இரத்தினக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாதி, வில்சாதி ஆகிய கற்கள் வெட்டப்பட்டும், வெட்டப்படாமலும் (மேலிருந்து இடமாக) வைரம், வெட்டுப்படாத நீலக்கல், மாணிக்கம், வெட்டுப்படாத மரகதம், வெட்டுப்படாத செவ்வந்திக்கல்.

இரத்தினக்கல் அல்லது இரத்தினம் என்பது கனிமத் துண்டு. இது வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு அணிகலன் அல்லது ஏனைய அலங்கரிப்பு செய்ய பயன்படுகின்றது.[1][2] ஆயினும், குறிப்பிட்ட பாறைகள் (வைடூரியம் மற்றும் வேதியியல் பொருட்களான அம்பர் ஆகியவை கனிமங்கள் இல்லை. ஆயினும் அவை அணிகலன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு இரத்தினக்கல் என்றே கருதப்படுகின்றன.

அனேகமான இரத்தினக்கற்கள் கெட்டியானவை. ஆயினும், சில மென்மையான கனிமங்கள் அவற்றின் பளபளப்பு அல்லது ஏனைய கலை நயமுடைய பெறுமான பெளதிகப் பண்புகளினால் அணிகலன் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாகக் கிடைப்பதால் அதன் பண்பினால் இரத்தினக்கல் பெறுமதிமிக்கதாகக் காணப்படுகின்றது. அணிகலனுக்கு அப்பால் இவை தொல்பழங்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை விலை மதிப்பு மிக்க செதுக்கல் வேலைகளுக்கும் கலைப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினக்கல்&oldid=3512317" இருந்து மீள்விக்கப்பட்டது