கிழக்காசியா
கிழக்காசியா East Asia | |
---|---|
நாடுகள் | |
சார்பு நாடுகள் | |
பெருநகரங்கள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,18,39,074 km2 (45,71,092 sq mi) |
மக்கள்தொகை (0)[note 2] | |
• மொத்தம் | 0 |
• தரவரிசை | 2-ஆம் இடம் (உலக அளவில்) |
• அடர்த்தி | 0.0/km2 (0.0/sq mi) |
நேர வலயம் |
|
மொழிகளும் மொழிக்குடும்பங்களும் |
கிழக்கு ஆசியா (East Asia) அல்லது வடகிழக்கு ஆசியா (Northeast Asia) என்பது ஆசியக் கண்டத்தின் கிழக்கு உள்வட்டாரம் ஆகும்; இதைப் புவிப்பரப்பியலாகவோ[3] அல்லது பண்பாட்டியலாகவோ வரையறுக்கலாம்.[4][5][6] இது புவிப்பரப்பியலாகவும் புவி அரசியல் வழியிலும், சீனப் பெருநாடு, ஆங்காங், மக்காவு, யப்பான், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, தைவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கும்.[7][8][9][10][11][3][12][13][14][15][16][too many citations]
இவ்வட்டாரம் பல பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாகும். இவற்றுள் பண்டையக் கால சீன நாகரிகம் யப்பான் நாகரிகம், கொரிய நாகரிகம், மங்கோலியப் பேரரசு ஆகியவை உள்ளடங்கும்.[17][18] கிழக்காசியா உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும்; இதில் பண்டைய சீன நாகரிகம் உலக மாந்தரின வரலாற்றிலேயே மிகப் பழைய நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக, சீனா கிழக்காசியாவை உருமாற்றி வந்துள்ளது. இந்த வட்டாரத்தில் சீன நாகரிகம் பெருமை மிக்கதாக தன்னைச் சுற்றியமைந்த அண்டை நாடுகள்பால் பெருந்தாக்கம் செலுத்தியது.[19][20][21] வரலாற்றியலாக, கிழக்காசியச் சமூகங்கள் சீனப் பண்பாட்டுக் களத்தின் பகுதியாகவே விளங்கி வந்துள்ளன. கிழக்காசிய சொற்களும் எழுத்துகளும் முறையே செவ்வியல் சீனத்தில் இருந்தும் சீன எழுத்து வடிவத்தில் இருந்தும் உருவாகியுள்ளன. சீன நாட்காட்டி கிழக்காசியப் பண்பாட்டை உட்கொண்டுள்ளது. இதுவே மற்ற கிழக்காசிய நாட்காட்டிகள் உருவாகவும் வழிவகுத்துள்ளது. கிழக்காசியாவின் பெருஞ்சமயங்களாக கிழக்காசியப் புத்த சமயம் (பெரிதும் மகாயாணம்)[22]), கன்பூசியனியம், புதிய கன்பூசியனியம், தாவோயியம், முன்னோர் வழிபாடு, சீனா, மக்காவு, தைவான் சார்ந்த சீன நாட்டுப்புற சமயம், யப்பானிய புத்த சமயம், யப்பானியச் சிண்டோயியம், கொரியக் கிறித்தவம், கொரியச் சாமனியம் (வேலன் வெறியாட்டம் போன்றது), ஆகியவை விளங்குகின்றன. [23] சாமனியம் மங்கோலியர், பிற வடகிழக்காசியத் தொல்குடிகளாகிய மஞ்சூக்கள் ஆகியோரிடமும் அமைகிறது.[24][25]
கிழக்காசியர் ஏறத்தாழ 1.6 பில்லியன் மக்கள் அடங்குவர்; இவர்கள் ஆசிய மக்களில் 38% ஆகவும் உலக மக்களில் 22% ஆகவும் அமைகின்றனர். இப்பகுதியில் உலகின் பல பெருநகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், பீகிங், ஆங்காங், சியோல், சாங்காய், தைபை, தோக்கியோ ஆகியவை அடங்கும். கிழக்காசியாவின் கடற்கரை (நெய்தல்), ஆற்றுவளப் (மருதம்) பகுதிகள் உல்கின் உயர் மக்கள்தொகை அமைந்த இடங்களில் ஒன்றாகும். இருந்தாலும், மங்கோலியா, வடக்கத்தியச் சீனா ஆகிய நிலம் சிறைப்பட்ட பகுதிகளில் மிகவும் குறைவான மக்களே வாழ்கின்றனர்; மங்கோலியாவில் அனைத்து நாடுகளினும் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி அமைகிறது. இந்த வட்டாரத்தி ஒட்டுமொத்த மக்கள் அடர்த்தி 133/கிமீ2 ஆகும். இது உலகநிரல் (சராசரி) மதிப்பாகிய 45/கிமீ2 விட மும்மடங்கு ஆகும்.
வரலாறு
[தொகு]மேலை உலகில் ஐரோப்பியர் மீது பண்டைய கிரேக்கரும் உரோமானியரும் செலுத்திய முதன்மையான தாக்கத்தோடு ஒப்பிடும்போது, யப்பானுக்கும் கொரியாவுக்கும் அரை ஆயிரம் ஆனடுகளுக்கு முன்பே சீனா உயரிய நாகரிகத்தைப் பெற்றிருந்தது.[26]கிழக்காசிய நாகரிகங்கள் வரலாற்றில் அடியெடுத்து வைக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் நாகரிகம் நிலவியுள்ளது. சீனப் பேரரசு தன் அண்டை நாடுகள் மீது தன் பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் வல்லமையைச் செலுத்தியுள்ளது.[27][28] பின்னர் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்காசியாவின் மீது பண்பாட்டியலாகவும் பொருளியலாகவும் அரசியலாகவும் போரியலாகவும் பேரளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.[29][30] சீனபேரரசு தனது பண்பாட்டு முனைப்பால் கிழக்காசியவிலேயே முதலில் எழுத்தறிந்த நாடாகி, யப்பானுக்கும் கொரியாவுக்கும் சீனச் சொல்வளத்தைப் பரிமாறியதோடு அவர்கள் எழுத்தமைப்பை உருவாக்கி மொழியியலாகவும் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளது.[31]சீனாவுக்கும் கிழக்காசிய வட்டார அரச மரபுகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் பண்பாட்டியலாகவும் சமயவியலாகவும் தொடர்ந்து ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கொரியா மீதான தாக்கமும் செல்வாக்கும் கி.மு 108 இல் ஏன் பேரரசு கொரிய வடகிழக்குப் பகுதியை வென்று தன் ஆட்சி எல்லையை விரிவாக்கி இலேலாங் மாகாணத்தை உருவாக்கியபோது ஏற்பட்டன. மேலும், சீன எழுதுமுறையையும் பணமுறையையும் நெல் வளர்ப்பையும் கன்பூசியனிய அரசியல் நிறுவனங்களையும் பகிர்ந்து கொரியா முழுவதிலும் சீனத் தாக்கம் வேரூன்றியது.[32]
பொருளியல்
[தொகு]நாடு/பகுதி | இயல்பு மொஉவி (GDP) பில்லியன் அமெரிக்க டாலர்களில் (2017)[33] |
ஆள்வீத இயல்பு மொஉவி(GDP) அமெரிக்க டாலர்களில் (2017)[33] |
மொஉவி (GDP) PPP பில்லியன் அமெரிக்க டாலர்களில் (2017)[33] |
ஆள்வீத மொஉவி (GDP) PPP அமெரிக்க டாலர்களில் (2017)[33] |
---|---|---|---|---|
சீனா | 11,937.562 | 8,583 | 23,122.027 | 16,624 |
ஆங்காங்
|
334.104 | 44,999 | 453.019 | 61,015 |
மக்காவு | 51.160 | 79,563 | 73.579 | 114,430 |
சப்பான் | 4,884.489 | 38,550 | 5,405.072 | 42,659 |
வட கொரியா | N/A | N/A | N/A | N/A |
தென் கொரியா | 1,529.743 | 29,730 | 2,026.651 | 39,387 |
மங்கோலியா | 10.869 | 3,553 | 38.395 | 12,551 |
தாய்வான் | 571.453 | 24,227 | 1,175.308 | 49,827 |
பகுதிகளும் வட்டாரத் தரவுகளும்
[தொகு]சொற்பிறப்பியல்
[தொகு]Flag | பொதுப்பெயர் | அலுவற்பெயர் | ||
---|---|---|---|---|
வெளிப்பெயர் | அகப்பெயர் | வெளிப்பெயர் | அகப்பெயர் | |
சீனா | 中国 | சீன மக்கள் குடியரசு | 中华人民共和国 | |
ஓங்காங் | 香港 | ஆங்காங் சிறப்பு ஆட்சி வட்டாரம் மக்கள் சீனக் குடியரசுவின் |
中華人民共和國香港特別行政區 | |
மக்காவு | 澳門 | மக்காவு சிறப்பு ஆட்சி வட்டாரம் மக்கள் சீனக் குடியரசுவின் |
中華人民共和國澳門特別行政區 Região Administrativa Especial de Macau da República Popular da China | |
யப்பான் | 日本 | யப்பானிய அரசு | 日本国 | |
மங்கோலியா | Монгол улс | மங்கோலியா | Монгол Улс(ᠮᠣᠩᠭᠤᠯ ᠤᠯᠤᠰ ) | |
வட கொரியா | 조선 | மக்களாட்சிசார் கொரிய மக்கள் குடியரசு | 조선민주주의인민공화국 (朝鮮民主主義人民共和國) | |
தென் கொரியா | 한국 | கொரியக் குடியரசு | 대한민국 (大韓民國) | |
சீனக் குடியரசு[34] | 臺灣 / 台灣 | சீனக் குடியரசு | 中華民國 |
மக்கள்தொகையியல்
[தொகு]நாடு/பகுதி | பரப்பளவு கிமீ2 | மக்கள்தொகை[35][36] (0) |
மக்கள்தொகை அடர்த்தி ஒரு கிமீ2க்கு |
மாவசு | தலைநகரம் |
---|---|---|---|---|---|
சீனா | 9,640,011[37] | 0 | 138 | 0.727 | பீகிங் |
ஆங்காங்
|
1,104 | 0 | 6,390 | 0.912 | ஆங்காங் |
மக்காவு | 30 | 0 | 18,662 | 0.892 | மக்காவு |
சப்பான் | 377,930 | 0 | 337 | 0.891 | தோக்கியோ |
வட கொரியா | 120,538 | 0 | 198 | 0.595 | பியோங்யாங்[38] |
தென் கொரியா | 100,210 | 0 | 500 | 0.898 | சீயோல் |
மங்கோலியா | 1,564,100 | 0 | 2 | 0.698 | உலான்பாதர் |
தாய்வான் | 36,188 | 0 | 639 | 0.884 | தைபேய்[39] |
பெரிய இனக்குழுக்கள்
[தொகு]இனக்குழு | வட்டாரப் பெயர் | மக்கள்தொகை | மொழி(கள்) | எழுத்து முறை(கள்) | நாடுகள்/பகுதிகள்* | புறத் தோற்றம் |
---|---|---|---|---|---|---|
ஆன்/சீனர் | 漢人 or 汉人, 漢族 or 汉族 | 1,260,000,000[40] | மாண்டரின், கண்டோனீயம், சாங்காயினீயம், ஓக்கியென், ஆக்கா, கான், சியாங், etc. | எளிய ஆன் எழுத்துருக்கள், மரபு ஆன் எழுத்துருக்கள் | () | |
யமாத்தோ/யப்பானியர் | 日本族 (にほんぞく) 大和民族 (やまとみんぞく) |
125,117,000[41] | யப்பனியம் | ஆன் எழுத்துருக்கள் (காஞ்சி), கதகனா, இராகனா | ||
யோசியோன்/கொரியர் | 한민족 (韓民族) 조선족 (朝鮮族) |
79,432,225[42] | கொரியம் ஆங்குல்,ஆனனெழுத்துருக்கள் (ஆஞ்சா) | |||
பாய் | 白族 | 1,858,063 | பாய், தென்மேற்கு மாண்டரின்னிலத்தின எழுத்து, எளிய ஆன் எழுத்துருக்கள் | |||
ஊய் மக்கள் | 回族/回回 | 10,586,087[43] | வடமேற்கு மாண்டரின், பிற சீனத் திசைமொழிகள், சாத்து மொழி, etc. | எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
மங்கோலியர்s | Монголчууд/ᠮᠣᠩᠭ᠋ᠣᠯᠴᠤᠳ Монгол/ᠮᠣᠩᠭ᠋ᠣᠯ |
8,942,528 | மங்கோலியம் | மொங்கோலிய எழுத்துமுறை, சிரில்லிக் எழுத்துக்கள் | ||
சுவாங்குகள் | 壮族/பவுச்சியூயெங் | 18,000,000[44] | சுவாங்கு, கண்டோனீயம், தென்மேற்கு மாண்டரின், etc. | எளிய ஆன் எழுத்துருக்கள், இலத்தீன எழுத்துகள் | ||
மஞ்சு இனக்குழுs | 满族/வார்ப்புரு:ManchuSibeUnicode | 10,422,873[45] | வடமேற்கு மாண்டரின், மஞ்சூரியம் (அச்சுறுநிலையது), etc. | எளிய ஆன் எழுத்துருக்கள், மங்கோலிய எழுத்து | ||
குமொங்/மையாவோ | காவோபு கோங்குபு/குமுபு/மோங்குபு | 9,426,007[46] | குமொங், தென்மேற்கு மாண்டரின் | இலத்தீன எழுத்து, எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
திபெத்திய மக்கள் | བོད་པ་ | 6,500,000 | திபெத்தியர் இரிகுயால் உரோங், இரிகூ மேலும் பிறர். | திபெத்திய எழுத்து | ||
யி | ꆈꌠ/彝族 | 8,714,393 | பல்வேறு உலோலோலியம், தென்மேற்கு மாண்டரின் | யி எழுத்து, எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
துயியா | 土家族 | 8,353,912 | வடக்குத் துயியா, தெற்குத் துயியா | எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
காம் | கயேமில் | 2,879,974 | கயேமில் | எளிய ஆன் எழுத்துருக்கள், இலத்தீன எழுத்து | ||
தூ | 土族/மங்குவோர் | 289,565 | தூ, வடமேற்கு மாண்டரின் | எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
தாவுர்கள் | 达斡尔族/ᠳᠠᠭᠤᠷ | 131,992 | தாவுர், வடகிழக்கு மாண்டரின் | மங்கோலிய எழுத்து, எளிய ஆன் எழுத்துருக்கள் | ||
தைவானியத் தொல்குடிகள் | Pangcah, etc. | 533,600 | ஆத்திரோனீசிய மொழிகள் (தமிசு மொழி|அமிசு]], யாமி), இன்னும் பிற. | இலத்தீன எழுத்து, மரபு ஆன் எழுத்துருக்கள் | ||
இருகுவான் | (琉球民族(りゅうきゅうみんぞく) 沖縄人 (おきなわじん) |
1,900,000 | யப்பானியம் இருகுவான் |
ஆன் எழுத்துருக்கள்(காஞ்சி), கதகனா, இராகனா | (வார்ப்புரு:நாட்டுத் தகவல் Okinawa) | |
ஐனு | アイヌ | 200,000 | யப்பானியர் ஐனு[47] |
ஆன் எழுத்துருக்கள்(காஞ்சி), கதகனா, இராகனா |
*குறிப்பு: நாடு/பகுதி வரிசை அந்த மக்களின் கிழக்காசிய மக்கள்தொகையைப் பொறுத்து அமைகிறது.
பண்பாடு
[தொகு]பருந்துப்பார்வை
[தொகு]சமயங்கள்
[தொகு]சமயம் | வட்டாரப் பெயர் | பிரிவுப் பெயர்கள் | பெருநூல் | வகை | பின்பற்றுவோர் எண்ணிக்கை | இனக்குழுக்கள் | நாடுகள்/பகுதிகள் |
---|---|---|---|---|---|---|---|
சீனச் சமயம் | இல்லை, 民間信仰, 神教/神道, உள்ளடங்க பல்வேறு பிரிவுகள். | தாவோயியம், கன்புசியனியம், நாட்டார் தீர்வாண்மைப் பிரிவுகள், ஊயியம், நுவோ | சீனச் செவ்வியல் நூல்கள், குவாங்கிடி சீயிங், அரிய ஏடுகள், இன்னும் பிற. | பெருங்கடவுள்/பலதெய்வ வழிபாடு | ~900,000,000[48][49] | ஆன், குமொங், குவியாங், தூயியா (முந்து தெய்வங்கள் வழிபாடு) | ( ) |
தாவோயியம் | 道教 | ழென்குயி, குவான்ழென் | தாவோ தே ஜிங் | பெருங்கடவுள்/பலதெய்வ வழிபாடு | ~20,000,000[49] | ஆன், ழுவாங், குமொங், யாவோ, குவியாங், தூயியா | ( ) |
கன்பூசியம் | 儒教 | செங்ழு, லூவாங் | ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் | இம்மை கடந்தநிலை/பெருங்கடவுள் வழிபாடு | கிடைக்கவில்லை | ஆன், யோசியோன், யமாத்தோ | ( ) |
கிழக்காசியப் பவுத்தம் | 漢傳佛教 அல்லது 汉传佛教 | மகாயாணம் | வைரச் சூத்திரம் | அல்-கடவுள் | ~300,000,000 | ஆன், யோசியோன், யமாத்தோ | ( ) |
திபெத்திய பவுத்தம் | བོད་བརྒྱུད་ནང་བསྟན། | மகாயாணம் | அனுத்தர யோக தந்திரா | அல்-கடவுள் | ~10,000,000 | திபெத்தியர், மஞ்சுக்கள், மங்கோலியர் | |
சாமனியம்[50]போன் பௌத்தம், இன்னும் பிற. | Бөө мөргөл , བོན | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | பலதெய்வ/பெருங்கடவுள் வழிபாடு | கிடைக்கவில்லை | திபெத்தியர், மஞ்சூக்கள், மங்கோலியர், ஓரோகர்கள் | |
சிந்தோ | 神道 | சிந்தோ பிரிவுகள் | கோயிகி, நிகோன் சோக்கி | பலதெய்வ/பெருங்கடவுள் வழிபாடு | கிடைக்கவில்லை | ஐனு, உரூகுவான், யமாத்தோ | |
சிந்தோ/ஊயியம் | 신도 or 무교 | சிந்தோ பிரிவுகள் | கிடைக்கவில்லை | பலதெய்வ/பெருங்கடவுள் வழிபாடு | கிடைக்கவில்லை | யோசியோன் | |
உரூகுவான் சமயம் | 琉球神道 or ニライカナイ信仰 | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | பலதெய்வ/பெருங்கடவுள் வழிபாடு | கிடைக்கவில்லை | உரூகுவான் | (வார்ப்புரு:நாட்டுத் தகவல் Okinawa) |
விழாக்கள்
[தொகு]விழா | வட்டாரப் பெயர் | பிற பெயர் | நாட்காட்டி | நாள் | கிரெகொரிய நாட்காட்டியின் நாள் | செயல்பாடு | சமய நடைமுறைகள் | உணவு | பெரு இனமக்கள் | பெருநாடுகள்/பகுதிகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனப் புத்தாண்டு | 春節 or 春节 | இளவேனில் விழா | சீன நாட்காட்டி | மாதம் 1 நாள் 1 | 21 ஜன.–20 பிப். | குடும்பம் கூடல், முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல், வாண வேடிக்கை | கடவுளர் அரசன் வழிபாடு | யியயோழி | ஆன், யோசியோன், மஞ்சூக்கள் இன்னும் பிறர். | |
புத்தாண்டு | 元旦 | Yuan Dan | கிரிகொரிய நாட்காட்டி | 1 ஜன. | 1 ஜன. | வாண வேடிக்கை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | |
உலோசார் அல்லது திசாகான் சார் | ལོ་གསར་ அல்லது Цагаан сар | வெண்ணிலா | திபெத்திய நாட்காட்டி, மங்கோலிய நாட்காட்டி | மாதம் 1 நாள் 1 | 25 ஜன.–2 மார்ச்சு | குடும்பம் கூடல், முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல், வாண வேடிக்கை | கிடைக்கவில்லை | சாங் அல்லது பூழ் | திபெத்தியர், மங்கோலியர், தூ இன்னும் பிறர். | |
விளக்குத் திருவிழா | 元宵節 or 元宵节 | மேல் யுவான் விழா (上元节) | சீன நாட்காட்டி | மாதம் 1 நாள் 15 | 4 பிப்.–6 மார்ச் | விளக்குக் காட்சி, முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல் | Birthdate of the God of Sky-officer | யுவான்சியாவோ | ஆன், யோசியோன், யமாத்தோ | * |
குவிங்மிங் விழா | 清明節 or 清明节 | குலச் சின்னம் பெருக்கும் நாள் | சூரிய நாட்காட்டி | மார்ச்சு சமபகலிரவு நாளில் இருந்து 15 ஆம் நாள் | 4 ஏப்பிரல்–6 ஏப்பிரல் | முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல் | எரித்தல் நரகப்பணம் | குளிர் உணவு | ஆன், யோசியோன், மங்கோலியர் | |
பேய்த்தும்பி படகோட்ட விழா | 端午節 or 端午节 | துவான்வு விழா | சீன நாட்காட்டி | மதம் 5 நாள் 5 | நச்சுகள், பிளேக் விரட்டல், பேய்த்தும்பி படகோட்டப் போட்டி, வண்ணப் பட்டை அணிதல், முகவாசற்கதவில் தும்பைக் கொடி கட்டுதல். | பல தெவங்கள் வழிபாடு | ழோங்ழி | ஆன், யோசியோன், யமாத்தோ | * | |
பேய் (ஆவி) விழா | 中元節 or 中元节 | நடு யுவான் விழா | சீன நாட்காட்டி | மாதம் 7 நாள் 15 | முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல் | புவிக்கடவுள் அலௌவலர் பிறந்த நாள் | ஆன், யோசியோன், யமாத்தோ | * | ||
நடு இலையுதிர் கால திருவிழா | 中秋節 or 中秋节 | 中秋祭 | சீன நாட்காட்டி | மாதம் 8 நாள் 15 | குடும்பம் கூடல், நிலாவில் மகிழ்தல் | நிலா தேவி வழிபாடு | நிலாமெத்தப்பம் | ஆன், யோசியோன், யமாத்தோ | * | |
இரட்டை ஒன்பது விழா | 重陽節 அல்லது 重阳节 | இரட்டை நேர்நிலை விழா | சீன நாட்காட்டி | மாதம் 9 நாள் 09 | மலையேற்றம், முதியோர் பேணல், Cornus அணிதல். | பல தெய்வங்கள் வழிபாடு | ஆன், யோசியோன், யமாத்தோ | * | ||
கீழ் யுவான் விழா | 下元節 or 下元节 | கிடைக்கவில்லை | சீன நாட்காட்டி | மாதம் 10 நாள் 15 | முன்னோர் வழிபாடு, குலச் சின்னம் பெருக்குதல் | நீர்க்கடவுள் அலுவலர் பிறந்த நாள் | சிபா | ஆன், யோசியோன் | ||
குறும்புத்தாண்டு | 小年 | யிழாவோ (祭灶) | சீன நாட்காட்டி | மாதம் 12 நாள் 23 | வீடுகள் பெருக்குதல் | நெருப்பு/கணப்புக் கடவுள் வழிபாடு | தாங்குவா | ஆன், மங்கோலியர் | ||
பன்னாட்டுத் தொழிலாளர் நாள் | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிரிகொரிய நாட்காட்டி | 1 மே | 1 மே | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | |
பன்னாட்டுப் பெண்கள் நாள் | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிரிகொரிய நாட்காட்டி | 8 மார்ச்சு | 8 மார்ச்சு | பெண்கலின் பாதுகாப்பு | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை |
*மெய்சி மீட்புக்குப் பிறகு யப்பான் கிரிகொரிய நாட்காட்டிக்கு மாறிவிட்டது.
*எப்போதும் ஒரே கிரிகொரிய நாளில் வராது. சிலவேளைகளில் ஏப்பிரல் 4.
கூட்டுச் செயல்பாடு
[தொகு]கிழக்காசிய இளைஞர் விளையாட்டுகள்
[தொகு]கட்டற்ற வணிக ஒப்பந்தங்கள்
[தொகு]ஒப்பந்தப் பெயர் | தரப்புகள் | அக்காலத் தலைவர்கள் | பேரத்தின் தொடக்கம் | கைஎழுத்திட்ட நாள் | தொடங்கிய காலம் | நடப்பு நிலவரம் |
---|---|---|---|---|---|---|
சீனா–தென்கொரியா கவஒ | சீ சின்பிங், பார்க் கியூன் கியூ | மே, 2012 | ஜூன் 01, 2015 | திச. 30, 2015 | நடைமுறைப் படுத்தப்பட்டது | |
சீனா–யப்பான்–தென்கொரியா கவஒ | சீ சின்பிங், சின்சோ அபே, பார்க் கியூன் கியூ | மார்ச்சு 26, 2013 | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | 10 முறை பேரம் | |
யப்பான்-மங்கோலியா EPA | சின்சோ அபே, திசாகியாகீன் எல்பெகுதோரிய் | - | பிப். 10, 2015 | - | நடைமுறைப் படுத்தப்பட்டது | |
சீனா-மங்கோலியா கவஒ | சீ சின்பிங், திசாகியாகீன் எல்பெகுதோரிய் | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | அலுவலியலாக முன்மொழியப்பட்டது | |
சீனா-ஆங்காங் கூபொநெஒ (CEPA) | யான் சமீன், துங் சே-குவா | - | ஜூன் 29, 2003 | - | நடைமுறைப் படுத்தப்பட்டது | |
சீனா-மக்காவு கூபொநெஒ (CEPA) | யான் சமீன், எட்மண்டு கோ ஆவு-வாகு | - | அக்தோ. 18, 2003 | - | நடைமுறைப் படுத்தப்பட்டது | |
ஆங் காங்-மக்காவு கூபொநெஒ (CEPA) | கேரி லாம், பெர்னாண்டோ சூயி | அக்தோ. 09, 2015 | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | பேரத்தில் உள்ளது | |
பொகூசஒ | கூ சிங்தாவ், மா யிங்-யியோயு | ஜன. 26, 2010 | ஜூன் 29, 2010 | ஆக. 17, 2010 | நடைமுறைப் படுத்தப்பட்டது | |
CSSTA (பொகூசஒ சார்ந்து) | சீ சின்பிங், மா யிங்-யியோயு | மார்ச்சு, 2011 | ஜூன் 21, 2013 | கிடைக்கவில்லை | நீக்கப்பட்டது | |
CSGTA (பொகூசஒ சார்ந்து) | கூ சிங்தாவ், மா யிங்-யியோயு | பிப். 22, 2011 | கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை | நிறுத்தி வைக்கப்பட்டது |
(CSGTA -விரிவு கிடைக்கவில்லை;CEPA-கூட்டுறவு பொருளியல் நெறிமுறை ஒப்பந்தம் எனக் கொள்ளப்பட்டது.விளக்கம் கிடைத்தால் தமிழ்ப்படுத்தலாம்)
படைத்துறை கூட்டு ஒப்பந்தங்கள்
[தொகு]பெயர் | சுருக்கம் | வட்டாரத் தரப்புகள் |
---|---|---|
சாங்காய் கூட்டுறவு ஒருங்கமைப்பு] | சாகூஒ (SCO) | |
படைத் தகவல் ஒப்பந்தப் பொதுக் காப்புறுதி | பதஒபொகா (GSOMIA) | |
சீன-வடகொரிய இணைமாற்ற உதவி, கூட்டுறவு நட்பு உடன்படிக்கை | - | |
யப்பான், அமெரிக்க இணைமாற்றக் கூட்டுறவும் காப்புறுதி குறித்த உடன்படிக்கை | - | |
அமெரிக்க, கொரியக் குடியரசு இணைமாற்றத் தற்காப்பு உடன்படிக்கை | - | |
தைவான் உறவுகள் சட்டம் (சீன அமெரிக்க இணைமாற்றத் தற்காப்பு உடன்படிக்கை 1980 முன்பு) | தைஉச சீஅஇதஉ | |
நாட்டோ சாராத பெருநட்புறவு - வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு)சார்ந்த உலகப் பங்குதாரர்கள் (நாட்டோ அமைப்பின் அயலுறவுகள்) | - | [51] |
பெருநகரங்களும் நகரியங்களும்
[தொகு]-
பீகிங் சீனத் தலைநகரம் ஆகும். இது வடக்கு சீனாவின் மிகப் பெரிய பெருநகரம் ஆகும்.
-
சாங்காய் சீனாவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது உலகிலேயே மிகவும் பெரிய நகரமும் ஆகும். இது உலகின் நிதி மையமும் ஆகும்;உலகின் அலுவல்மிக்க துறைமுகமும் போக்குவரத்துக் களமும் ஆகும்.
-
குவாங்ழவு தென்சீனாவில் முதன்மை நகரங்களில் ஒன்றாகும். இது 2,200 ஆண்டு வரலாறு உடையதும் கடல்வழி பட்டுத் தடத்தின் பெருமுனையமும் ஆகும். இது இப்போதும் பெரிய துறைமுகமாகவும் போக்குவரத்துக் களமாக விளங்குகிறது.
-
சீயான் அல்லது சாங்கான் சீனாவின் நான்கு பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகும். இது அனைத்து சீன அரச ம்ரபுகளிலும் முதன்மையாக விளங்கியது. இது கிழக்காசியா மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்கம் வகித்ததாகும்.
-
ஆங்காங் உலகின் முதன்மை நிதி மையங்களில் ஒன்றாகும். இது பன்முகப் பண்பாட்டுப் பெருந்கரம் ஆகும்.
-
தைபேய் சீனக் குடியரசு எனப்படும் தைவானின் தலைநகரம் ஆகும்.
-
தோக்கியோ யப்பானின் தலைநகரம் ஆகும். இது மக்கள்தொகையிலும் தொகு தேசிய விளைபொருளிலும் உலகின் மிகப்பெரிய பெருநகரங்களில் ஒன்றாகும்.
-
ஒசாகா யப்பானின் இரண்டாம் மிகப் பெரிய பெருநகரம் ஆகும்.
-
கயோட்டோ ஒராயிரம் ஆண்டுகலாக யப்பான் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.
-
சீயோல் தென்கொரியாவின் தலைநகரமும் உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும் ஆகும். இது உலக தொழில்நுட்பக் களமாகும்.
-
பியோங்யாங் வடகொரியாவின் தலைநகரமாகும். இது கொரியத் தீவகத்தின் முதன்மைப் பெருநகரமாகும்]].
-
உலான்பாதர் மங்கோலியாவின் தலைநகரமாகும். இதன் 2008 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஒரு மில்லியன் ஆகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ கிழக்காசியப் பரப்பில் உறுப்பு நாடுகளின் பரப்புகளின் கூட்டலுக்கும் உறுப்புப் பகுதிகளின் பரப்புகளின் கூட்டலுக்கும் சமமாகும். இதில் ஆங்காங், மக்காவு அடங்கிய பெருஞ்சீனப் பரப்பும், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, சீனத் தைவான், யப்பான் ஆகியவற்றின் பரப்புகளும் அடங்கும்.
- ↑ மக்கள்தொகையில் ஆங்காங், மக்காவு அடங்கிய பெருஞ்சீன மக்கள்தொகையும், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, சீனத் தைவான், யப்பான் ஆகியவற்றின் மக்கள்தொகைகளும் அடங்கும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இது சீனக் குடியரசு எனப்படுகிறது.
- ↑ Non-United Nations member state
- ↑ 3.0 3.1 "East Asia". என்கார்ட்டா கலைக்களஞ்சியம். Microsoft. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-01-12.
the countries and regions of Mainland China, Hong Kong, Macau, Taiwan, Mongolia, South Korea, North Korea and Japan.
- ↑ Columbia University – "East Asian cultural sphere" பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம் "யப்பானும் கொரியாவும் வியட்நாமும் தாங் அரச மரபு காலத்து சீன நாகரிகத்தைப் பகிந்து தகவமைந்தபோது, கிழக்காசியப் பண்பாட்டுக் களம் உருவாகிப் படிமலர்ந்தது. குறிப்பாக, புத்த சமயம், கன்பூசியச் சமூக, அரசியல் விழுமியங்களையும் இலக்கியச் சீன எழுத்து முறையையும் பகிர்ந்தபோது தோன்றிப் படிமலர்ந்தது."
- ↑ Prescott, Anne (2015). East Asia in the World: An Introduction. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765643223.
- ↑ Miller, David Y. (2007). Modern East Asia: An Introductory History. Routledge. pp. xxi–xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765618221.
- ↑ Prescott, Anne (2015). East Asia in the World: An Introduction. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765643223.
- ↑ Kort, Michael (2005). The Handbook Of East Asia. Lerner Publishing Group. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761326724.
- ↑ "Country Profiles: East Asia". Children and Armed Conflict Unit at the University of Essex.
- ↑ East Asia. Springer Netherlands. https://link.springer.com/journal/12140.
- ↑ "East Asia". Dictionary.com.
- ↑ Seybolt, Peter J. "China, Korea and Japan: Forgiveness and Mourning". Center for Asian Studies. Center for Asian Studies.
- ↑ Asian History Module Learning. Rex Bookstore Inc. 2002. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9712331244.
- ↑ Salkind, Neil J. (2008). Encyclopedia of Educational Psychology. Sage Publications. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1412916882.
- ↑ Holcombe, Charles (2010). A History of East Asia: From the Origins of Civilization to the Twenty-First Century. Cambridge University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521731645.
- ↑ Ng, Arden. "East Asia is the World's Largest Economy at $29.6 Trillion USD, Including 4 of the Top 25 Countries Globally". Blueback.
- ↑ Association of Academies of Sciences in Asia (2012). Towards a Sustainable Asia: The Cultural Perspectives. Springer. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3642166686.
- ↑ Minahan, James B. (2014). Ethnic Groups of North, East, and Central Asia: An Encyclopedia. ABC-CLIO. pp. xx–xxvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1610690171.
- ↑ Zaharna, R.S.; Arsenault, Amelia; Fisher, Ali (2013). Relational, Networked and Collaborative Approaches to Public Diplomacy: The Connective Mindshift (1st ed.). Routledge (published May 1, 2013). p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415636070.
- ↑ Holcombe, Charles (2017). A History of East Asia: From the Origins of Civilization to the Twenty-First Century. Cambridge University Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1107544895.
- ↑ Szonyi, Michael (2017). A Companion to Chinese History. Wiley-Blackwell. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1118624609.
- ↑ திபெத்திய புத்த சமயம் உட்பட
- ↑ Salkind, Neil J. (2008). Encyclopedia of Educational Psychology. Sage Publications. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1412916882.
- ↑ Chongho Kim, "Korean Shamanism", 2003 Ashgate Publishing
- ↑ Andreas Anangguru Yewangoe, "Theologia crucis in Asia", 1987 Rodopi
- ↑ Ellington, Lucien (2009). Japan (Nations in Focus). p. 21.
- ↑ Walker, Hugh Dyson (2012). East Asia: A New History. AuthorHouse. p. 119.
- ↑ Amy Chua, Jed Rubenfeld (2014). The Triple Package: How Three Unlikely Traits Explain the Rise and Fall of Cultural Groups in America. Penguin Press HC. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1594205460.
- ↑ Kang, David C. (2012). East Asia Before the West: Five Centuries of Trade and Tribute. Columbia University Press. pp. 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231153195.
- ↑ Goucher, Candice; Walton, Linda (2012). World History: Journeys from Past to Present. Routledge (published September 11, 2012). p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415670029.
- ↑ Norman, Jerry (1988). Chinese. Cambridge University Press. pp. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521296533.
- ↑ Tsai, Henry (February 15, 2009). Maritime Taiwan: Historical Encounters with the East and the West. Routledge. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765623287.
{{cite book}}
: CS1 maint: date and year (link) - ↑ 33.0 33.1 33.2 33.3 "World Economic Outlook Database, October 2017". IMF.
- ↑ 1949 முதல் 1971 வரை "சீனா"அல்லது "தேசியச் சீனா" எனப்பட்டது.
- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ Include all area which under PRC's government control(exclude "South Tibet" and disputed islands).
- ↑ Seoul was the de jure capital of the DPRK from 1948 to 1972.
- ↑ Taipei is the ROC's seat of government by regulation. Constitutionally, there is no official capital appointed for the ROC.
- ↑ CIA Factbook பரணிடப்பட்டது 2020-06-24 at the வந்தவழி இயந்திரம்: "91.6%" 1,379 பில்லியன் மொத்த மக்களில் "ஆன் சீனர் 91.6%" (ஜூலை 2017 est.)
- ↑ "人口推計 – 平成 28年 12月 報" (PDF).
- ↑ "한민족" (in ko). 위키백과, 우리 모두의 백과사전. 2017-03-29. https://ko.wikipedia.org/wiki/한민족.
- ↑ "Hui people" (in en). Simple English Wikipedia, the free encyclopedia. 2016-02-18. https://simple.wikipedia.org/w/index.php?title=Hui_people&oldid=5330794.
- ↑ "壮族" (in zh). 维基百科,自由的百科全书. 2017-03-25. https://zh.wikipedia.org/w/index.php?title=%E5%A3%AE%E6%97%8F&oldid=43741204.
- ↑ "满族" (in zh). 维基百科,自由的百科全书. 2017-02-23. https://zh.wikipedia.org/w/index.php?title=%E6%BB%A1%E6%97%8F&oldid=43332224.
- ↑ "苗族" (in zh). 维基百科,自由的百科全书. 2017-02-19. https://zh.wikipedia.org/w/index.php?title=%E8%8B%97%E6%97%8F&oldid=43280912.
- ↑ Gordon, Raymond G. Jr., ed. (2005). Ethnologue: Languages of the World (15th ed.). Dallas: SIL International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55671-159-X. இணையக் கணினி நூலக மைய எண் 224749653.
- ↑ Wenzel-Teuber, Katharina (2012). "People's Republic of China: Religions and Churches Statistical Overview 2011". Religions & Christianity in Today's China II (3): pp. 29–54 இம் மூலத்தில் இருந்து 21 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170427151725/http://www.china-zentrum.de/fileadmin/downloads/rctc/2012-3/RCTC_2012-3.29-54_Wenzel-Teuber_Statistical_Overview_2011.pdf.
- ↑ 49.0 49.1 Wenzel-Teuber, Katharina (2017). "Statistics on Religions and Churches in the People's Republic of China – Update for the Year 2016". Religions & Christianity in Today's China VII (2): pp. 26–53 இம் மூலத்தில் இருந்து 22 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170722112103/http://www.china-zentrum.de/fileadmin/downloads/rctc/2017-2/RCTC_2017-2.26-53_Wenzel-Teuber__Statistics_on_Religions_and_Churches_in_the_PRC_%E2%80%93_Update_for_the_Year_2016.pdf.
- ↑ பெரும்பாலும் மஞ்சு வகை, மங்கோலியவகை
- ↑ Shirley Kan (December 2009). Taiwan: Major U.S. Arms Sales Since 1990. DIANE Publishing. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4379-2041-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: East Asia
- High resolution map of East Asian region