நைப்பியிதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைப்பியிதோ
Naypyidaw
தலைநகரம்
நாடுமியான்மர்
பிரிவுஒன்றியப் பிராந்தியம்
துணைப்பிரிவுகள்8 நகரமைப்புக்கள்
குடியிருப்பு2005
ஒன்றிணைக்கப்பட்டது2008
அரசு
 • தலைவர்தளபதி தெயின் ஞுன்ற்
பரப்பளவு
 • மொத்தம்2,723.71 sq mi (7,054.37 km2)
மக்கள்தொகை
 (2009)[3]
 • மொத்தம்9,25,000
 • அடர்த்தி340/sq mi (130/km2)
 [4]
நேர வலயம்[[ஒசநே+06:30]] (மிநிநே)
Area code067

நைப்பியிதோ (Naypyidaw), என்பது மியான்மர் ஒன்றியக் குடியரசின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி, இது நைப்பியிதோ ஒன்றிய மண்டலம் என்ற பெரும்பகுதிக்கு உட்பட்டதாகும். 2005 நவம்பர் 6 ஆம் திகதி மியான்மர் நாட்டின் நிருவாகத் தலைநகரம், முன்னைய தலைநகரமான யங்கோனுக்கு வடக்கே கிட்டத்தட்ட 320 கிமீ தொலைவில் உள்ள பியின்மனா என்ற இடத்திற்கு மேற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்த பசுமையான நிலப் பகுதிக்கு அலுவல்முறையாக மாற்றப்பட்டது. இப்புதிய தலைநகரத்தின் அலுவல்முறைப் பெயர் மியான்மர் நாட்டின் வன்கருவிப் படைகள் நாளான 2006 மார்ச்சு 27 அன்று அறிவிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இவ்வூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை 2012 அளவில் நிறைவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[5] 2009 இல் இவ்வூரின் மொத்த மக்கட்டொகை 925,000 ஆக இருந்தது. அதன் காரணமாக இவ்வூர் யங்கோன் மற்றும் மண்டலை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மியான்மரின் மூன்றாவது பெரிய ஊராகத் திகழ்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளித் தொடுப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நைப்பியிதோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "News Briefs". The Myanmar Times. Myanmar Consolidated Media. 20 மார்ச் 2006. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2006. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Pedrosa, Veronica (20 November 2006). "Burma's 'seat of the kings'". அல்-ஜசீரா. http://english.aljazeera.net/NR/exeres/80733C47-7F1C-45EB-BB8E-805DB15BFE67.htm. பார்த்த நாள்: 21 November 2006. 
  3. "World Urbanization Prospects 2007". 2008. Archived from the original on 10 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 24 September 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Construction of Myanmar new capital continues". People's Daily (Xinhua News). 24 December 2009 இம் மூலத்தில் இருந்து 15 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121015103255/http://english.people.com.cn/90001/90777/90851/6851523.html. 
  5. Marshall Cavendish Corporation (2007). World and Its Peoples: Eastern and Southern Asia. Marshall Cavendish. p. 650.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைப்பியிதோ&oldid=3794204" இலிருந்து மீள்விக்கப்பட்டது