கோலா சிலாங்கூர்
கோலா சிலாங்கூர் | |
---|---|
நகரம் | |
Kuala Selangor | |
![]() கோலா சிலாங்கூர் மெலவாத்தி மலை | |
ஆள்கூறுகள்: 3°20′31″N 101°14′46″E / 3.34194°N 101.24611°Eஆள்கூறுகள்: 3°20′31″N 101°14′46″E / 3.34194°N 101.24611°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நகரம் | கோலா சிலாங்கூர் |
உள்ளூராட்சி | கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றம் |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | ரகிலா பிந்தி ரஹ்மாட்[1] |
• மாவட்ட அதிகாரி | ஜொகாரி அன்வார்[2] |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே+8) |
மலேசியஅஞ்சல் குறியீடு | 45xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6-03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
கோலா சிலாங்கூர் என்பது (மலாய்: Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor; சீனம்: 瓜拉雪兰莪) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
கோலா சிலாங்கூர் நகரத்திற்கு மிக அருகில் உள்ள நகரங்கள்: தஞ்சோங் காராங்; செகிஞ்சான்; ஜெராம் (சிலாங்கூர்); பத்து ஆராங்; ரவாங்; காப்பார்; கிள்ளான். கோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.[3]
கோலா சிலாங்கூர் நகரத்தை சிலாங்கூர் நதி பிரிக்கின்றது. சிலாங்கூர் நதி இந்த நகரத்தை ஊடுருவிச் செல்வதால், அந்த நதியின் பெயரே இந்தக் கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.
வரலாறு[தொகு]
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாகக இருந்தது.[4] பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகம், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் ஆட்சியின் கீழ், கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.
மெலாவத்தி கோட்டை[தொகு]

சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் முகத்துவாரத்தில், கோலா சிலாங்கூர் நகரின் மேற்குப் பகுதியில், ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் சிலாங்கூர் குன்று. அங்கு ஒரு பெரிய கோட்டை உள்ளது. அதை மெலாவத்தி கோட்டை (Kota Malawati) என்று அழைக்கிறார்கள்.[5]
16-ஆம் நூற்றாண்டில் மெலாவத்தி கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகமட்டின் (Sultan Mahmud) மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.[6]
ராஜா லூமு[தொகு]
17-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756-ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா லூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா (Sultan Salehudin Shah) எனப் பெயர் மாற்றம் கண்டது.[7]
இவர் தான் மெலாவத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.
சுல்தான் இப்ராகிம் ஷா[தொகு]
சுல்தான் சலிஹுடின் ஷாவிற்குப் பின்னர் அவருடைய மகன் சுல்தான் இப்ராகிம் ஷா பதவிக்கு வந்தார். இவர் மேலும் அந்தக் கோட்டையின் தற்காப்பு அரண்களுக்கு வலு சேர்த்தார்.[8]
மெலாவத்தி குன்றின் அடிப்பாகத்தில் மேலும் கூடுதலாகப் பீரங்கிகளைச் சேர்த்தார். அதில் ஒரு பெரிய பீரங்கியின் பெயர் ஸ்ரீ ரம்பாய் (Seri Rambai).
தஞ்சோங் கிராமாட் கோட்டை[தொகு]
டச்சுக்காரர்கள் எழுதி வைத்தக் குறிப்புகளின்படி மெலாவத்தி கோட்டையில் 68 பீரங்கிகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தச் சமயத்தில் தான் தஞ்சோங் கிராமாட் குன்றில் மேலும் ஒரு கோட்டை கட்டப் பட்டது.
கி.பி. 1784-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானகம் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. அதற்கு மறு தாக்குதலாக 11 டச்சுக் கப்பல்கள் கடலில் இருந்து கோலா சிலாங்கூரைத் தாக்கின.
ராஜா முகமட் அலி[தொகு]
கோலா சிலாங்கூர் மீதான டச்சுத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகன் (Dirk van Hogen) என்பவர் தலைமை வகித்தார். சிலாங்கூர் சுல்தானகத்திற்கு எதிராக இந்தோனேசியாவின் சியாக் (Siak) அரசும் களம் இறங்கியது. ராஜா முகமட் அலி (Raja Muhammad Ali of Siak) என்பவர் தலைமை தாங்கினார். பயங்கரமான போர்.[9]
கி.பி. 1784-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி டச்சுப் படைகள் கோலா சிலாங்கூர் கடற்கரையில் தரை இறங்கின. மெலாவத்தி குன்றை முற்றுகை இட்டன. கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராஹிம் ஷாவின் படைகள் காட்டுக்குள் தஞ்சம் அடைந்தன. கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கரங்களில் வீழ்ந்தன.
அல்திங்பர்க் கோட்டை[தொகு]
அதன் பின்னர் மெலாவத்தி கோட்டை அல்திங்பர்க் (Altingburg) கோட்டை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தஞ்சோங் கிராமாட் கோட்டை உத்ரேட் (Utrecht) என்று பெயர் மாற்றம் கண்டது.[10]
மலாக்காவை டச்சுக்காரர்கள் கி.பி 1641-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1825-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்கள். 183 ஆண்டுகள். இடை இடையே டச்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களின் தொல்லைகள். ரியாவ் தீவுகளில் இருந்து பூகிஸ்காரர்களின் தொந்தரவுகள்.
ஜொகூர் சுல்தானகத்துடன் டச்சுக்காரர்கள் ஒப்பந்தம்[தொகு]
அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தின் தென் பகுதியில் ஜொகூர் சுல்தானகம் உச்சத்தில் இருந்தது. கி.பி. 1606-ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகத்துடன் டச்சுக்காரர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினால் ஜொகூர் சுல்தானகம் இந்தோனேசிய வாணிகத்தைத் தன்னகப் படுத்திக் கொண்டது.[11]
வெகு நாட்களாகவே கோலா சிலாங்கூர் ஆளுநர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பிணக்குகள். பெரும்பாலானவை வணிகம் தொடர்பானவை. இந்தோனேசிய - கோலா சிலாங்கூர் வர்த்தகத்தை ஜொகூர் சுல்தானகம் தன்னகப் படுத்திக் கொண்டதும், மலாக்கா டச்சுக்காரர்கள் மீது கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கோப தாபங்கள். அதனால் டச்சுக்காரர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தினார்கள்.
கோலா சிலாங்கூர் கடல் கொள்ளையர்கள்[தொகு]
அந்தச் சமயத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளில் இருந்து வரும் கப்பல்களைக் கடல் கொள்ளையர்கள், மலாக்கா நீரிணையில் சூறையாடி வந்தார்கள். அந்தக் கடல் கொள்ளையர்களுக்குக் கோலா சிலாங்கூர் அடைக்கலம் தருவதாக டச்சுக்காரர்களின் குற்றச்சாட்டு.
அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தில் ஈய வணிகம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வணிகத்திற்கு கோலா சிலாங்கூர் தடையாக இருந்தது. டச்சுக்காரர்கள் ஒட்டு மொத்த வியாபாரத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர ஆசைப் பட்டார்கள்.[12]
கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷா[தொகு]
கோலா சிலாங்கூர் போரில், கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கைகளில் வீழ்ந்தன. அதன் பின்னர் அவர்கள் கோட்டைகளுக்குப் பலமான சுவர்களை எழுப்பினார்கள்.[13]
பீரங்கிக் குண்டுகள் ஊடுருவிச் செல்ல முடியாத அளவிற்கு வலுவான சுவர்த் தடுப்புகளைப் போட்டார்கள். இருந்தாலும் அந்தத் தற்காப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
காட்டுக்குள் தஞ்சம் அடைந்த கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷாவின் படைகள் மறுபடியும் தாக்குதல்கள் நடத்தின. இந்த முறை பகாங் பகுதியில் இருந்து 2000 பேர் மலாய்க்காரர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
கோலா சிலாங்கூர் உத்ரேட் கோட்டை[தொகு]
1785 ஜுன் 28-ஆம் தேதி டச்சுக்காரர்களிடம் இருந்து இரு கோட்டைகளும் மீட்கப் பட்டன. அல்திங்பர்க் (Altingburg) கோட்டையும் உத்ரேட் (Utrecht) கோட்டையும் கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களின் கைகளுக்குள் வந்தன்.
அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து டச்சுக்காரர்கள் இன்னொரு முறை தாக்குதல் நடத்தினார்கள். கடலில் இருந்தே பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கினார்கள்.
கோலா சிலாங்கூர் கோட்டைகளின் கற்பாறைச் சிதைவுகள்[தொகு]
ஆனால் மெலாவத்தி கோட்டையைத் தரை மார்க்கமாக வந்து தாக்குதல் செய்ய முடியவில்லை. அந்தக் கோட்டை 1871-ஆம் ஆண்டு வரை மலாய்க்காரர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்னர் அந்தக் கோட்டைகளை ஆங்கிலேயர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.
கோலா சிலாங்கூர் நகரில் வரலாறு படைத்த அல்திங்பர்க் கோட்டையும்; உத்ரேட் கோட்டையும்; இப்போது அங்கே இல்லை. அந்த இடங்களில் கற்பாறைச் சிதைவுகள் மட்டுமே காட்சிப் பொருள்களாகக் காணக் கிடைக்கின்றன.
கோலா சிலாங்கூர் வட்டாரத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]
கோலா சிலாங்கூர் நகரத்திலும்; அதன் வட்டாரத்திலும் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 541 மாணவர்கள் பயில்கிறார்கள். 72 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[14][15]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD3058 | கம்போங் பாரு தோட்டம் | SJK(T) Ldg Kg Baru[16] | கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 19 | 7 |
BBD3060 | சுங்கை தெராப் தோட்டம் | SJK(T) Ladang Sungai Terap[17][18] | சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 46 | 10 |
BBD3064 | கோலா சிலாங்கூர் | SJK(T) Ldg Raja Musa[19] | ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 36 | 10 |
BBD3066 | புக்கிட் பெலிம்பிங் Bukit Belimbing |
SJK(T) Ldg Riverside[20] | ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 50 | 10 |
BBD3073 | கோலா சிலாங்கூர் | SJK(T) Vageesar[21][22][23] | வகீசர் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 361 | 28 |
BBD3069 | சுங்கை பூலோ தோட்டம் | SJK(T) Ldg Sg Buloh | சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | கோலா சிலாங்கூர் | 29 | 7 |
கோலா சிலாங்கூர் காட்சியகம்[தொகு]
கோலா சிலாங்கூர் மக்கள் தொகை இன வாரியாக (2018)[தொகு]
கோலா சிலாங்கூர் மக்கள் தொகை இன வாரியாக (2018)[24]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "YDP's Profile". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. 7 டிசம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Portal Kerajaan Negeri Selangor Darul Ehsan". www.selangor.gov.my. 7 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SEJARAH DAERAH KUALA SELANGOR". 29 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ RAJENDRA, EDWARD. "Abandoned facilities in Kota Melawati disappoint visitors". The Star (ஆங்கிலம்). 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kota Kuala Selangor - Located near the mouth of the Selangor River, the fort complex at Kuala Selangor actually consists of two forts – the larger stone fort of Kota Malawati on Bukit Selangor and a smaller earthworks fort on Bukit Tanjong Keramat about a kilometre and a half to the northeast". www.sabrizain.org. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kuala Selangor as the Selangor earliest administration centre and also the beginning of the Royal Selangor Institution created by Raja Lumu (Sultan Salehuddin) in 1766". 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ A short history of Kuala Selangor. Kuala Lumpur: Kuala Lumpur: Southdene, 1999.. 1999. பக். 42 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983400530X 9789834005306. https://www.worldcat.org/title/short-history-of-kuala-selangor/oclc/42761986. பார்த்த நாள்: 4 February 2022.
- ↑ "Kuala Selangor - History, Seafood, Firefly, Eagle Feeding, Sky Mirror, Blue Tears". Kuala Selangor. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Dutch occupied the fort, renaming Kota Malawati 'Altingburg' and calling Kota Tanjong Keramat 'Utrecht'". www.sabrizain.org. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "On 17 May 1606, Raja Bongsu, accompanied by 3,000 men and 50 galleys met Matelieff de Jonge.18 A treaty, known as the Dutch-Johor agreement of 1606, was signed". eresources.nlb.gov.sg. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ GULLICK,, JOHN (1996,). THE KUALA LANGAT PIRACY TRIAL:. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 69, no. 2 (271), Malaysian Branch of the Royal Asiatic Society,. பக். pp. 101–14. http://www.jstor.org/stable/41493310. பார்த்த நாள்: 4 February 2022.
- ↑ "Kuala Selangor eventually fell to the Dutch in 1784, who reinforced the fort with cannons and renamed it Fort Altingburg". 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. 2021-12-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் - Schools". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. 7 டிசம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Kampung Baru". www.facebook.com. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி". 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Sungai Terap". www.facebook.com. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Laporan Sambutan Hari Guru Gambar | PDF". Scribd. 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - SJKT Vageesar". sjktvageesar.blogspot.com (ஆங்கிலம்). 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - KMR SJKT Vageesar Kuala Selangor" (ஆங்கிலம்). 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT VAGEESAR". pssvageesaun.blogspot.com (ஆங்கிலம்). 4 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. 2020-06-20 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]