கொரியன் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரியன் தொடர் அல்லது கே-ராமா என்பது தென்கொரிய நாட்டில் தயாரித்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரை குறிக்கும். இந்த தொடர்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இது கொரியன் கலாச்சாரத்தில் கொரியன் வாவ் என்று அழைக்கப்பட்டு உலகம் முழுவது பல மொழிகளில் உப தலைப்புடன் மற்றும் மொழுமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றது.[1][2] 2003ஆம் ஆண்டு ஒளிபரப்பான டே ஜங் காம் என்ற தொடர் 91 நாடுகளில் ஒளிபரப்பானது. இந்த தொடர் தமிழ் மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

தோற்றம்[தொகு]

தென் கொரியன் தொடர்கள் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறும் தொடர்கள் வடிவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர் என எல்லோரும் ஒன்றாக சேர்த்து தொடரை தயாரிக்கும் வழக்கம் கொரியன் தொலைக்காட்சி துறைக்கு உண்டு. கொரியன் தொடர் தமிழ் தொடரையும் விட முற்றும் வேறு பட்டு தயாரிப்பதுடன் நேர வித்தியாசத்துடனும் ஒளிபரப்பி வருகின்றது. ஒரு தொடர் 12 முதல் 24 அத்தியாயங்களுடன் ஒவ்வொரு பருவங்களாக 60 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்து வருகிறது. வரலாற்று தொடர்கள் 50 முதல் 100 ஆத்தியாயங்களுடன் ஒளிபரப்பும் வழக்கமும் உண்டு.

ஒளிபரப்பும் நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து 2 நாட்கள் என்ற விகிதத்தில் திங்கள் மற்றும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன், வியாழன் வெள்ளி அல்லது சனி - ஞாயிறு போன்ற நாட்களில் தொடர்கள் ஒளிபரப்பு செய்து வருகின்றது. காலை நேர தொடர், மாலை நேர தொடர் என்ற பிரிவில் 100 முதல் 120 அத்தியாயங்களுடன் 45 நிமிட தொடர்களும் தயாரிக்கும் ஒளிபரப்பும் வழக்கமும் உண்டு.[3]

கொரியன் மொழியில் முன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி, கொரியன் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி, சியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி, ஓரியன் சினிமா நெட்வொர்க் தொலைக்காட்சி, டிவிஎன், ஜெரிபிசி தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சி சேவைகள் தற்பொழுது இயக்கி வருகின்றது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் வித்தியாசமான வகை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. உதாரணம்: ஓரியன் சினிமா நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் திகில், பரபரப்பு, அதிரடி போன்ற வகை தொடர்கள் மட்டும் தான் ஒளிபரப்பாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியன்_தொடர்&oldid=3658660" இருந்து மீள்விக்கப்பட்டது