நூர் சுல்தான்
நூர் சுல்தான் | |
---|---|
நாடு | கசக்ஸ்தான் |
மாகாணம் | அக்மோலா |
தோற்றம் | 1998 |
அரசு | |
• Akim (மேயர்) | Imangali Tasmagambetov |
பரப்பளவு | |
• மொத்தம் | 722 km2 (279 sq mi) |
ஏற்றம் | 347 m (1,138 ft) |
மக்கள்தொகை (August 1, 2010)[1] | |
• மொத்தம் | 7,08,794 |
• அடர்த்தி | 958/km2 (2,480/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (BTT) |
அஞ்சற் குறியீடு | 010000–010015 |
இடக் குறியீடு | +7 7172[2] |
ISO 3166-2 | AST |
இலக்கத் தகடு | Z |
இணையதளம் | http://www.astana.kz |
நூர் சுல்தான் (ஆங்கில மொழி: Nur sutan, காசாக்கு மொழி: Нұр сұлтан / nur sultan /نور سلطان), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கில மொழி: Akmolinsk, உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கில மொழி: Tselinograd, உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கில மொழி: Akmola, காசாக்கு மொழி: Ақмола, 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது.6 மே 1998 அன்று முதல் 19 மார்ச் 2019 வரை இது அஸ்தானா என மறு பெயரிடப்பட்டிருந்தது. 20 மார்ச் 2019 அன்று, நீண்டகாலமாக ஆளும் கசாக் ஜனாதிபதி நூர்சுல்தான் நசர்பயேவின் நினைவாக அவர் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தலைநகர் அஸ்தானாவிலிருந்து அதன் தற்போதைய பெயரான நூர்-சுல்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் முதல் நாளில் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2010 жыл басынан 1 тамызға дейінгі Қазақстан Республикасы халық санының өзгеруі туралы". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-16.
- ↑ CODE OF ACCESS