தோகாகத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.
1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது