உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தார்

ஆள்கூறுகள்: 25°30′N 51°15′E / 25.500°N 51.250°E / 25.500; 51.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கட்டார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கத்தார் அரசு
دولة قطر (அரபு மொழி)
தவ்லத் கத்தார்
கொடி of கத்தார்
கொடி
சின்னம் of கத்தார்
சின்னம்
நாட்டுப்பண்: السلام الأميري
அஸ்ஸலாம் அல் அமீரி  (ஒலிபெயர்ப்பு)
அமீரிய வணக்கம்

அரேபியத் தீபகற்பத்தில் கத்தாரின் (கரும்பச்சை) இருப்பிடமும் பரப்பும்.
அரேபியத் தீபகற்பத்தில் கத்தாரின் (கரும்பச்சை) இருப்பிடமும் பரப்பும்.
Location of கத்தார்
தலைநகரம்தோகா
25°18′N 51°31′E / 25.300°N 51.517°E / 25.300; 51.517
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு
பிற மொழிகள்ஆங்கிலம்
இனக் குழுகள்
(2015[1])
88.4% கத்தாரிகள் அல்லாதவர்கள்
11.6% கத்தாரிகள்
சமயம்
இசுலாம்
மக்கள்கத்தாரி
அரசாங்கம்ஒருமுக அரசியல் சட்ட முடியாட்சி
• அமீர்
தமீம் பின் அமது அல் தானி
• துணை அமீர்
அப்துல்லா பின் அமது பின் காலிப்பா அல் தானி
• தலைமை அமைச்சர்
அப்துல்லா பின் நாசர் பின் காலிப்பா அல் தானி
சட்டமன்றம்சட்ட மன்றம்
நிறுவுதல்
18 திசம்பர் 1878
• விடுதலை அறிவிக்கப்பட்டது

1 செப்டம்பர் 1971

3 செப்டம்பர் 1971
பரப்பு
• மொத்தம்
11,581 km2 (4,471 sq mi) (158ஆவது)
• நீர் (%)
0.8
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
2,641,669[2] (140ஆவது)
• 2010 கணக்கெடுப்பு
1,699,435[3] (148ஆவது)
• அடர்த்தி
176/km2 (455.8/sq mi) (76ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$340.640 பில்லியன்[4] (51வது)
• தலைவிகிதம்
$124,529[4] (முதல்)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$166.326 பில்லியன்[4] (56ஆவது)
• தலைவிகிதம்
$60,804[4] (6ஆவது)
ஜினி (2007)41.1[5]
மத்திமம்
மமேசு (2014) 0.850[6]
அதியுயர் · 32ஆவது
நாணயம்[[கத்தாரி ரியால்|ரியால்] (QAR)
நேர வலயம்ஒ.அ.நே+3 (AST)
வாகனம் செலுத்தல்வலது[7]
அழைப்புக்குறி+974
ஐ.எசு.ஓ 3166 குறியீடுQA
இணையக் குறி

கத்தார் (Qatar அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளன. பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி இதனை அருகில் உள்ள தீவு நாடான பகுரைனில் இருந்து பிரிக்கிறது.

உதுமானியர் ஆட்சியைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1971 இல் விடுதலை பெறும் வரை, கத்தார் ஒரு பிரித்தானிய பாதுகாப்பு பெற்ற நாடாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தானிகள் அவை கத்தாரை ஆண்டு வருகிறது. ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார். கத்தார் ஒரு மரபுவழி முடியாட்சி. அதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி ஆவார். இது ஒரு அரசியல்சட்ட முடியாட்சியா[8][9] அல்லது முழுமுதல் முடியாட்சியா[10][11][12][13] என்பது தெளிவாக இல்லை. 2003ல் நடந்த பொது வாக்கெடுப்பில், கத்தாரின் அரசியல் சட்டம் ஏறத்தாழ 98% பேராதரவுடன் ஏற்பு பெற்றது.[14][15] 2017 இன் தொடக்கத்தில், கத்தாரின் மொத்த மக்கள் தொகை 2.6 மில்லியனாக இருந்தது. இவர்களுள் 313,000 மக்கள் கத்தார் குடிமக்கள். 2.3 மில்லியன் மக்கள் அயல்நாட்டைச் சேர்ந்த குடியிருப்போர்.[16] இசுலாம் இந்நாட்டின் அலுவல்முறை சமயம் ஆகும்.[17]

கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது.[18] தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது.[19]

கத்தார் அரேபிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. அரேபிய வசந்தத்தின் போது, பல்வேறு போராளிக் குழுக்களுக்கு நிதியாகவும் உலகெங்கும் வளர்ந்து வரும் அதன் ஊடகப் பிரிவான அல் ஜசீரா ஊடகக் குழுமம் வழியாகவும் ஆதரவு அளித்ததாக கருதப்படுகிறது.[20][21][22]

கத்தார் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதால், இடைநிலை அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது.[23][24] கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியை நடத்துகிறது. கத்தார் இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும்.[25]

சூன் 2017ல், சவூதி அரேபியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், கத்தார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22
(72)
23
(73)
27
(81)
32
(90)
38
(100)
41
(106)
41
(106)
41
(106)
38
(100)
35
(95)
29
(84)
24
(75)
32.6
(90.7)
தாழ் சராசரி °C (°F) 13
(55)
13
(55)
17
(63)
21
(70)
25
(77)
27
(81)
29
(84)
29
(84)
26
(79)
23
(73)
19
(66)
15
(59)
21.4
(70.6)
பொழிவு mm (inches) 12.7
(0.5)
17.8
(0.701)
15.2
(0.598)
7.6
(0.299)
2.5
(0.098)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
2.5
(0.098)
12.7
(0.5)
71
(2.795)
ஆதாரம்: weather.com[26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Qatar". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 8 February 2012. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Population structure". Ministry of Development Planning and Statistics. 31 January 2017. Archived from the original on 26 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Populations". Qsa.gov.qa. Archived from the original on 9 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2010.
  4. 4.0 4.1 4.2 4.3 "World Economic Outlook Database, April 2018 – Report for Selected Countries and Subjects". அனைத்துலக நாணய நிதியம் (IMF). April 2018.
  5. "GINI index". World Bank. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
  6. "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
  7. "List of left- & right-driving countries – World Standards". பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  8. BBC News, How democratic is the Middle East?, 9 September 2005.
  9. United States Department of State Country Reports on Human Rights Practices for 2011: Qatar, 2011.
  10. "US State Dept's Country Political Profile – Qatar" (PDF).
  11. Gardener, David. "Qatar shows how to manage a modern monarchy". Financial Times. https://www.ft.com/content/2e141faa-dd82-11e2-a756-00144feab7de. 
  12. "The World Factbook". த வேர்ல்டு ஃபக்ட்புக் இம் மூலத்தில் இருந்து 2012-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120207225832/https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2128.html#qa. 
  13. "Canada – Qatar Bilateral Relations". Government of Canada. http://www.canadainternational.gc.ca/qatar/bilateral_relations_bilaterales/index.aspx?lang=eng&pedisable=true. 
  14. "IFES Election Guide – Elections: Qatar Referendum Apr 29 2003". www.electionguide.org. Archived from the original on 13 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  15. "Qatar 2003". www.princeton.edu. Archived from the original on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  16. "Population of Qatar by nationality – 2017 report". பார்க்கப்பட்ட நாள் 7 February 2017.
  17. "The Constitution". Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  18. "Indices & Data | Human Development Reports". United Nations Development Programme. 14 March 2013. Archived from the original on 12 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 June 2013.
  19. "Qatar human development".
  20. Dagher, Sam (17 October 2011). "Tiny Kingdom's Huge Role in Libya Draws Concern". Online.wsj.com. https://online.wsj.com/news/articles/SB10001424052970204002304576627000922764650. பார்த்த நாள்: 30 December 2013. 
  21. "Qatar: Rise of an Underdog". Politicsandpolicy.org. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  22. Ian Black in Tripoli. "Qatar admits sending hundreds of troops to support Libya rebels". Theguardian.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  23. Cooper, Andrew F. "Middle Powers: Squeezed out or Adaptive?". Public Diplomacy Magazine. Archived from the original on 17 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  24. Kamrava, Mehran. "Mediation and Qatari Foreign Policy" (PDF). Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  25. Paul Rhys in Doha. "Blatter reaches out to Arabia". Aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  26. "Monthly Averages for Doha, Qatar". weather.com. The Weather Channel. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தார்&oldid=3928504" இலிருந்து மீள்விக்கப்பட்டது