உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயநேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெயநேசன்
Sri Jayanasa of Srivijaya
Dapunta Hyang Sri Jayanasa
இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறீவிஜய கண்காட்சியில் ஜெயநேசனின் சிலை (2017)
சிறீவிஜய மகா அரசர்
ஆட்சிக்காலம்671 – 702
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னையவர்இந்திரவருமன்
பெயர்கள்
தபுந்தா ஆயாங் ஸ்ரீ ஜெயநேசன்
Ḍapunta Hiyaṃ Śrī Jayanāśa
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

தபுந்தா ஆயாங் ஸ்ரீ ஜெயநேசன் அல்லது ஜெயநேசன் (ஆங்கிலம்: Dapunta Hyang Sri Jayanasa; Sri Jayanasa; இந்தோனேசியம்: Ḍapunta Hiyaṃ Śrī Jayanāśa) என்பவர் சிறீ விஜயப் பேரரசின் முதலாவது மன்னர் ஆவார். கெடத்துவான் சிறீ விஜய அரச மரபை (Kadatuan Srivijaya) தோற்றுவித்தவரும் இவரே ஆவார்.

நற்பேறு பெறவும்; தம்க்கு அருகில் உள்ள பகுதிகளை வெற்றி கொள்ளவும்; புனிதப் பயணம் செய்தவர் என 7-ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட சித்த யாத்திரைக் கல்வெட்டில் (Siddhayatra inscriptions) இவரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. சித்த யாத்திரை (siddha yatra) என்றால் புனிதப் பயணம் என்று பொருள்படும். இவர் பொ.கா. 671 - 702-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறீ விஜய அரசை ஆட்சி செய்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பொ.கா. 671-ஆம் ஆண்டு சிறீ விஜயத்திற்குப் பயணம் செய்து, அங்கேயே ஆறு மாத காலம் தங்கியிருந்த சீன பௌத்தத் துறவியாகிய இ சிங் சிறீ விஜயத்தின் மன்னர் காட்டிய பெருந்தன்மையாலும், விருந்தோம்பலினாலும், அன்பினாலும்; தான் பெரிதும் கவரப் பட்டதாகக் குறிப்பிடுகிறார்.[1]

இ சிங் துறவியின் அறிக்கையில் குறிப்பிடப்படும் அரசர் பலெம்பாங் நகரில் கண்டெடுக்கப்பட்ட 682-ஆம் ஆண்டைச் சேர்ந்த கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (Kedukan Bukit inscription);[2] மற்றும்; சித்த யாத்திரைக் கல்வெட்டு; ஆகிய இரண்டு கல்வெட்டுகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்று பிற்காலத்தில் கருதப்பட்டது.[3][4] எனினும் பின்னர் இந்தக் கல்வெட்டுக்களின் பொருள் தன்மையில் வரலாற்று ஆசிரியர்களிடம் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.[5][6][7]

தபுந்தா ஆயாங்

[தொகு]

தபுந்தா ஆயாங் என்ற பட்டம் கொண்ட மன்னர் படகுகளின் மூலம் சித்த யாத்திரை எனப்படும் புனிதப் பயணம் மேற்கொண்டதாக சக ஆண்டு 605-இல், அதாவது பொ.கா. 683-இல், எழுதப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவர் மினங்கா தம்வான் (Minanga Tamwan) எனும் இடத்திலிருந்து இருபதாயிரம் படை வீரர்களுடன் புறப்பட்டு மத்தாஜாப் (Matajap) எனும் இடத்தை நோக்கிச் செல்கையில் பல்வேறு பகுதிகளையும் வெற்றி கொண்டார் என்று கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கோத்தா காப்பூர் கல்வெட்டு

[தொகு]

பங்கா தீவில் கண்டு பிடிக்கப்பட்ட 686-ஆம் ஆண்டு கோத்தா கப்பூர் கல்வெட்டு (Kota Kapur inscription), ஜாம்பி உலுவில் கண்டுபிடிக்கப்பட்ட 686-ஆம் ஆண்டு காராங் பிராகி கல்வெட்டு (Karang Brahi inscription), லாம்புங் மாநிலத்தின் தென் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பாலாஸ் பாசேமா கல்வெட்டு (Palas Pasemah inscription) ஆகிய கல்வெட்டுக்கள் அனைத்துமே, ஜெயநேசனின் சித்த யாத்திரையையும்; சிறீ விஜயப் பேரரசின் வெற்றிகளையும் ஒருமித்த கருத்துகளாப் பதிவு செய்கின்றன.

ஜாம்பி, பலெம்பாங், தென் லாம்புங், பங்கா தீவு ஆகிய இடங்களை வெற்றி கொண்ட பின்னர் சிறீ விஜயப் பேரரசை ஜெயநேசன் நிறுவியதாக இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தில் இருந்தும் அறியப்படுகிறது.[8]

அத்துடன் ஜெயநேசன், சாவகத் தீவை நோக்கிப் படையெடுப்பு நடத்தியது; மேற்கு ஜாவாவில் இருந்த தருமநகரா இராச்சியத்தின் வீழ்ச்சிக்கும் பங்களித்தது என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Takakusu, Junjiro (1896). A record of the Buddhist Religion as Practised in India and the Malay Archipelago AD 671-695, by I-tsing. London: Oxford.
  2. Casparis, J.G. (1975). Indonesian palaeography: a history of writing in Indonesia from the beginnings to C. A, Part 1500. E. J. Brill. ISBN 90-04-04172-9.
  3. George Cœdès (1918). "Le Royaume de Çriwijaya". Bulletin de l'Ecole français d'Extrême-Orient 18 (6): 1–36. 
  4. George Cœdès (1930). "Les inscriptions malaises de Çrivijaya". Bulletin de l'Ecole français d'Extrême-Orient (BEFEO) 30: 29–80. 
  5. Muljana, Slamet (2006). F.W. Stapel (ed.). Sriwijaya. PT. LKiS Pelangi Aksara. ISBN 978-979-8451-62-1.
  6. Soekmono, R. (2002). Pengantar sejarah kebudayaan Indonesia 2. Kanisius. ISBN 979-413-290-X.
  7. Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto, (1992), Sejarah nasional Indonesia: Jaman kuna, PT Balai Pustaka, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-407-408-X
  8. Elfriede Hermann, Karin Klenke, Michael Dickhardt (2009). Form, Macht, Differenz : Motive und Felder ethnologischen Forschens. Universitätsverlag Göttingen. pp. 254–255. ISBN 978-3-940344-80-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயநேசன்&oldid=4213390" இலிருந்து மீள்விக்கப்பட்டது