ஜோஸ் டெ சான் மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Smartin.JPG

ஜோஸ் தெ சான் மார்ட்டின் (José de San Martín, 1778 - 1850) அர்கெந்தீன படைத்துறை தளபதி ஆவார். இவர் அர்கெந்தீனாவின் கொர்ரியன்தேசு மாநிலத்தில் யாபேயுவில் பிறந்தார். அர்கெந்தீனா, பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு எசுப்பானியாவிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தந்தவர். 1817இல் மென்டோசா பகுதியிலிருந்து அந்தீசு மலைத்தொடரை கடந்து சிலியை அடைந்தார். இவரும் சிமோன் பொலிவாரும் இணைந்து தென் அமெரிக்காவின் விடுதலை வீரர்களாக அறியப்படுகின்றனர்.