மூடா ஆறு

ஆள்கூறுகள்: 5°41′00″N 100°21′00″E / 5.68333°N 100.35000°E / 5.68333; 100.35000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூடா ஆறு
Muda River
மூடா ஆறு is located in மலேசியா
மூடா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஉலு மூடா காடு, சிக் மாவட்டம்
கெடா  மலேசியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
5°41′00″N 100°21′00″E / 5.68333°N 100.35000°E / 5.68333; 100.35000
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்203 km (126 mi)
வடிநில அளவு4,302 km2 (1,661 sq mi)[2]
வெளியேற்றம் 
 ⁃ சராசரி105 m3/s (3,700 cu ft/s)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
மக்கள்தொகைஆற்றங்கரையில் உள்ள நகரங்கள் மற்றும் குடியிருப்புகள்
சிக் மாவட்டம்
கோலா கெட்டில்
கெப்பாலா பத்தாஸ்
சுங்கை பட்டாணி
கோலா மூடா
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகெட்டில் ஆறு; செடிம் ஆறு

மூடா ஆறு (மலாய்: Sungai Muda; ஆங்கிலம்: Muda River) என்பது மலேசியாவின் கெடா மாநிலத்தில் மிக நீளமான ஆறு. 178 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, மலாக்கா நீரிணையை அடைவதற்கு முன், கோலா மூடா, பாலிங், சிக் மாவட்டம் மற்றும் கூலிம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.[3]

கெடா, பினாங்கு மாநிலங்களுக்கு எல்லையாக அமைந்து உள்ள இந்த ஆறு பினாங்குமாநிலத்தின், செபராங் பிறை பகுதிக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் மூடா ஆற்றுப் படுகையின் நெல் சாகுபடிக்குப் பாசன அடிப்படையாகவும் உள்ளது.[3]

ஆற்றுப் படுகையின் நகரங்கள் மற்றும் குடியிருப்புகள்[தொகு]

உள்கட்டமைப்பு[தொகு]

மூடா ஆற்றில், 2004-ஆம் ஆண்டு, 360 மில்லியன் ரிங்கிட் செலவில் பெரிஸ் அணை (Beris Dam) கட்டப்பட்டது. நிலப் பாசனத்திற்குக் கிடைக்கும் தண்ணீரைப் பெருக்கவும்; மூடா நதிப் படுகையில் உள்ள நீரின் ஓட்டத்தைச் சீராக்கவும் அந்த அணை கட்டப்பட்டது.[4]

பருவமழைக் காலத்தில், மூடா ஆற்றில் பெரும்பாலும் மழை வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடும். 2003 அக்டோபர் 6-ஆம் தேதி, மூடா ஆற்றின் நீர் அளவீடு, வரலாறு காணாத அளவிற்கு 1340 m³/s-ஆக உயர்ந்து, வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.[5]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடா_ஆறு&oldid=3729722" இருந்து மீள்விக்கப்பட்டது