மாலே (திவெயி: މާލެ), மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.
மாலே, பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட தீவாகும். மேலும், இது உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி கூடிய நகரமாகும். இந்நகரம் நான்கு பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
மாலே என்பது "மாகா ஆலை" என்ற சமஸ்கிருத மொழி சொல்லில் இருந்து வந்ததாகும். மாகா என்றால் பெரிய ஆலை ஆகும். மகா ஆலை என்பது அரண்மனை அல்லது தலைநகரை குறித்ததாகும்.
1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது