கொரியத் தீபகற்பம்
கொரியத் தீபகற்பம் | |
கொரிய மொழி: 조선반도 (Chosŏn Pando) வட கொரியா, கொரிய மொழி: 한반도 (Han Bando) தென் கொரியா | |
ஆசியாவின் தீபகற்பம் | |
கரும் பச்சையில் காணப்படுவது கொரிய தீபகற்பம்
| |
நாடுகள் | வட கொரியா, தென் கொரியா |
---|---|
Borders on | சீனா, ருசியா, சப்பான் கடல், கிழக்கு சீன கடல், மஞ்சள் கடல், கொரியா நீரிணை |
மிகவுயர் புள்ளி | பேக்டு மலை |
- உயர்வு | 2,744 மீ (9,003 அடி) |
மிகத்தாழ் புள்ளி | கடல் மட்டம் |
நீளம் | 1,100 கிமீ (684 மைல்), வடக்குத் தெற்காக |
பரப்பு | 2,20,847 கிமீ² (85,270 ச.மைல்) |
Population | 7,44,61,933 (2012[1]) |
Density | 337 / கிமீ2 (873 / ச மை) |
|
கொரியத் தீபகற்பம் (Korean Peninsula) என்றறியப்படும் முக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பானது, கிழக்கு ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ளது.[2] அது தெற்கே பசுபிக் பெருங்கடலில் சுமார் 1,100 கிலோமீட்டர் (684 மைல்) அளவுக்கு வியாபித்திருக்கிறது. மற்றும் கிழக்கு சப்பான் கடலிலும் சூழ்ந்துள்ளது.[3] மேலும் அது மஞ்சள் கடல் (Yellow Sea) மேற்கு கொரியாவின் நீரிணையில் இருகரைகளிலும் இணைந்துள்ளது.[4]
வரலாறு
[தொகு]இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிவரை கொரியா அதன் நிலப்பகுதியையும், தோராயமாகக் கொரியத் தீபகற்பத்தில் ஒத்துப்போகும் ஒரு அரசியல் அமைப்பாகும். போர் நிறுத்த உடன்பாட்டின்படி 1953 ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவடைந்த பின்னர், குடாநாட்டின் வடபகுதி பிரிவுகளில் கொரிய சனநாயக மக்கள் குடியரசால் ஆளப்படுகின்றது. தெற்குப் பகுதிகளில் கொரியக் குடியரசு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.[5]
கொரியத் தீபகற்பத்தின் வடக்கு எல்லைகளைப் பொதுவாக (மற்றும் மறைமுகமாக) இன்றைய நிலைக்கு ஒத்துப்போகிறபடி அரசியல் உள்ளது. வட கொரியா அதன் வடக்கு அண்டை நாடான சீனாவின் எல்லையிடையே 1,416 கிமீ (880 மைல்) இணைந்துள்ளது ஜிலின் (Jilin), லியோனிங் (Liaoning), மற்றும் உருசியா ஆகிய மாகாணங்கள் 19 கிமீ (12 மைல்) உள்ளது, இந்த எல்லையின் பகுதிகளில், யாலு (Yalu),அம்னோக் (Amnok) மற்றும் துமன் (Tumen/Tuman/Duman) போன்ற ஆறுகள் இயற்கையாகவே உருவாகின்றன. இங்குள்ள வரையறைப்படி எடுத்துக்காட்டாக, (அதன் தீவுகள் உள்பட) கொரியத் தீபகற்பத்தில் 220.847 கிமீ2 (85.270 சதுர மைல்) ஒரு பிராந்தியமாக உள்ளது.[6]
அணு ஆயுதப் போரில் கொரியத் தீபகற்பம்
[தொகு]வடகொரியா, இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோர பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தென்கொரியா உள்ளுர் ஊடகமொன்றில் செய்திகள் வெளியிட்டது.[7] இதனால் சப்பான் மற்றும் ஆசிய பசுபிக்கில் அமைக்கப்பட்டள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிகாட்டப்பட்டது.
தென்கொரியா அமெரிக்கவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது, அதன் எச்சரிக்கையை இருநாடுகளும் செவிசாய்க்காத காரணத்தால் வடகொரியா உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இரங்கியது. வடகொரியா, தென்கொரியாமீது போர் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார்நிலையில் வைத்தது மேலும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் 05-04-2013 அன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில்தான் வடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப்பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.[8] இதற்கு பதிலாக அமெரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தனது ஏவுகணை மற்றும் யுத்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கொரியத் தீபகற்பத்தை நோக்கி நகர்த்தி வந்தது.[9]
இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்நேரத்திலும் அணு ஆயுதப்போர் தொடங்கும் அபாயம் உள்ளதாக வள்ளுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். தென்கொரிய இலக்குகளைவிட, ஐக்கிய அமெரிக்கா ராணுவ தளங்களையே வடகொரியா குறிவைத்துள்ளது என அறியப்பட்டது.[10] வடகொரியா எத்தகைய ஏவுகணையை கிழக்கு கரையோர பகுதியை நோக்கி நிலைநிறுத்தியுள்ளது என்ற சந்தேகம் நிலவியது. எனினும் கண்டம் விட்டு கண்டம் தாவும் சுமார் 3000 கிமீகள் வரையில் செல்லக்கூடிய முசுடன் எனப்படும் ஏவுகணையையே வடகொரியா பயன்படுத்த போவதாக தென்கொரியா தெரித்தது.[11]
கொரிய தீபகற்ப இரு நாடுகளின் சுருக்க ஒப்பீடு
[தொகு]குறிகாட்டி | வட கொரியா | தென் கொரியா |
---|---|---|
தலைநகர் | பியோங்யாங் | சியோல் |
ஆட்சி மொழி | கொரியன் | |
அதிகாரபூர்வ உரைகள் | அங்குல் எழுத்துமுறை | கங்குல் |
அரசு | Juche ஒற்றை பரம்பரை-pஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ், உள்ள மாநிலம் | தாராளவாத ஜனநாயக அரசியலமைப்பு |
முறையான அறிவிப்பு | 9 செப்டம்பர் 1948 | 15 ஆகத்து 1948 |
பகுதி (km2) | 120,540 | 100,210 |
சனத்தொகை (2014/2013 est.) | 24,851,627 | 50,219,669 |
GDP மொத்தம் (பில்லியன் $, 2011/2014 est.) | 40 | 1755 |
GDP/தனிநபர் (ஆயிரம் $, 2011/2014 est.) | 1.8 | 34.777 |
நாணயம் | வடகொரிய வான் (₩) (KPW) | தென்கொரிய வொன் (₩) (KRW) |
தொலைபேசி குறியீடு | +850 | +82 |
இணைய குறி | .kp | .kr |
குறி | வலது | வலது |
செயல்மிகு இராணுவ அதிகாரிகள் | 1,106,000 | 639,000 |
இராணுவ செலவு(பில்லியன் $, 2010/2012) | 10 | 30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PopulationData.net: Asie
- ↑ Eastern Asia: Southern tip of the Korean Peninsula
- ↑ Korean Peninsula
- ↑ "Sediments Lining Southern Shores of South Korea". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ Korean Peninsula Explained
- ↑ Korean Peninsula | - LiquiSearch
- ↑ China – DPRK open new shipping route Friday, September 25th, 2015
- ↑ (LEAD) N. Korea shifts missile locations ahead of imminent launch: sources 2013/04/11 12:17 KST
- ↑ Chronology of U.S.-North Korean Nuclear and Missile Diplomacy Updated: May 2015
- ↑ The troops would conduct independent missions to target key military areas in North Korea By Elizabeth Shim | Sept. 23, 2015 at 9:58 AM
- ↑ அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்! உலகச் செய்திகள்| 07. 04. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 13:09
உப இணைப்புகள்
[தொகு]- அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்! வரைப்படிமம்
- கொரியத் தீபகற்பத்தின் வரைபடம்
- தென் கொரியா மீது அணு ஆயுத போர்? ராணுவத்தை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்ட வட கொரிய ஜனாதிபதி பரணிடப்பட்டது 2015-08-23 at the வந்தவழி இயந்திரம்
- தி இந்து கவலையடைய வைக்கிறது கொரிய தீபகற்பப் போக்கு! சிந்தனைக் களம் » தலையங்கம் Published: September 3, 2015 09:46 IST Updated: September 3, 2015 09:46 IST