மஸ்கத் (Muscat, (அரபு: مسقط) என்பது ஓமானின் மிகப்பெரிய நகரமும், அந்நாட்டின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 1,090,797 (2008) இல்) ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1500 கிமீ². இந்நகரம் கிபிமுதலாம் நூற்றாண்டில் இருந்து மேற்குலகிற்கும், கிழக்குலகிற்கும் இடையில் ஒரு வணிகத் துறைமுகமாக இருந்து வந்துள்ளது. பல்வேறு பழங்குடியினரால் ஆளப்பட்டு வந்த இந்நகரம் பின்னர் பாரசீகம் மற்றும் போர்த்துக்கல் போன்ற ஆதிக்கவாதிகளாலும் ஆளப்பட்டது. 18ம் நூற்றாண்டளவில் இது ஒரு பிராந்திய வல்லரசாகத் திகழ்ந்தது. அக்காலத்தின் இதன் ஆதிக்கம் கிழக்கு ஆப்பிரிக்கா, சன்சிபார் ஆகிய இடங்களுக்கும் பரவி இருந்தது.
1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது