ஜம்பி சுல்தானகம்
Appearance
இந்தோனேசிய வரலாறு |
---|
காலவரிசை |
ஜம்பி சுல்தானகம் சுமாத்திராவின் வடக்கில் நிலை பெற்றிருந்த ஓர் அரசு ஆகும். இது தற்கால இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் அமைந்திருந்தது.
இச்சிற்றரசு தொடர்பில் 1682 ஆம் ஆண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் சியாம் அரசுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.[1]
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒல்லாந்துக்காரர்கள் இதன் சுல்தானைத் தமது கைப்பொம்மையாகப் பயன்படுத்தி, இவ்வரசைத் தமது ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். 1907 ஆம் ஆண்டு இதன் மரபு வழி ஆட்சியாளரிடம் இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்த அதிகாரமும் இல்லாதொழிக்கப்பட்டது.