மலாக்கா நீரிணை

ஆள்கூறுகள்: 4°N 100°E / 4°N 100°E / 4; 100 (Strait of Malacca)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா நீரிணை
Straits of Malacca
கிழக்கே பசிபிக் பெருங்கடலையும் மேற்கில் இந்தியப் பெருங்கடலையும் மலாக்கா நீரிணை இணைக்கிறது
அமைவிடம்அந்தமான் கடல் - சிங்கப்பூர் நீரிணை
ஆள்கூறுகள்4°N 100°E / 4°N 100°E / 4; 100 (Strait of Malacca)
வகைநீரிணை
பூர்வீக பெயர்Selat Melaka Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள் தாய்லாந்து
 மலேசியா
 சிங்கப்பூர்
 இந்தோனேசியா
 இந்தியா
அதிகபட்ச நீளம்930 km (580 mi)
குறைந்தபட்ச அகலம்38 km (24 mi)
சராசரி ஆழம்25 மீட்டர்கள் (82 அடி)
குடியேற்றங்கள்மலாக்கா
கிள்ளான் துறைமுகம்
பினாங்கு
மேடான்
புக்கெட்
சத்துன் மாநிலம்
ஆச்சே
ரியாவ்
போர்ட் பிளேர்

மலாக்கா நீரிணை (ஆங்கிலம்: Strait of Malacca அல்லது Straits of Malacca; மலாய் மொழி: Selat Melaka; சீனம்: 马六甲海峡; தாய்லாந்து மொழி: ช่องแคบมะละกา; ஜாவி: سلت ملاک; இந்தி: मलक्का जलडमरूमध्य) என்பது மலேசியத் தீபகற்பத்திற்கும், இந்தோனேசியா, சுமத்திரா தீவுக்கும் இடையில் உள்ள 805 கி.மீ. நீளமான நீரிணை ஆகும்.[1]

உலகின் மிக முக்கிய கப்பல் பாதையாக உள்ள இந்த நீரிணையின் முக்கியத்துவம் சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் ஆகியவற்றுக்கு ஒப்பானது. இந்த நீரிணை பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது.

பொது[தொகு]

ஆண்டுதோறும் 50,000 கடற்கலங்கள் இந்த நீரிணையில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மைய காலங்களில் இந்த நீரிணையில் கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் பெயரை இந்த நீரிணை பெற்றுள்ளது.

இந்நீரிணை இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கின்றது.

வரலாறு[தொகு]

மலாக்கா நகரத்தில் இருந்து மலாக்கா நீரிணை; புலாவ் பெசார் தீவு தொலைவில் தெரிகிறது.

அரேபியா, ஆப்பிரிக்கா, பாரசீகம் மற்றும் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்த ஆரம்ப கால வர்த்தகர்கள் சீனா குவாங்சோ நகருக்கு போவதற்கு முன்பு கெடாவிற்குச் சென்றனர். அந்தக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தின் மேற்கு துறைமுகமாக கெடா, செயல்பட்டது.[2]

அந்த வணிர்கள் கண்ணாடி பொருட்கள், கற்பூரம், பருத்தி பொருட்கள், தந்தம், சந்தனம், வாசனைத் திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்தனர்.

மலாக்கா நீரிணையில் வணிகப் பாதை[தொகு]

இந்த வணிகர்கள் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பருவக்காற்று வீசும் வழியாகக் கெடாவுக்குச் சென்றனர். அவர்கள் டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் திரும்பினர்.

மலாயா தீபகற்பத்தின் கிழக்குத் துறைமுகங்களான இலங்காசுகம் மற்றும் கிளாந்தான் போன்ற பகுதிகளுக்குத் தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்லப் பட்டன. அந்தத் தரைவழிப் பயணங்களின் போது தங்குமிடங்கள், தொழிலாளர்கள், சிறிய கப்பல்கள், மூங்கில் படகுகள், யானைகள் ஆகியவற்றைக் கெடா துறைமுகம் வழங்கி வந்தது.[2]

6-ஆம் நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்துகள் மலாக்கா நீரிணையை வர்த்தகப் பாதையாகப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, கெடா மற்றும் பூனான் ஆகிய இடங்கள் பிரபலமான துறைமுகங்களாக இருந்தன.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சீனாவில் இருந்து வரும் கப்பல்கள், மலாயா தீபகற்பத்தின் துறைமுகங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கின.[3]

கடல்சார் அதிகாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசு[தொகு]

கோலா சிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி குன்றில் இருந்து ஒரு காட்சி; மலாக்கா நீரிணையில் பயணம் செய்யும் ஒரு கப்பல்

7-ஆம் நூற்றாண்டில் சுமத்திரா பலேம்பாங் பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீ விஜய பேரரசு கடல்சார் அதிகாரத்தில் வளர்ச்சி பெற்று உச்சத்தில் உயர்ந்து நின்றது. மேலும் அதன் செல்வாக்கு மலாய் தீபகற்பம் மற்றும் ஜாவா வரை விரிவடைந்து இருந்தது.

கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில், மலாக்கா நீரிணை மற்றும் சுந்தா நீரிணை ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் ஸ்ரீ விஜயப் பேரரசு தன் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்தது.[3]

வாசனைப் பொருள்கள் வணிகம்[தொகு]

அந்த இரு நீரிணைகளின் இருபுறமும் உள்ள போட்டித் துறைமுகங்களில் தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், ஸ்ரீ விஜயப் பேரரசு அதன் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்த ஆதிக்கம் சுமார் 700 ஆண்டுகள் வரை நீடித்தது.

இலாபகரமான வாசனைப் பொருள்களின் வணிகத்தில் இருந்து ஸ்ரீ விஜயப் பேரரசு பெரும் வருமானத்தைப் பெற்றது. எ.கா. சீனாவுடனான வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய மற்றும் அரபு வணிகர்களுடன் வர்த்தக அமைப்பு.

முக்கியமான கடல் வர்த்தகப் பாதை[தொகு]

அந்த வகையில் மலாக்கா நீரிணை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக மாறியது.[3]

15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் எழுச்சி, ஜொகூர் சுல்தானகம் மற்றும் சிங்கப்பூரின் நவீன நகர எழுச்சி போன்றவற்றினால், மலாக்கா நீரிணையின் முக்கியத்துவம் உலகளாவிய வர்த்தக வலையமைப்புகளில் 20-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்தது.

17-ஆம் நூற்றாண்டில் இருந்து, இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான முக்கிய கப்பல் கால்வாயாக மலாக்கா நீரிணை விளங்கி உள்ளது. பல்வேறு முக்கியப் பேரரசுகள் வெவ்வேறு வரலாற்றுக் காலக் கட்டங்களில் இந்த நீரிணையை நிர்வகித்து உள்ளன.[4]

மேற்கோள்[தொகு]

  1. Winn, Patrick (27 Mar 2014). "Strait of Malacca Is World's New Piracy Hotspot". NBC News இம் மூலத்தில் இருந்து 2017-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170315003313/https://www.nbcnews.com/news/world/strait-malacca-worlds-new-piracy-hotspot-n63576. 
  2. 2.0 2.1 "The Strait of Malacca – a historical shipping metropolis « World Ocean Review". பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  3. 3.0 3.1 3.2 "The Straits of Malacca connect the Indian Ocean basin to the South China Sea. China- bound maritime trade from India, Persia, and the Arabian Peninsula must either pass by Malacca or travel much farther to the south to the Sunda Strait between Sumatra and Java". பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  4. Pineda, Guillermo (2012). "The Strait of Malacca as one of the most important geopolitical regions for the People's Republic of China.". Academia.edu. https://www.academia.edu/1931497. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_நீரிணை&oldid=3627545" இலிருந்து மீள்விக்கப்பட்டது