அராபியத் தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரேபியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அராபியத் தீபகற்பம்
அராபியத் தீபகற்பம்

அராபியத் தீபகற்பம் (Arabian Peninsula), என்பது ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். எண்ணெய், மற்றும் இயற்கை எரிவளி ஆகியன இங்கு பெருமளவில் கிடைப்பதால் இப்பகுதி மத்தியகிழக்குப் பகுதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

புவியியல்[தொகு]

அராபியத் தீபகற்பத்தின் தெற்கே செங்கடல், அக்காபா வளைகுடா, தென்கிழக்கே அராபியக் கடல் (இந்தியப் பெருங்கடலின் பகுதி), வடகிழக்கே ஓமான் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, பாரசிக வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. இதன் வடக்கு எல்லையில் ஈரான், ஈராக்கிய மலைத்தொடரான சாகுரொஸ் உள்ளது.

புவியியல் ரீதியாக இப்பகுதி ஈராக்கின் மேற்குப் பகுதியையும், சிரியாவின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக இது ஆசியாவின் ஏனையப் பகுதிகளை யூபிரேட்டிஸ் ஆறுகளினால் பிரிக்கிறது.

பின்வரும் நாடுகள் அராபியத் தீபகற்பத்தில் தற்போது அடங்குகின்றன:

இவற்றில் ஆறு நாடுகள் மட்டுமே அரசியல் ரீதியாக அராபியத் தீபகற்பத்தில் அடங்குகின்றன. இவை அரபு வளைகுடா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

2008 மதிப்பீட்டின்படி, இத்தீபகற்பத்தின் மக்கள் தொகை 77,983,936 ஆகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராபியத்_தீபகற்பம்&oldid=2505621" இருந்து மீள்விக்கப்பட்டது