வடகொரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு
조선민주주의인민공화국
朝鮮民主主義人民共和國
ஜோஸன் மின்ஜுஜுயி இன்மின் கொங்ஹாகுக்
Chosŏn Minjujuŭi Inmin Konghwaguka
கொடி சின்னம்
குறிக்கோள்: 강성대국 (強盛大國)
(சக்தி வாய்ந்த வளமிக்க நாடு)
நாட்டுப்பண்: Aegukka
தலைநகரம் பியொங்யாங்
39°2′N 125°45′E / 39.033°N 125.750°E / 39.033; 125.750
பெரிய நகர் பியோங்யாங்
ஆட்சி மொழி(கள்) கொரிய மொழி
அரசாங்கம் கம்யூனிசம்b
 •  ஜனாதிபதி கிம் இல்-சுங் (காலமானார்)c
 •  வடகொரிய தேசிய பாதுகாப்பு கமிஷன் தலைவர் கிம் ஜொங்-இல்(காலமானார்)d
 •  சுப்ரீம் மக்கள் அசெம்பிளி தலைவர் கிம் யொங்-நாம்e
 •  பிரதமர் கிம் யொங்-இல்
உருவாக்கம்
 •  விடுதலை அறிவிப்பு மார்ச் 1 1919h 
 •  விடுதலை ஆகஸ்ட் 15 1945 
 •  விடுதலை அறிவிப்பு செப்டம்பர் 9 1948 
பரப்பு
 •  மொத்தம் 1,20,540 கிமீ2 (98வது)
46,528 சதுர மைல்
 •  நீர் (%) 4.87
மக்கள் தொகை
 •  2006 கணக்கெடுப்பு 23,113,019f (48வது)
மொ.உ.உ (கொஆச) 2006 g கணக்கெடுப்பு
 •  மொத்தம் $22.85 பில்லியன் (85வது)
 •  தலைவிகிதம் $1,007 (149வது)
நாணயம் வொன் (₩) (KPW)
நேர வலயம் கொரிய நேரம் (ஒ.அ.நே+8:30)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+8:30)
அழைப்புக்குறி 850
இணையக் குறி எதுவுமில்லை (.kp பதிவு செய்யப்பட்டுள்ளது)
a "நிர்வாக அலகுகளும் மக்கள் தொகையும் (#26)" (PDF). DPRK: The Land of the Morning Calm. Permanent Committee on Geographical Names for British Official Use (2003-04). பார்த்த நாள் 2006-10-10.
bCIA உலகத் தரவுகள் நூல் (2007)[1] uses the term "தனி மனித கம்யூனிச சர்வாதிகாரம்." ஜூஷ் (Juche) கொள்கை அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளது.[2]
cஇறப்பு: 1994.
d கிம் ஜொங்-இல் நாட்டின் பிரதான தலைவராக இருக்கிறார்.
e கிம் யொங்-நாம் வெளிநாட்டலுவல்கள் தலைவர்.
f உசாத்துணை: CIA உலக தரவு நூல்,[3] வட கொரியா தனது தரவுகளை வெளியிடுவதில்லை.
g உசாத்துணை: ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு[4]

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 வது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.

.

வரலாறு[தொகு]

  • கி.மு. 2333 ல் கொஜோசியோன் டாங் (Gojoseon Dangun) மூலம் முதல் கொரிய அரசு நிறுவப்பட்டது. வடக்கு கொரிய தீபகற்பம் மற்றும் மஞ்சூரியா பகுதிகள் வரை விரிவடைந்தது.இதைபற்றிய குறிப்புகள் கி.மு. 7 ஆம் நூற்றாண்டுகளில் சீன வரலாற்று குறிப்புகளில் கூறப்படுகிறது.
  • சீன ஹன் பாரம்பரியத்துடன் ஏற்பட்ட பல மோதல்களை அடுத்து கொஜோசியோன் அரசு சிதைந்தது.கொரியா வடக்கில் கோகுர்யோ, மற்றும் பெக்ஜ் மற்றும் தெற்கில் சில்லா ஆகிய மூன்று அரசுகளாக பிரிவடைந்தது.
  • 372 ல் கோகுர்யோ அரசின் அதிகாரபூர்வ மதமாக புத்த மதம் ஏற்றுகொள்ளப்பட்டது.
  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சீனாவுடன் பல யுத்தங்கள் மற்றும் சீன படையெடுப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்தது.
  • 7 ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு வாரிசு போர்களால் வீழ்ச்சியடைந்தது
  • 676 ல் ஒருங்கிணைந்த சில்லா நாட்டின் ஆட்சியின் கீழ் மற்ற நாடுகள் ஒன்றினைக்கப்பட்டது.இக்காலத்தில் கொரியா மற்றும் சீனா இடையியில் மிகவும் அமைதியான உறவு இருந்தது.இது 7-10 வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வரை நீடித்தது.
  • 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்பு மூலம் இது மிகவும் பாதிக்கப்பட்டது.1388 ல் மங்கோலிய பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர் ஜோசியான் வம்சம் நிலைபெற்றது.
  • 1394 ல் ஜோசியான் நாட்டில் ஏற்ப்பட்ட அமைதியின்மை அரசியல் பிரச்சனைகளை தொடர்ந்து இதன் தலைநகரம் தெற்கு ஹான்யாங்கிற்கு (தற்கால சியோல்) மாற்றப்பட்டது.
  • 1592-1598 வரையிலான காலகட்டத்தில் கொரியாவை கைப்பற்றும் எண்ணத்தில் இரண்டு முறை ஜப்பான் படையெடுபை முறியடித்தது.
  • 17-19 நூற்றாண்டுகளில் சீனாவின் சார்ந்த தன்னிச்சையான நாடாக மாறியது.
  • 1871 இல் காங்வா தீவில் அமெரிக்க படைகளுடன் ஏற்பட்டபோரில் 243 கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட பின் கொரியா ஜப்பான் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டப்பட்டது.
  • 1910 ல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொரியா வந்தது.
  • இரண்டாம் உலக போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஜப்பனீஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது
  • 1948 ல் வட மற்றும் தென் கொரியாக்கள் பிரிக்கப்பட்டது
  • 1950 ல் கொரிய போர் ஏற்ப்பட்டது 1953 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்து கையொப்பமிடப்பட்டது
  • 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் இவிரு நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

சமயம்[தொகு]

இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

மொழி[தொகு]

கொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நிர்வாக அலகுகள்[தொகு]

வட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

  • மாகாணங்கள்
    • சஹாங்-டூ
    • வட ஹாம்கயாங்
    • தெற்கு ஹாம்கயாங்
    • வடக்கு க்வாங்கே
    • தெற்கு க்வாங்கே
    • காங்வோன்-டூ
    • வடக்கு பியாங்கன்
    • தெற்கு பியாங்கன்
    • ரெயாங்கங்-டூ
  • பிரிவுகள்
    • கெசாங் தொழில் மண்டலம்
    • கும்காங்க்சன் சுற்றுலா மண்டலம்
    • சின்நியு சிறப்பு மண்டலம்

நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்

    • பியாங்யாங்
    • ராஸன்

முக்கிய நகரங்கள்[தொகு]

  • சின்நியுஜு
  • கெசாங்
  • நம்போ
  • சோங்ஜின்
  • வான்சன்
  • சரிவான்
  • ஹவுர்யோங்
  • ஹம்ஹங்
  • ஹேஜு
  • காங்க்ஜி
  • ஹெய்சான்
  • கிம்சியாக்
  • காங்க்சோ
வட கொரியாவின் நிர்வாகப் பிரிவுகள்.
வடகொரியத் தேசப்படம்
இச் செய்மதிப் புகைப்படமானது இரவுநேர கொரியத் தீபகற்பத்தின் காட்சியைக் காட்டுகிறது. வடகொரியாவுக்கும், தென்கொரியா மற்றும் சீனாவுக்கும் இடையில் பாரிய வேறுபாட்டை அவதானிக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. வட கொரியா
  4. வட கொரியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகொரியா&oldid=2053391" இருந்து மீள்விக்கப்பட்டது