உள்ளடக்கத்துக்குச் செல்

குலசேகர சிங்கையாரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவன் கி.பி 1262 தொடக்கம் 1284ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.

இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.

கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாக இவன் இருக்கலாம் என கருதப்படுகிறது.[சான்று தேவை]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலசேகர_சிங்கையாரியன்&oldid=3241007" இலிருந்து மீள்விக்கப்பட்டது