பாலாபாக் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலாபாக் நீரிணை
Balabac Strait
Balabac Strait Sunset.jpg
பாலாபாக் நீரிணையில் சூரியன் மறையும் காட்சி
பாலாபாக் நீரிணை is located in Philippines
பாலாபாக் நீரிணை
பாலாபாக் நீரிணை
பிலிப்பைன்ஸ்; மலேசியா; சபாவில் பாலாபாக் நீரிணை அமைவிடம்
அமைவிடம்பலவான், பிலிப்பைன்ஸ்
சபா, மலேசியா
ஆள்கூறுகள்7°40′N 117°00′E / 7.667°N 117.000°E / 7.667; 117.000ஆள்கூறுகள்: 7°40′N 117°00′E / 7.667°N 117.000°E / 7.667; 117.000
வகைநீரிணை
அதிகபட்ச அகலம்50 km (31 mi)
சராசரி ஆழம்100 மீ.

பாலாபாக் நீரிணை (ஆங்கிலம்: Balabac Strait; மலாய் மொழி: Selat Balabak; தகலாக் மொழி: Kipot ng Balabak) என்பது தென் சீனக் கடலையும்; சுலு கடலையும் இணைக்கும் நீரிணைகளில் ஒன்றாகும்.[1]

இந்தப் பாலாபாக் நீரிணை, பிலிப்பைன்ஸ் நாட்டின் பலவான் மாநிலத்தில் உள்ள பாலாபாக் தீவையும் (Balabac Island); மலேசியா, சபா மாநிலத்தின் ஒரு பகுதியான பாங்கி தீவுகளையும் (Banggi Islands) பிரிக்கிறது.[2]

பாலாபாக் நீரிணை, ஏறக்குறைய 50 கிலோமீட்டர் (31 மைல்) அகலம் கொண்டது. அதிகப் பட்ச ஆழம் ஏறக்குறைய 100 மீட்டர் (330 அடி).[3] எனவே இந்த நீரிணை கடந்த பனி யுகத்திற்கு (Last Glacial Period) முன் கடல் மட்டத்திற்கு கீழே இருந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த வகையில் போர்னியோ மற்றும் பலவான் நிலப் பகுதிகளுக்கு இடையே தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரிமாற்றம் இருக்கலாம்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hanizah Hj. Idris (2006). Perdagangan pelabuhan di Borneo. Penerbit Universiti Malaya. பக். 3. https://books.google.com/books?id=hFZOJYJX3C4C. 
  2. "Balabac Strait: Philippines". Geographical Names. Geographic.org. 28 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Pinxian Wang; Qianyu Li (27 May 2009). The South China Sea: Paleoceanography and Sedimentology. Springer Science & Business Media. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-9745-4. https://books.google.com/books?id=VORh5S-u-SgC&pg=PA26. 
  4. Rohling, E. G.; Fenton, M.; Jorissen, F. G.; Bertrand, P.; Ganssen, G.; Caulet, J. P. (1998). "Magnitudes of sea-level lowstands of the past 500,000 years". Nature (journal) 394 (6689): 162–165. doi:10.1038/28134. Bibcode: 1998Natur.394..162R. https://www.researchgate.net/publication/242880001. 
  5. Waelbroeck, C.; Labeyrie, L.; Michel, E.; Duplessy, J. C.; McManus, J. F.; Lambeck, K.; Balbon, E.; Labracherie, M. (2002). "Sea-level and deep water temperature changes derived from benthic foraminifera isotopic records". Quaternary Science Reviews 21 (1): 295–305. doi:10.1016/S0277-3791(01)00101-9. Bibcode: 2002QSRv...21..295W. https://www.researchgate.net/publication/222662752. 
  6. Bintanja, R.; Van de Wal, R.S.W.; Oerlemans, J. (2006). "Modelled atmospheric temperatures and global sea levels over the past million years". Nature (journal) 437 (7055): 125–128. doi:10.1038/nature03975. பப்மெட்:16136140. https://www.researchgate.net/publication/46669469. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாபாக்_நீரிணை&oldid=3418325" இருந்து மீள்விக்கப்பட்டது