மியான்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Myanmar long form.svg
ப்யி-தௌங்-சு மியன்-மா நைங்-ஙன்-தௌ
மியான்மார் ஒன்றிய குடியரசு
பர்மா கொடி பர்மா சின்னம்
நாட்டுப்பண்
கபா மா கியை
Location of பர்மா
தலைநகரம் நைப்பியித்தௌ
19°45′N 96°6′E / 19.750°N 96.100°E / 19.750; 96.100
பெரிய நகரம் ரங்கூன்
ஆட்சி மொழி(கள்) பர்மியம்
பிரதேச மொழிகள் ஜிங்போ, ஷான், கரென், மொன்
மக்கள் பர்மியர்
அரசு நாடாளுமன்ற குடியரசு
 -  அதிபர் தைன் சைன்
 -  துணை அதிபர்கள் சாய் மவுத் காம்,
நயான் துவான்
தோற்றம்
 -  பகன் 1044-1287 
 -  சிறு இராச்சியங்கள் 1287-1531 
 -  தௌங்கூ 1531-1752 
 -  கொன்பௌங் 1752-1885 
 -  பிரித்தானிய இராச்சியம் 1886-1948 
 -  ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை ஜனவரி 4 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 676578 கிமீ² (40வது)
261227 சது. மை 
 -  நீர் (%) 3.06
மக்கள்தொகை
 -  2005-2006 மதிப்பீடு 55,400,000 (24வது)
 -  1983 குடிமதிப்பு 33,234,000 
 -  அடர்த்தி 75/கிமீ² (119வது)
193/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $93.77 பில்லியன் (59வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,691 (150வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.583 (மத்தியம்) (132வது)
நாணயம் கியட் (K) (mmK)
நேர வலயம் MMT (ஒ.ச.நே.+6:30)
இணைய குறி .mm
தொலைபேசி +95

மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.

பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "[[சுவேதகோன் விகாரை]" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர். தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான ரோஹிங்கிய என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது. [1]


இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மர்&oldid=2034531" இருந்து மீள்விக்கப்பட்டது