சிறீவிஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ விஜய பேரரசு
7-ஆம் நூற்றாண்டு–13-ஆம் நூற்றாண்டு
8-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயத்தின் பரப்பு
8-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயத்தின் பரப்பு
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்பழைய மலாய், சமசுகிருதம்
சமயம்
இந்து, பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கி.பி. 683
ஜெயநேசன்
• கி.பி. 775
தர்மசேது
• கி.பி. 792
சமரதுங்கன்
• கி.பி. 835
பாலபுத்திரன்
• கி.பி. 988
ஸ்ரீ குலமணி வர்மதேவன்
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• ஸ்ரீ ஜெயனாசா பயணம்
7-ஆம் நூற்றாண்டு
• முடிவு
13-ஆம் நூற்றாண்டு
நாணயம்தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்
ஸ்ரீ விஜய பேரரசைத் தோற்றுவித்த அரசர் ஜெயநேசன் (Dapunta Hyang Sri Jayanasa) கி.பி. 683

ஸ்ரீ விஜயம் (Srivijaya) (ஆங்கிலம்: Srivijaya; மலாய்: Srivijaya; ப.ஒ.அ. மலாய்: srividʒaja; இந்தோனேசியம்: Sriwijaya; ப.ஒ.அ. இந்தோனேசியம்: sriwidʒaja) என்பது இந்தோனேசியா, சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசாகும்.[1]

தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் 7-ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைத்து உள்ளன..

சீன பௌத்த துறவியான யி சிங் (Yijing) என்பவர் தான் ஸ்ரீ விஜயத்தி்ல் கி.பி 671-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சுமத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் கல்வெட்டில் (Kedukan Bukit inscription) ஸ்ரீ விஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.[3]

பொது[தொகு]

13-ஆம் நூற்றாண்டில் இந்தப் பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் ஜாவா தீவை மையமாகக் கொண்ட மஜபாகித் அரசின் விரிவாக்கமும் ஒரு காரணமாகும். 8 - 12-ஆம் நூற்றாண்டுகளி்ல் ஸ்ரீ விஜயப் பேரரசு பௌத்த மதம் பரவுவதற்கு முதன்மை மையமாக விளங்கி உள்ளது.

ஸ்ரீ விஜயம் பேரரசின் அழிவிற்குப் பிறகு அந்தப் பேரரசு முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இந்தப் பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. 1918-ஆம் ஆண்டில் பிரெஞ்சு தூரக் கிழக்குப் பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் கோடெஸ் (George Cœdès) என்பவர் இப்படி ஒரு பேரரசு இருந்து இருக்கும் என சொன்னார்.

அதன் பின்னர் இந்தப் பேரரசு இருந்து இருக்கும் என அதிகாரப் பூர்வமாக சந்தேகிக்கப் பட்டது. 1993-ஆம் ஆண்டில் சுமத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் (Musi River) பலெம்பாங் என்ற இடத்தில் இந்தப் பேரரசின் தலைநகரம் இருந்து இருக்கும் என நிரூபிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Srivijaya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீவிஜயம்&oldid=3517794" இருந்து மீள்விக்கப்பட்டது