சுராபாயா
சுராபாயா | |
|---|---|
| City of Surabaya Kota Surabaya | |
சுராபாயா புறநகர் பாலாய் பெமுடா துஞ்சுங்கான் சாலை வீரர்கள் நினைவகம் மஜபாகித் விடுதி | |
| குறிக்கோளுரை: Sura ing Baya | |
![]() | |
| ஆள்கூறுகள்: 07°14′45″S 112°44′16″E / 7.24583°S 112.73778°E | |
| நாடு | |
| பகுதி | ஜாவா |
| மாநிலம் | |
| உருவாகம் | 1037[1] |
| நிறுவல் | 31 மே 1293[2] |
| மாநகரம் | 1 ஏப்பிரல் 1906[3] |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 335.93 km2 (129.70 sq mi) |
| • நகர்ப்புறம் | 2,246.53 km2 (867.39 sq mi) |
| • மாநகரம் | 6,309.34 km2 (2,436.05 sq mi) |
| ஏற்றம் | 5 m (16 ft) |
| மக்கள்தொகை (mid 2024 estimate [4]) | |
| • மாநகரம் | 30,18,022 |
| • தரவரிசை | இந்தோனேசிய மாநகரங்களின் மக்கள்தொகை பட்டியல் ( Indonesian cities by population) (2-ஆவது) |
| • அடர்த்தி | 8,583.47/km2 (22,231.1/sq mi) |
| • நகர்ப்புறம் | 63,73,373 |
| • நகர்ப்புற அடர்த்தி | 2,800/km2 (7,300/sq mi) |
| • பெருநகர் | 1,00,81,343 |
| • பெருநகர் அடர்த்தி | 1,615/km2 (4,180/sq mi) |
| இனங்கள் | Surabayan |
| மக்கள்தொகை | |
| • இனக்குழுக்கள் (2017 மதிப்பீடு)[6] | பட்டியல்
|
| • சமயம்[7] | பட்டியல்
|
| அஞ்சல் | 60111 – 60299 |
| தொலைபேசி | (+62) 31 |
| போக்குவரத்து | L |
| GDP[8] | 2023 |
| - மொத்தம் | |
| HDI (2024) | |
| இணையதளம் | www.surabaya.go.id |
சுராபாயா அல்லது சொராபாயா, சோரெபாயா, சுராபயா (இந்தோனேசியம்: Surabaya; ஆங்கிலம்: City of Surabaya) என்பது இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு சாவகத் தீவின் வடக்கு கடற்கரையோரமாக பிரந்தாஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் மதுரா நீரிணையின் ஓரத்தில் இந்த மாநகரம் அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு இதன் மக்கள் தொகை 3,018,022 (1,494,734 ஆண்கள் மற்றும் 1,523,288 பெண்கள்) ஆகும்.[4]
சுராபாயா பெருநகரப் பகுதியில் (Surabaya metropolitan area) அதன் மக்கள் தொகை ஏறக்குறைய 10 மில்லியன் என கணக்கிடப்பட்டு உள்ளது.[5] இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகவும் ஔராபாயா விளங்குகிறது.[9] 2023 ஆம் ஆண்டில், மாநகரின் மொத்த உற்பத்தித் திறன் US$ 150.294 பில்லியன் என மதிப்பிடப்பட்டது.
பொது
[தொகு]1045 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இரண்டு ஜாவானிய இராச்சியங்களில் ஒன்றான சங்காலா இராச்சியத்தின் (Janggala) மூலமாக இந்த நகரத்தில் 10-ஆம் நூற்றாண்டில், முதல் குடியேற்றம் நடைபெற்றது. ஏர்லங்கா அரசர் தம்முடைய இரண்டு மகன்களுக்கு ஆதரவாக தம்முடைய அரியணையைத் துறந்தபோது சங்காலா இராச்சியம் இராச்சியம் உருவாக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் சுராபாயா, ஒரு பெரிய அரசியல் இராணுவ சக்தியாகவும், மயாபாகித்து பேரரசின் கீழ் கிழக்கு சாவகத் தீவில், ஒரு பெரிய துறைமுகமாகவும் விளங்கியது.[10] 15-ஆம்; 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சுராபாயா மாநகரம் இடச்சு ஆதிக்கப் பிடியில் சிக்கியது. படிப்படியாக ஓர் இடச்சு நகரமாகவே வளர்ந்தது.
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்
[தொகு]பிரந்தாஸ் ஆற்றுக் கழிமுகத்தில் சுராபாயா நகரம் அமைந்திருந்ததாலும், ஜாவா கடல் வழியாக மலாக்காவிற்கும் மலுக்கு தீவுகளுக்கும் இடையிலான வணிகப் பாதையாலும், ஏற்கனவே சுராபாயா ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக இருந்தது. மயாபாகித்து பேரரசு வீழ்ச்சி அடைந்த போது, சுராபாயாவின் பிரபு டெமாக் சுல்தானகத்தின் (Demak Sultanate)எழுச்சியை எதிர்த்தார். இருப்பினும் 1530-ஆம் ஆன்டில் டெமாக் சுல்தானகத்தின் ஆட்சிக்கு அடிபணிந்தார்.[11][12] 1546-இல் டெமாக் சுல்தானகத்தின் சுல்தான் திரெங்கானா (Sultan Trenggana) இறந்த பிறகு சுராபாயா விடுதலை பெற்றது.[13][14]
18-ஆம் நூற்றாண்டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, சுராபாயா இடச்சு கிழக்கிந்திய தீவுகளில் மிகப்பெரிய நகரமாக இருந்தது. மேலும் அது இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் மிக முக்கிய வணிக மையமாகவும் இருந்தது. அந்த நேரத்தில் சாங்காய் மற்றும் ஆங்காங் ஆகியவை மட்டுமே சுராபாயாவின் போட்டியாளர்களாக இருந்தன.[10]
இந்தோனேசிய தேசிய புரடசி
[தொகு]இந்தோனேசிய தேசிய புரட்சியின் போது, இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவுகள் கிட்ட; அவற்றின் தொடர்ச்சியாக நடைபெற்ற சுராபாயா போர் (Battle of Surabaya) இந்தோனேசிய விடுதலைக்கு வித்திட்டது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்கு தான் இந்தோனேசியாவின் முதல் அரசுத் தலைவர் சுகர்ணோ பிறந்தார்.
பெயர்க் காரணம்
[தொகு]
சுராபாயா என்ற பெயர் உள்ளூர் வழக்கில் "சுரா" அல்லது "சுரோ" (சுறா), "பாயா" அல்லது "பொயோ" (முதலை) என்ற சொற்களிலிருந்து உருவானது.
இந்தப் பகுதியின் இவ்விரு உயிரினங்களும் "மிக வலிமையான, செல்வாக்குள்ள விலங்கு" என்ற பட்டத்திற்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதாக நாட்டார் வழக்கு உள்ளது. இறுதியில் இரண்டும் அமைதி உடன்பாடு கண்டு தங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டன. சுறாவின் ஆட்பகுதி கடலாகவும் முதலையின் ஆட்பகுதி நிலப்பகுதியாகவும் பிரிக்கப்பட்டன. இருப்பினும், ஒருநாள் சுறா ஆற்று கழிமுகத்தில் தேடலுக்காக வந்தது;
இதனால் கோபமுற்ற முதலை, ஆறு நிலப்பகுதியில் நீள்தொலைவு செல்வதால் ஆற்றுப்பகுதி தனக்குரியதாக வழக்காடியது. இதனால் மீண்டும் சண்டை மூண்டது. இறுதியில் சுறா தோல்வியுற்றுக் கடலுக்கே திரும்பியது; அன்றுமுதல் முதலை தற்போதைய நகரம் அமைந்துள்ள ஆற்றுக் கழிமுகப் பகுதியில் ஆட்சி புரிகின்றது.[15]
சுற்றுலா தலங்கள்:
[தொகு]- சுராபாயா உயிரியல் பூங்கா (Surabaya Zoo): 15 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா, சுராபாயாவில் உள்ள ஒரு முக்கிய ஈர்ப்பாகும். இந்த உயிரியல் பூங்காவில் 197 இனங்களைச் சேர்ந்த 3,459 விலங்குகள் உள்ளதாக 28 சனவரி 2014 அன்று சுராபாயா உயிரியல் பூங்கா நிருவாகம் அறிவித்தது,
- செம்பூர்ணா இல்லம் (House of Sampoerna): இது ஒரு புகையிலை அருங்காட்சியகம்; மற்றும் செம்பூர்ணா அருங்காட்சியகதின் தலைமையகமும் ஆகும். 1862-ஆம் ஆண்டில் இடச்சு காலனிய பாணியில் கட்டப்பட்ட இந்த வளாகம், தற்போது பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளமாக உள்ளது.
- வீரர்கள் நினைவுச்சின்னம் (Heroes Monument) இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமான இந்த நினைவுச்சின்னம், இந்தோனேசியாவின் தேசியவாத உணர்வைப் பிரதிபலிக்கிறது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Continental Sales, Incorporated. p. 246. ISBN 9789814155670.
- ↑ "Pasar Keputran Utara | Pasar Surya".
- ↑ Perkembangan Kota Dan Arsitektur Kolonial Belanda Di Surabaya, 1870–1940. Diterbitkan atas kerjasama Lembaga Penelitian dan Pengabdian kepada Masyarakat, Universitas Kristen PETRA Surabaya dan Penerbit ANDI Yogyakarta. January 1, 1996. ISBN 9789795333739 – via Google Books.
- ↑ 4.0 4.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Kota Surabaya Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.3578)
- ↑ 5.0 5.1 "Demographia World Urban Areas, 18th Annual Edition" (PDF). July 2022. Retrieved 29 March 2023.
- ↑ DPM & PTSP Kota Surabaya. "Demografi". dpm-ptsp.surabaya.go.id. Archived from the original on 2021-07-19. Retrieved 2022-04-01.
- ↑ Statistics Indonesia. "Surabaya Municipality in Figures 2017". surabayakota.bps.go.id. Archived from the original on 2019-04-01. Retrieved 2019-04-01.
- ↑ Badan Pusat Statistik (2024). Provinsi Jawa Timur Dalam Angka 2024. Surabaya: Badan Pusat Statistik.
- ↑ "Indonesia: Java (Regencies, Cities and Districts) – Population Statistics, Charts and Map".
- ↑ 10.0 10.1 Dick, Howard W. (2003). Surabaya, City of Work: A Socioeconomic History, 1900–2000. Research in international studies: Southeast Asia series. Vol. 106. Singapore University Press. ISBN 978-9971-69-264-3.
- ↑ Pigeaud 1976, ப. 16.
- ↑ Ricklefs 2008, ப. 39.
- ↑ Pigeaud 1976, ப. 28.
- ↑ Akhmad Saiful Ali 1994, ப. 32.
- ↑ Irwan Rouf & Shenia Ananda. Rangkuman 100 Cerita Rakyat Indonesia dari Sabang sampai Merauke: Asal Usul Nama Kota Surabaya (in Indonesian). MediaKita. p. 60. ISBN 9786029003826. Retrieved 17 November 2014.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
மேற்கோள் நூல்கள்
[தொகு]- Akhmad Saiful Ali (1994). Ekspansi Mataram terhadap Surabaya Abad ke-17 (Thesis) (in இந்தோனேஷியன்). Surabaya: Islamic Institute of Sunan Ampel.
- Pigeaud, Theodore Gauthier Thomas (1976). Islamic States in Java 1500–1700: Eight Dutch Books and Articles by Dr H. J. de Graaf. The Hague: Martinus Nijhoff. ISBN 978-90-247-1876-4.
- Pigeaud, Theodore Gauthier Thomas (1962). Java in the 14th Century: A Study in Cultural History (3rd ed.). Leiden: Springer Science Business Media. p. 243. ISBN 978-94-0177095-8.
- Dick, Howard W. (2002). Surabaya, City of Work: A Socioeconomic History, 1900–2000. Athens, Ohio: Ohio University Press. ISBN 978-0-89680-221-6.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் சுராபாயா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- அலுவல்முறை வலைத்தளம்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சுராபாயா
