கொரிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

ஃஆங்குவல் எழுத்து

கொரியா மொழி எழுத்துக்கள் வரலாறு[தொகு]

கொரிய மொழி எழுத்துக்கள் ஃஆன்குவல் என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துக்கள் 14ம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா யப்பானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஃஆங்குவல் எழுத்துக்களின் நெடுங்கணக்கில் 51 எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27 கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா என்று அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் குழந்தை ஒலி எழுத்து (=சேய் எழுத்து) என்றும் மா என்பது தாய் ஒலி (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துக்கள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

கொரிய மொழி படிக்க உதவும் இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_மொழி&oldid=2565997" இருந்து மீள்விக்கப்பட்டது