைக்காரர்களின் குழுக்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர்.[12] 1516-ஆம் ஆண்டில் இப்பகுதியை அடைந்த முதல் ஐரோப்பிய நாடுகாண் பயணி யுவான் டியாசு டி சோலிசு ஆவார், ஆனால் அந்தப் பகுதி அதன் அண்டை நாடுகளை விட பின்னரேயே குடியேற்றமயப்படுத்தப்பட்டது. ஐரோப்பியர்கள் வந்த காலத்தில், குரானி, சனா போன்ற பிற குழுக்களுடன் சேர்ந்து சாருவா மக்களும் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினராக இருந்தனர். இருப்பினும், இந்த மக்களில் யாரும் சமூக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பெரிய குழுக்களாக ஒழுங்கமைக்கப்படவில்லை, இது அவர்களின் வீழ்ச்சிக்குப் பங்களித்தது.[13] பிராந்திய மோதல்களுக்கு மத்தியில், போர்த்துகீசியர் 1680-இல் சாக்கிரமெந்தோ குடியேற்றத்தை நிறுவினர், எசுப்பானியர் மொண்டேவீடியோவை ஒரு இராணுவக் கோட்டையாக நிறுவினர். போர்த்துகல், எசுப்பானியா, பின்னர் ரியோ டி லா பிளாட்டாவின் ஐக்கிய மாகாணங்கள், பிரேசில் பேரரசு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வழிப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1811-இற்கும் 1828-இற்கும் இடையில் உருகுவை அதன் சுதந்திரத்தைப் பெற்றது. 1830-ஆம் ஆண்டில், நாடு அதன் அரசியலமைப்பை இயற்றி, முறையாக ஒரு இறையாண்மையுடனான சுதந்திர நாடாக நிறுவப்பட்டது.[14]
விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில், உருகுவை வெளிநாட்டு செல்வாக்கிற்கும் தலையீட்டிற்கும் உட்பட்டது, அதோடு தொடர்ச்சியான உள் மோதல்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகளும் இடம்பெற்றன.[15] 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, நாடு, முக்கியமாக எசுப்பானியா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளில் இருந்து, குறிப்பிடத்தக்க ஐரோப்பியக் குடியேற்ற அலைகளைக் கண்டது. இது அதன் மக்கள்தொகையைப் பெரிதும் பாதித்தது, நவீன கால உருகுவையப் பண்பாடு மற்றும் சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தது. தேசிய அரசியலில் இரண்டு அரசியல் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின: கொலராடோ கட்சி, தேசியக் கட்சி ஆகியவை ஆகும். இவை 19-ஆம் நூற்றாண்டில் பல உள்நாட்டுப் போர்களில் மோதின. இவை கூட்டாக 'பாரம்பரியக் கட்சிகள்' என்று அழைக்கப்படுகின்றன.[16] 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், முன்னோடி பொருளாதார, தொழிலாளர் மற்றும் சமூக சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக ஒரு மேம்பட்ட நலன்புரி அரசின் அடித்தளம் அமைக்கப்பட்டது. நீடித்த அரசியல் திரத்தன்மையின் காலகட்டத்துடன் இணைந்து, இந்த முன்னேற்றங்கள் நாட்டிற்கு "அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்ற நற்பெயரைப் பெற்றுத் தந்தது.[17] 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளும், தீவிர இடதுசாரி நகர்ப்புற கெரில்லாப் போருக்கு எதிரான போராட்டமும், அதன் உச்சக்கட்டமாக 1973-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்தது. இது 1985 வரை குடிமை-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியது.[18][19][20] உருகுவை இன்று ஒரு சனநாயக அரசியலமைப்புக் குடியரசாக உள்ளது, சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
மக்களாட்சி, அரசாங்க வெளிப்படைத்தன்மை, பொருளாதார சுதந்திரம், சமூக முன்னேற்றம், வருமான சமத்துவம், தனிநபர் வருமானம், புத்தாக்கம், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பன்னாட்டு அளவீடுகளில் உருகுவை ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளது.[21][22] உருகுவை ஓர் உயர் வருமான பொருளாதாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, கஞ்சாவை முழுமையாக சட்டப்பூர்வமாக்கியுள்ளது—உலகில் அவ்வாறு செய்த முதல் நாடு—அத்துடன் ஒரே பாலின திருமணம், கருக்கலைப்பு, கருணைக்கொலை ஆகியவற்றையும் சட்டபூர்வமாக்கியுள்ளது.[23][24] உருகுவே ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை ஆகியவற்றின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (river of the painted birds) என்று பொருள்.
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (Buenos Aires) வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.
பழங்குடி இனமான 'சருவா' காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்(Salsipuedes) என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் - செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது.
விளையாட்டுக்கள்
[தொகு]இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிரித்தானிய தீவுகளுக்கு வெளியே முதல் பன்னாட்டுப் போட்டி உருகுவே மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கிடையே மான்டிவீடியோவில் 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்றது.[25] உருகுவே 1924 ஆம் ஆண்டில் பாரிசு ஒலிம்பிக் போட்டியிலும்,[26] மீண்டும் 1928 ஆம் ஆண்டு ஆம்சுடர்டாமிலும் தங்கம் வென்றது.[27]
குறிப்புகள்
[தொகு]- ↑ உருகுவையின் அரசியலமைப்பு அல்லது எந்த ஆணையாலும் எசுப்பானிய மொழி ஒருபோதும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இது அனைத்து வகையான அரச, மற்றும் சமூகங்களிலும் நடைமுறைப்படி அதிகாரபூர்வமானது.
- ↑ சைகை மொழி 2001 முதல் சட்டப்படி அதிகாரபூர்வமானது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Crow, John A. (1992). The Epic of Latin America (4th ed.). Berkeley: University of California Press. p. 457. ISBN 978-0-520-07723-2.
In the meantime, while the crowd assembled in the plaza continued to shout its demands at the cabildo, the sun suddenly broke through the overhanging clouds and clothed the scene in brilliant light. The people looked upward with one accord and took it as a favorable omen for their cause. This was the origin of the ″sun of May″ which has appeared in the center of the Argentine flag and on the Argentine coat of arms ever since.
- ↑ Kopka, Deborah (2011). Central & South America. Dayton, OH: Lorenz Educational Press. p. 5. ISBN 978-1-4291-2251-1.
The sun's features are those of Inti, the இன்கா பேரரசுn sun god. The sun commemorates the appearance of the Sun through cloudy skies on May 25, 1810, during the first mass demonstration in favor of independence.
- ↑ Meyers, Stephen; Lockwood, Elizabeth (2014-12-06). "The Tale of Two Civil Societies: Comparing disability rights movements in Nicaragua and Uruguay" (in en). Disability Studies Quarterly 34 (4). doi:10.18061/dsq.v34i4.3845. பன்னாட்டுத் தர தொடர் எண்:2159-8371. https://dsq-sds.org/article/view/3845. பார்த்த நாள்: 30 May 2022.
- ↑ "Ascendencia étnico-racial principal, por categoría, según departamento - Censo 2023". 2024 (in ஸ்பானிஷ்). Instituto Nacional de Estadística. Retrieved 21 January 2025.
- ↑ "Ascendencia étnico-racial principal, por categoría, según departamento - Censo 2023". 2024 (in ஸ்பானிஷ்). Instituto Nacional de Estadística. Retrieved 21 January 2025.
- ↑ "Uruguay". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.). நடுவண் ஒற்று முகமை. Retrieved 22 June 2023. (Archived 2011 edition)
- ↑ 7.0 7.1 "Censo Nacional 2023 contabilizó 3.499.451 habitantes en Uruguay". Uruguay Presidencia (in ஸ்பானிஷ்). Retrieved 2024-10-12.
- ↑ 8.0 8.1 8.2 8.3 "Report for Selected Countries and Subjects: April 2024". imf.org. அனைத்துலக நாணய நிதியம்.
- ↑ "GINI index". World Bank. Archived from the original on 10 November 2016. Retrieved 15 July 2024.
- ↑ "Human Development Report 2025" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 755. ISBN 0-582-05383-8. entry "Uruguay"
- ↑ "Hace 13.000 años cazadores-recolectores exploraron y colonizaron planicie del río Cuareim" [13,000 years ago, hunter-gatherers explored and colonized the Cuareim River plain]. archivo.presidencia.gub.uy (in ஸ்பானிஷ்). Archived from the original on 18 March 2014. Retrieved 17 May 2021.
- ↑ "¿Por qué ya no hay indígenas en Uruguay?". El Observador (in ஸ்பானிஷ்). Retrieved 2025-01-11.
- ↑ Jacob, Raúl; Weinstein, Martin (1992). "Modern Uruguay, 1875–1903: Militarism 1875–90". In Rex A. Hudson; Sandra W. Meditz (eds.). Uruguay: A Country Study (2nd ed.). Washington DC: Federal Research Division, Library of Congress Country Studies. pp. 17–19. ISBN 978-0-8444-0737-1. Archived from the original on 30 April 2011. Retrieved 23 February 2011.
- ↑ Facal Santiago, Silvia (21 September 2007). Recorriendo el largo camino de la integración: los judíos alemanes en Uruguay [Traversing the long road of integration: German Jews in Uruguay]. Amérique Latine Histoire et Mémoire. Les Cahiers ALHIM.
- ↑ Barreiro, Julio (1993). "El sistema de partidos políticos en Uruguay" [The political party system in Uruguay] (PDF). Inter-American Court of Human Rights (in ஸ்பானிஷ்). Archived (PDF) from the original on Feb 7, 2025.
- ↑ "URUGUAY A HAVEN FOR REFUGEE SUMS; Gold Flows to 'Switzerland of Americas' Since Korean War – Foreign Trade Booms" (in en-US). The New York Times: p. 75. 1951-01-03 இம் மூலத்தில் இருந்து 11 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170811145157/http://www.nytimes.com/1951/01/03/archives/uruguay-a-haven-for-refugee-sums-gold-flows-to-switzerland-of.html.
- ↑ "Back to Democracy in Uruguay" (in en-US). Washington Post. 2023-12-27. https://www.washingtonpost.com/archive/politics/1984/12/01/back-to-democracy-in-uruguay/768ffe9f-4cf0-4741-ad4c-0a593e3bce6b/.
- ↑ Pastor, José Manuel Azcona (2004). Possible Paradises: Basque Emigration to Latin America. Reno, Nevada: University of Nevada Press. p. 232. ISBN 9780874174441.
- ↑ "Inmigrantes | 1811-2011". www.1811-2011.edu.uy (in ஸ்பானிஷ்). Archived from the original on 18 July 2024. Retrieved 2025-01-15.
- ↑ "Uruguay Rankings" (PDF). June 2013. Archived from the original (PDF) on 1 February 2017. Retrieved 21 April 2017 – via Embassy of the United States of America.
- ↑ "Spartacus Gay Travel Index" (PDF). spartacus.gayguide.travel. 29 February 2024. No. 8, p. 2. Archived (PDF) from the original on 14 September 2017. Retrieved 3 September 2020.
- ↑ "In a regional first, Uruguay passes a law allowing euthanasia". AP News (in ஆங்கிலம்). 2025-10-16. Retrieved 2025-11-17.
- ↑ "Uruguay legalises euthanasia". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-10-16. Retrieved 2025-11-17.
- ↑ Pelayes, Héctor Darío (24 September 2010). "ARGENTINA-URUGUAY Matches 1902–2009". RSSSF. Archived from the original on 5 January 2019. Retrieved 27 April 2011.
- ↑ "Paris, 1924". FIFA. Archived from the original on 15 June 2010. Retrieved 27 April 2011.
- ↑ "Amsterdam, 1928". FIFA. Archived from the original on 15 June 2010. Retrieved 27 April 2011.
புற இணைப்புகள்
[தொகு]- உருகுவை அரசு வலைவாசல் பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Uruguay. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
- Uruguay from UCB Libraries GovPubs
- உருகுவை குர்லியில்
- Uruguay profile from the BBC News
"Uruguay". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911). - Wikimedia Atlas of Uruguay
- யூடியூபில் Simplemente Uruguay
- Development Forecasts
- World Bank Summary Trade Statistics Uruguay
