13-ஆம் நூற்றாண்டு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 12-ஆம் நூற்றாண்டு - 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள் 1250கள் 1260கள் 1270கள் 1280கள் 1290கள் |
கிபி 13ம் நூற்றாண்டு 1201 இல் ஆரம்பித்து 1300 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். வரலாற்றில் இக்காலப் பகுதியில் ஆசியாவைக் கைப்பற்றிய மங்கோலியப் பேரரசு தனது எல்லையை கொரியா முதல் கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரித்தது.
முக்கிய நிகழ்வுகள்[தொகு]
- 1204 — இலத்தீன் பேரரசு உருவானது.
- 1206 — செங்கிஸ் கான் (தெமூஜின்) என்பவனால் மொங்கோலிய துர்கிக் இனக்குழுக்களை ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1227 — செங்கிஸ் கான் இறந்தான்.
- 1234 — வடகிழக்கு சீனாவில் ஜின் அரசு ஓஜெடெய் கான் தலைமையிலான மங்கோலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1238 — சுகோத்தாய் என்ற தாய் பேரரசு அமைக்கப்பட்டது.
- 1258 — முஸ்லிம்களின் அபாசிட் அரசின் நகரான பக்தாத் மங்கோலியத் தளபதியான ஹுலாகு கான் என்பவனால் எரித்து அழிக்கப்பட்டது. கடைசி அபாசிட் அரசன் அல்-முஸ்டாசிம் என்பவன் கொல்லப்பட்டான்.
- 1259 — தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற சமரில் மங்கோலிய அரசன் மோங்கே கான் என்பவன் கொல்லப்பட்டான்.
- 1260 — எகிப்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியர்கள் தோற்றனர்.
- மார்க்கோ போலோவும் அவனது குடும்பமும் சீனாவை அடைந்தனர்.
- கம்போடியாவில் தேரவாத பௌத்தம் முக்கிய மதக்குழுவாகப் பரவியது.
- கானாப் பேரரசு முடிவுக்கு வந்தது.
தமிழறிஞர்கள், புலவர்கள்[தொகு]
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்[தொகு]
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (1210)
- குலசேகர சிங்கையாரியன் (1246)
- குலோத்துங்க சிங்கையாரியன் (1256)
- விக்கிரம சிங்கையாரியன் (1279)