நூற்றாண்டு
Jump to navigation
Jump to search
ஒரு நூற்றாண்டு என்பது 100 ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப் பகுதியாகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்திலிருந்து முதல் நூறு ஆண்டுகளுக்குட்பட்ட காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. அதன் பின் வரும் ஒவ்வொரு நூறாண்டுக் காலமும், இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இன்று நாம் வாழும் காலப்பகுதி (கி. பி. 2021) 21 ஆம் நூற்றாண்டு ஆகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்துக்கு முன்னுள்ள 100 ஆண்டுக் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு ஆகும். இவ்வாறே அக்காலத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு நூறாண்டும், கி. மு. இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகளெனக் குறிப்பிடப்படுகின்றன.