உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்காசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென் கிழக்கு ஆசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென்கிழக்காசியா
பரப்பளவு5,000,000 km2 (1,900,000 sq mi)
சனத்தொகை610,000,000
சனத்தொகை அடர்த்தி118.6/km2 (307/sq mi)
நாடுகள்
பிரதேசங்கள்
GDP (2011)$2.158 trillion (நாணய மாற்று வீதம்)
GDP per capita (2011)$3,538 (நாணய மாற்று வீதம்)
மொழிகள்
 
நேர வலயங்கள்ஒ.ச.நே + 05:30 (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) தொடக்கம் ஒ.ச.நே + 09:00 (இந்தோனேசியா) வரை
தலைநகரங்கள்
மிகப் பெரிய நகரங்கள்
தென்கிழக்கு ஆசியா

தென்கிழக்கு ஆசியா என்பது ஆசியா கண்டத்தில் இந்தியாவுக்கு கிழக்கிலும், சீனாவுக்கு தெற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கிலும் அமைந்த நாடுகளை குறிக்கும். ஆசியா கண்டத்தை சேர்ந்த நாடுகள் மற்றும் அதற்கு கிழக்கிலும் தென்கிழக்கிலும் அமைந்த தீவுகள் ஆகிய இரண்டு மண்டலங்களில் பொதுவாக இப்பகுதி பிரிந்திருக்கிறது.

மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கண்டத்தை சேர்ந்த நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தை சேர்ந்த தாய் பேரின மக்கள் மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் வசிக்கின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், புரூனை, கிழக்குத் திமோர் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கடல் மண்டல நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த ஆஸ்திரோனேசிய மக்கள் வசிக்கின்றனர்.

தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர்

[தொகு]
தொல்லியல் சான்று, கடாரம்

தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, சமசுகிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவப் பேரரசு வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்காசிய நாடுகளில் இந்துப் பேரரசு கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற பேரரசுகள்வரலாற்றில் பேசப்பட்டிருக்கமாட்டாது.

2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் நீதி நூல்களைப் பின்பற்றியே ஆட்சி செய்து வந்துள்ளன.

கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்) சோழப் பேரரசில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.

சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றைய காலகட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும்மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 30 குட்டி அரசுகள், சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்துப் பேரரசுகளான ‘அங்கோர் வாட்’ பேரரசும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.

7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து, 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்துப் பேரரசு தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் பேரரசும் வடக்கு சுமத்திரா முனையிலிருந்து, மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழப் பேரரசின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, கடாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.

கடாரத்தின் மீது படையெடுத்த சோழப் பேர ரசிடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன.மரக்கலங்களுக்கு பொறுப்பெற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.

  1. நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு, சிறு ரக மரக்கலங்கள்.
  2. வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள்.
  3. கடல் கடந்து போர்ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள்.

அரசியற் பிரிவுகள்

[தொகு]

சுதந்திரமான நாடுகள்

[தொகு]
நாடு பரப்பளவு (km2) சனத்தொகை(2011) சனத்தொகை அடர்த்தி (/km2) வருடாந்த அரச வருமானம்,
USD (2011)
வருடாந்த தனிநபர் வருமானம், USD (2011) மனித வளர்ச்சிச் சுட்டெண் தலைநகரம்
 புரூணை 5,765 425,890 74 15,533,000,000 $36,584 0.838 பண்டர் செரி பெகவன்
 மியான்மர் 676,578 62,417,000 92 51,925,000,000 $832 0.483 நைப்பியிதோ
 கம்போடியா 181,035 15,103,000 84 12,861,000,000 $852 0.523 புனோம் பென்
 கிழக்குத் திமோர் 14,874 1,093,000 74 4,315,000,000 $3,949 0.495 டிலி
 இந்தோனேசியா 1,904,569 241,030,522 127 845,680,000,000 $3,509 0.617 ஜகார்த்தா
 லாவோஸ் 236,800 6,556,000 28 7,891,000,000 $1,204 0.524 வியஞ்சான்
 மலேசியா 329,847 28,731,000 87 278,680,000,000 $10,466 0.761 கோலாலம்பூர்
 பிலிப்பீன்சு 300,000 95,856,000 320 213,129,000,000 $2,223 0.644 மனிலா
 சிங்கப்பூர் 724 5,274,700 7,285 259,849,000,000 $49,271 0.866 சிங்கப்பூர்
 தாய்லாந்து 513,120 64,076,000 125 345,649,000,000 $5,394 0.682 பேங்காக்
 வியட்நாம் 331,210 89,316,000 270 122,722,000,000 $1,374 0.593 ஹனோய்

வேற்று நாட்டில் தங்கியிருக்கும் பிரதேசங்கள்

[தொகு]
பிரதேசம் பரப்பளவு (km2) சனத்தொகை சனத்தொகை அடர்த்தி (/km2)
 கிறிசுத்துமசு தீவுகள் 135 1,402 10.4
 கொக்கோசு (கீலிங்) தீவுகள் 14 596 42.6
 ஆங்காங் 1,104 7,061,200 6,480
 மக்காவு 29.5 568,700 18,568

வேற்று நாடுகளின் மாகாணங்கள்

[தொகு]
பிரதேசம் பரப்பளவு (km2) சனத்தொகை சனத்தொகை அடர்த்தி (/km2)
இந்தியா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 8,250 379,944 46
சீனா ஹைனான் 33,920 8,671,518 254.7

ஆசியாவின் மற்ற மண்டலங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ASEAN Community in Figures (ACIF) 2013 (PDF) (6th ed.). Jakarta: ASEAN. Feb 2014. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-602-7643-73-4. Archived from the original (PDF) on 4 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  2. Klaus Kästle (10 September 2013). "Map of Southeast Asia Region". Nations Online Project. One World – Nations Online. Archived from the original on 20 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 September 2013. Southeast Asia is a vast subregion of Asia, roughly described as geographically situated east of the Indian subcontinent, south of China, and northwest of Australia. The region is located between the Indian Ocean and the Bay of Bengal in the west, the Philippine Sea, the South China Sea, and the Pacific Ocean in the east.
  3. Whelley, Patrick L.; Newhall, Christopher G.; Bradley, Kyle E. (2015). "The frequency of explosive volcanic eruptions in Southeast Asia". Bulletin of Volcanology 77 (1): 1. doi:10.1007/s00445-014-0893-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0258-8900. பப்மெட்:26097277. Bibcode: 2015BVol...77....1W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கிழக்காசியா&oldid=4099710" இலிருந்து மீள்விக்கப்பட்டது