கிழக்குத் திமோர்
தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு Repúblika Demokrátika Timor Lorosa'e República Democrática de Timor-Leste | |
---|---|
குறிக்கோள்: Honra, Pátria e Povo போர்த்துக்கேய: மானம், தாயகம், மக்கள் | |
நாட்டுப்பண்: பட்ரியா | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | டிலி |
ஆட்சி மொழி(கள்) | தெட்டும், போர்த்துக்கேய1 |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | José Ramos Horta |
• பிரதமர் | Taur Matan Ruak |
விடுதலை | |
• அறிவிப்பு | நவம்பர் 28 1975 |
• அங்கீகாரம் | மே 20 2002 |
பரப்பு | |
• மொத்தம் | 14,874 km2 (5,743 sq mi) (158வது) |
• நீர் (%) | Negligible |
மக்கள் தொகை | |
• யூலை 2005 மதிப்பிடு | 947,000 (155வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $370 மில்லியன் (நிலையில்லை) |
• தலைவிகிதம் | $400 (நிலையில்லை) |
மமேசு (2003) | 0.513 தாழ் · 140வது |
நாணயம் | அமெரிக்க டொலர்3 (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே+9 |
அழைப்புக்குறி | 670 |
இணையக் குறி | .tl |
1. ஆங்கிலம் மற்றும் இந்தோனேசிய மொழிகள் அரச வெலை மொழிகளாக அரசிலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 2. இந்தோனேசியா 1975 டிசம்பர் 7 இல் கிழக்குத் திமோரை ஆக்கிரமித்தது 1999 இல் வெளியேறியது |
கிழக்குத் திமோர் (East Timor, /ˌiːst ˈtiːmɔːr/ (ⓘ), தேதுனம்: Timór Lorosa'e, போர்த்துக்கேய மொழி: Timor-Leste), அல்லது திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of Timor-Leste, tiˈmɔr ˈlɛʃteɪ) என்பது தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாகும்.[1] இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடைந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்ட போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு கோருவதுண்டு.[2]
21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான கிழக்கு திமோர், பிலிப்பீன்சுடன் கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.